உள் முகம்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

நாவாந்துறைடானியல்ஜீவா


வள்ளத்திலிருந்து வானத்தைப் பார்த்தேன்.. ஆனால் வானவில்லின் அழகில் நான் தொலைந்து போகவில்லை. வாழ்க்கை அழகாய் இருந்து. நிலாக்காயும் நேரம் கடலேரியில் நீந்தி விளையாடினேன். ஏனோ இங்கு வந்ததிலிருந்து இந்த வாழ்நிலை எனக்கு ஒட்டாமல் ஒதுங்குகிறது. மீன் கூட எங்கட ஊர்க் கடலில் எங்கள் கைகளால் மீன் பிடித்து. குழம்பு ஆக்கி உண்பதில் ஒரு தனிச்சுவைதான். அந்தப் பொமுது இன்னெருமுறை வராதா என்று என்னைபே;பால் ஏக்கத்தோடு இந்த மண்ணில் எத்தனையோ பேர் வாழ்ந்து கொணடிருக்கிறார்கள். நலிந்த நம்பிக்கை மட்டுமே மிஞ்சிக் கிடக்கும் என் சொந்த வாழ்வில்; நிம்மதி மூச்சுவிட நெடும்தூரமா… ? தொடும் தூரமா… ?

விடிகாலைப் பொமுதில் எமுந்து. தேணீர் குடிப்பதற்காகத் தண்ணீர் றிரப்பிய கேற்றிரலை அடுப்பில் வைத்துவிட்டுக் கதிரையில் இருக்கும்பொமுது என் மனம் எங்கேயோ விரிந்து பரவுகிறது.

இப்படித்தான்ஒவ்வொரு நாளும் ஏதேனும் எண்ணம் வந்து என் மனத்தைக் குழப்பும். மனமோ நெருப்பைச் சுமந்து நிழல் தேடுகிறது. என் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் அர்த்தமற்று ஆரம்பிக்கிறது. அடிப்படையில் அம்மா கொஞ்சம் வயதாகி விட்டா. அந்த வயதிற்குாிய தன்மை மேலெழூந்து நிற்கிறது. அதை என் மனைவி ஏற்க மறுக்கிறாள்.

எத்தனை நாட்கள்தான் இப்படியே வாழ்வது…. ? நேற்றுக்கூட கென்னடி சப்வேயில் நின்றபோது. றெயில் தண்டவாளத்துக்குள்ளே விழூந்து சாகலாம்போல் இருந்தது. ஆனால் என் மனம் தற்கொலையைத் தடுத்தது. தள்ளாடுகிற வயதில் என் தந்தை கண் பார்வை குறைந்த அம்மா “அப்பா…அப்பா..” என்று அடிக்கொருதடவை என்னை அழைக்கும் பிள்ளைகள். என்னை நேசிக்கவில்லை யென்றாலும் நான் நேசிக்கும் என் மனைவி சுஜி. எல்லாவற்றையும் நினைத்து…

சொந்த மண்ணிலிருந்து வேரோடு வெளியேறி கொழூம்பில் வந்திருந்த. என் பெற்ரோரை நான்தான் ஒரு வருடத்திற்கு முன்பு இங்கு எடுத்தேன். என் அம்மாவைக் கண்டவுடன் என் மனைவி. தன் தாயின் சாயலில் வந்த தெய்வம் என்றாள். தெய்வம் இப்பமட்டும் சனியனாய் தொியுது அவளுக்கு. வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை வீட்டிற்குள் அடக்கி வைத்திருந்தால் போதுமென்று அவளிடம் அவ்வப்போது சொல்வதுண்டு. அதையும் மீறி அயலோடு தொலைபேசியில் முணுமுணுப்பதால் அக் கதைகள் என் காதில் விமுந்து என் மனதைக் குழப்புகின்றது. அமைதியும். பண்பும். நல்ல பழக்கமும் நிறைந்தவள் என்றுதான் அவளை நினைத்தேன் ஆனால் அவளோ விளங்காத வெளிச்சம்; பூாியாத மனிதப் பிறவி. மற்றவர்களின் உணர்வுகளோடு சீண்டி விளையாடுகிறவள்….

