பாரதிராமன்
முகம்
காற்றை எதிர்க்கிறது
எனவே
குளிர்ச்சி குவிகிறது
கடல்
சூரியனை எதிர்க்கிறது
எனவே
மழை பொழிகிறது
மரம்
மண்ணை எதிர்க்கிறது
எனவே
பசுமை பொங்குகிறது
கல்
உளியை எதிர்க்கிறது
எனவே
சிலை ஒளிர்கிறது
காற்று
குரல் வளையை எதிர்க்கிறது
எனவே
நாதம் எழுகிறது
இல்லாமை
தேவையை எதிர்க்கிறது
எனவே
உற்பத்தி தொடங்குகிறது
ஆசை
அறிவை எதிர்க்கிறது
எனவே
அரசியல் நடக்கிறது
கற்பனை
சிந்தனையை எதிர்க்கிறது
எனவே
கவிதை பிறக்கிறது
ஒன்று
மற்றொன்றை எதிர்க்கிறது
எனவே
வேறொன்று வேர் விடுகிறது
வாழ்க்கை
எதிர்ப்புகளை எதிர்க்கிறது
எனவே
வையம் வாழ்கிறது
- செக்குமாடு (குறுநாவல் கடைசிப்பகுதி)
- அஹிம்சையில் எதிர்ப்பு -1
- இந்த வாரம் இப்படி – சூலை 7, 2001
- நான் திரும்பி வரமாட்டேன்
- தொடர்ச்சியாய் சில தவறுகள்.
- நாட்டு நடப்பு
- நகரத்து மனிதாின் புலம்பல்
- எதிர்நிலைகள்
- எதிர் வினைகள்
- க்ரெக் மக்கா (McCaw) செய்த செல்லுலார் தொலைபேசி புரட்சி
- செவ்வாய்: ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரின் கதை
- நம் எதிர்காலத்தை புரட்சிகரமாக மாற்றும் ஒரு புதிய சில்லு(chip)
- காய்கறி சூப்
- எலும்பு சூப்
- ஜெயமோகனின் ‘கன்னியாகுமாி ‘