எனது கவிதைகளுக்காக ஓர் இருப்பிடம் தேடி…

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

வீ.அ.மணிமொழி


நான்
நேற்று…இன்று…
சேமித்து வைத்த கால்கள்
என்னை அறியாமலே
விட்டு விலகிச் சென்றன
புன்னகையுடன்…

* * *

எனக்கான இருப்பிடத்தைத் தேடுகிறேன்
கண்களையும் கால்களையும்
கட்டிக்கொண்டு…
மயான வீதியை நோக்கி…

* * *

ஒளித்து வைத்திருந்த
தனிமை…
தலையை நீட்டி
என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறது
எனக்கான மொழியில்…

* * *

இனி பார்ப்பதற்கு ஒன்றுமில்லை
எல்லாம்…
நான் சேமித்த ரகசியங்கள்.

அன்புடன்,

வீ.அ.மணிமொழி
மலேசியா

Series Navigation

வீ.அ.மணிமொழி

வீ.அ.மணிமொழி