என் வேலைச்சுமை. அதனால் ஏற்படும் அழுத்தங்கள் அதையும் விட வீட்டில் எமும் பிரச்சனைகள் இவற்றையெல்லாம் தீர்ப்பதற்குள் என் உயிர் போய்விடும். என்னதான் இருந்தாலும் தாய் என்பது உலகத்தில் எல்லோரும் விரும்பும் வித்தியாசமான உறவு. பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் நேசிக்கும் உடல். அம்மாவையும் அப்பாவையும் வெளியேற்றி விட்டு எப்படி என்னால் வாழமுடியும்… ? நான் தான் முடித்த குற்றத்திற்காகச் சுமையை சுமக்க வேண்டும் என்றாள் அப்பா அம்மா என்ன குற்றம் பூாிந்தார்கள் இங்கு உத்தாிப்புஸ்தலத்தில் கிடந்து வேதனைப்பட…. விண்ணில் ஓடும் வெண்ணலவை மண்ணில் வாழும் என் மனைவிக்கல்லவா ஒப்பிட்டேன். அது கவிதைக்கு அழகாய் இருந்தது. ஆனால் வாழ்க்கைக்கு… ?

சின்னவளின் சிணுங்கல் முன்னறையிலிருந்து வந்தது. அம்மா எமுந்து குளியல் அறைப்பக்கமாக போய்க் கொண்டிருக்கையில். என் மனைவி எமுந்து குசினிப்பக்கமாக நானிருக்கும் இடத்திற்கு வந்தாள். இன்று சனிக்கிழமை என்றதால் மூத்தவளுக்கு ஸ்கூல் இல்லை. அதனால் கொஞ்சம் லேட்டாகத்தான் எமும்புவால். சின்னவள் என் மடியிலிருந்து விட்டாள். அப்படியிருந்து கொண்டே ஒவ்வொருத்தரும் கதைப்பதை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பாள். மூத்தவளைவ ிட சின்னவளே என்னோடு அதிக நேரம்

இருப்பாள.சில வேளையில் என் மடியில் இருப்பதற்குச் சண்டை பிடிப்பார்கள்.

கேற்றில் சத்தம் போட்டது. எழூந்து. அடுப்பை நிறுத்திவிட்டு தேநீர்; போடலாம் என்றால் பிள்ளை எமும்ப விடமாட்டாள் போல் இருந்தது. அதற்குள் சுஜி கேற்றிலை அடுப்பிலிருந்து எடுத்து விட்டு. தேத்தண்ணி போடுவதற்காக எதையோ தேடுகிறாள். பால் ஆகத்தான் இருக்கவேண்டும். பால் முடிந்தது கூட எனக்குச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் வேலை முடிந்து வரும்போது வாங்கி வந்திருப்பேன். பிறிட்சைத் திறந்து கொண்டிருந்த சுஜி தீடாரென என்னைப் பார்த்தாள். அவள் கண்களிலிருந்து மின்னல் தெறித்து என் நெஞ்சை தொட்டது. ஏதோ பிரச்சனை தொடங்கப்போகுதுபோல் தொிந்தது.

“ராத்திாி கொஞ்ச பால்தான் இருந்தது. விடிய பிள்ளைக்கும் உங்களுக்கும் தேத்தண்ணி போடக் காணும். நாளைக்கு வாங்கலாமெண்டு நினைக்க… அந்த கிழடி எடுத்துக் குடிச்சிட்டாள். நேரத்துக்கு நேரம்சாப்பாடு. அது போதாதெண்டு பாலையும் எடுத்துக் குடிச்சிட்டுது”என்று வார்த்தைகளை அள்ளி வீசினாள். சுஜியின் சுயரூபம் வெளியில் வந்தது. நான் மெளனித்து இருந்தேன்.அம்மா வோஸ் றூமிலிருந்து வெளியே வந்தா. சுஜிக்கு பதில் சொல்வதற்காகத்தான் வெளியில் வந்திருக்க வேணும்.

