சுந்தர் பசுபதி
பாட்டு கேட்டுவிட்டு
தனக்குள்ளே சிரித்ததற்கும் ,
காலணி மாற்றிப் போட்டு
தடுமாறி விழுந்ததற்கும் ,
நீளப் பின்னல் பார்த்துவிட்டு
கண்ணீர் கசிய கவிழ்ந்தததற்கும்,
புதுப்படத்து அரையிருட்டில்
கை தேடிக் கோர்த்ததற்கும்,
தலை சாய்த்து சிரித்தபோது
ஆகாயத்தில் வெறித்ததற்கும்,
‘கடிதம் நன்றாய் எழுதுகிறாய் ‘ என்றபோது
முகம் வறல தலை அசைத்ததற்கும்,
சிகை கோதி விளையாடினால்
சிலை போல் சமைந்ததற்கும் ,
அவளின் நினைவே காரணம் எனில்…
எனக்கான நினைவுக்காய்
என்ன உளது உன்னிடம்…
மனசு நுரைக்க ஸ்னேகித்து விட்டு
இன்று பிணமாய் என்னுடன்
கண்மூடி மோகிக்க..
உனக்கு இந்த வாழ்வெதற்கு. ? ?.
என் பிரியம் உனக்கு புரிய…
நானும் உனை பிரிய வேண்டும் எனில்….
அதற்கு நான் தயாரில்லை…
இன்னொரு முறை உன் மனம் கொன்று
எனக்கந்த பிரியம் வேண்டாம்…
என் பிரியம் நிஜமெனில் …
உனை உயிர்ப்பிக்கட்டும்…!!
***
- படித்தேனா நான் ?
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி
- ஆசையும் ஆத்திரமும் (எனக்குப் பிடித்த கதைகள்- 13 கு.அழகிரிசாமியின் ‘இரண்டு பெண்கள் ‘)
- பார்வை – நோபல் பரிசு பெற்ற யசுனாரி கவபட்டாவின் ஜப்பானிய நாவல் ‘தூங்கும் அழகிகள் இல்லம் ‘
- மொரீஷியஸ் பலாப்பழக்கறி
- ஷோர்பா (சூடான் நாட்டு ஆட்டு எலும்பு சூப்)
- கார்கோ கல்ட் அறிவியல் -1
- அறிவியல் மேதைகள்- அப்துல் கலாம் (Abdul Kalam)
- யுனைட்டட் லினக்ஸ் விண்டோசுக்கு மாற்றாக வருமா ?
- காலை நகரம்
- மழை.
- கானகம்
- மண்ணின் மகன்
- சிகரெட்டுகள்
- இப்படித்தான் அமைந்துவிட்டது வாழ்க்கை
- என்னவள் சொன்னது….
- தப்பிய கவனம்
- கார்கோ கல்ட் அறிவியல் -1
- கிருஸ்தவ மன்னிப்புக் கோரல் : பாசாங்கும் பம்மாத்தும்
- பாகிஸ்தானின் அணுகுண்டு தமிழ்நாட்டில் விழுந்தால் என்ன செய்வது ?
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி
- அறிவு (Knowledge)
- இந்த வாரம் இப்படி (சூன் 2, 2002) இடைத்தேர்தல்கள், முஷாரஃப் வாஜ்பாய், காஷ்மீர் மக்கள்