“உன்னோடு மல்லுக்கட் என்னால் ஏலாது. நான் ஒண்டும் சும்மா இருக்கேல்ல.றூமுக்கும் சாப்பாட்டுக்கும் காசு குடுத்துத்தான் இருக்கிறன்….”

அம்மா சொன்ன சொற்கள் அவளுக்குச் சுட்டது. அவளின் அசைவில் தொிந்தது. எப்போதும் கோபப்படும்போது அவளுடைய உள்ளத்திலும் உடலிலும் நிறைய மாற்றம் நிகழ்ந்து விடும். விளக்கெண்ணெய் குடிச்ச கோழி போலத் திாிவாள். அந்த வேளையில் யார் என்ன சொன்னாலும் காதில் விழாது. இருக்கிற தளபாடங்களோடு தன் கோபத்தைக் காட்டுவாள். இல்லையென்றால் காரணமில்லாமலே பிள்ளையை அடிப்பாள். அப்படிக் கோபம் வரும்போது நான் பேசாமல் ஒதுங்கிவிடுவேன். ஒதுங்கலாம் என்றுதான் மெளனமாக இருந்தேன். ஆனாலும் என் மனம் ஏதாவது சொல்லவேணும்போல் தூண்டியது.

“சுஜி கொஞ்சம் வாயைத்தான் குறையேன்” என்றேன்.

“ஓம்…ஓம்… அம்மாவுக்கு வக்காளத்து வாங்க வந்திட்டார். எனக்கு முதலே தெரியாமல் போயிற்று உன்ர குணம் தொிந்திருந்தால் செய்திருக்க மாட்டேன். என்ர சாதி. சமயம். அந்தஸ்து பாராமல் உன்னை முடிச்சதுதான் பிழையாய் போயிற்று….” அவள் என் காது கிழியத் கத்தினாள்.

என் மனமோ கடந்த மாத நிகழ்வுக்குள் ழூழ்கியது. சுஜியின் சொந்தச் சகோதரனின் மனைவி கொழூம்பிலே நின்று எத்தனை போிடம் சொல்லியிருப்பாள்… ஒருக்கா சுஜியை எடுக்கச் சொல்லுங்கோஎன்று. சுஜி கடைசிவடை ரெலிபோன் எடுக்கவேயில்லை. பாவம் அந்த அக்கா. கண்ணிலே ஏதோ சுகமில்லையெண்டு ஒப்பிரேசன் செய்ய கொமும்புக்கு வந்தவ என்று இங்கு இருக்கிற சுஜியின் சொந்தக்காராகள் சொன்னார்கள். நானும் சுஜிக்கு சொல்ல வேண்டுமென்பதற்காக;

“சுஜி உங்கட அண்ணி கண்ணல சுகமில்லையாமென்று கொமும்புக்கு வந்திருக்கிறா. நம்மால முடிஞ்சதைக் குடுப்பம என்றேன். பதிலுக்கு “அவள் உழைச்சுத் தந்த திறத்தில காசு என்னட்ட இருக்குதாக்கும். அவ இப்ப கண்ணெங்குவா… என்னொரு மாதத்தாலே காதைவச் சாட்டிக் கொண்டு வருவா குடுத்துக் கொண்டிரன். நீ முதல்ல நைட்வேலை ஒண்டு பார்”என்றாள்.

“சுஜி நான் தானே ஏமுநாளும் வேலை செய்யிறன். வெள்ளியும். சனியும். ஞாயிறும் இரவு பன்னிரண்டு மணியாகுது வேலை முடிஞ்சுவர. இதைவிட இரண்டு வேலை பாரெண்டால் நானென்ன மனிதனா… மாடா ? இரண்டு கிழமைக்கொருக்கா சம்பளச் செக்கை உன்னட்டத்தான் தாறன். நீ காசை என்ன செய்யிறாய் எண்டுகூட எனக்குத் தொியாது. அந்தக் காசல் மிச்சம்ஏதாவதுபிடிச்சென்றாலும்.கொமும்புக்குவர்றபிறத்தியாக்களைத்தான் விடு உங்கட சொந்தக்காரருக்காவது குடுக்கலாம் தானே. கொஞ்சம் கூட உண்ர்வில்லாமல் நடந்து கொள்ளுறாய்~~ என்று சொல்லி முடிப்பதற்குள்… சுஜி புருவம் உயர்த்தி ஒருதடவை என்னைப் பார்த்தாள். முகம் சட்டென மாறியதை அவதானித்தேன். சுஜி முழங்கத் தொடங்கினாள். நெஞ்சு வெடிக்க வார்த்தைகளைக்கொட்;டினாள்.

உன்ர அம்மா கொமும்பிலிந்து காசு அறுத்து முடிஞ்சுது. இப்ப இவியள் தொங்கிட்டினம். எங்களை விட்டதியாய் இருக்க விடுறாய்களில்ல. ரெண்டு பிள்ளையையும் தெருவிலா விடுறது. கார் எடுக்க. வீடு வாங்க காசுக்கு யாாிட்ட போறது… அல்லதுஅதுக்காக யாரையும் வச்சிருக்கவா~~ என்றாள்.

விக்கித்துப் போனேன். திக்குமுக்காடினேன்… அதற்கு மேல் எதுவும் கதைக்கவில்லை. கணப்பொழூதிற்குள் கடந்தமாத நிகழ்விலிருந்து மனம் விடுபடடது.

சின்னவள் மடியிலிருந்து இறங்கி சுஜியிடம் போனாள். அம்மாவின் முகம் வாடிக் கிடந்தது. அப்பா இன்னும் அறையை விட்டு எழூந்து வெளியில் வரவில்லை;. சில வேலையில் எழூம்பியிருந்தாலும் சண்டையின் சத்தம் கேட்டு கேட்டு வெளியில் வரமாட்மார். பயத்தினால் அல்ல. மாியாதைக்காக ஒதுங்கிக்கொள்வார். அம்மா கொஞ்சம் வாயென்றாலும் அம்மாவின் வார்த்தைகளுக்கு அடக்கமாக அப்பா பதில் சொல்வார். அப்பா எப்போதாவது கோபப்பட்டதை நான் கண்டதில்லை. அம்மாவோடு சண்டைகூடப் பிடிப்பதில்லை. என்னுடைய பழக்கவழக்கங்களில் அரைவாசிக்கு மேல் அப்பாவிடம் கற்றுக்கொண்டதுதான். என்ன பிச்சனையென்றாலும் அவர்தான் புத்திமதி கூறுவார். நான் பொறுமையோடு வாழ்வதற்கெல்லாம் அப்பா சொல்லித்தந்தவைதான் காரணம். மொத்தத்தில் அப்பாதான் என் வாழ்கையின் வழிகாட்டி.

“தம்பி எங்க இரண்டு பேரையும் ஊருக்கு அனுப்பிவிடு மோனை. அவள் சின்னவள் விஜியாவோடு கஞ்சியைக்; கூழக் குடிச்சு மாியாதையோடு வாழலாம். இஞ்சயிருந்து ஒவ்வொரு நாளும் குட்டுப்பட்டுக் கொண்டு இருக்கேலாது…”

“அம்மா என்ர உயிர் போனாலும் உங்களை ஊருக்கு அனுப்பமாட்டேன். விஜியாவை இங்க எடுக்கலாமெண்டுதான் நினைச்சேன். அதுகூட சாிசரல்ல. அவள் வரும் வரைக்காவது எங்களோட இரன்… அம்மா நீங்கள் எங்களை எப்படி வளத்தீங்கள் என்று எனக்குத்தான் தொியும். ஆனால் உன்ர மருமகளுக்கு அது தொியாது. அப்படித்தான் என்ர சுஜி ஏதும் பிழையாய் கதைச்சா என்னை மன்னிச்சு கொள்ளன்.”

“எட மோனை உன்ர குணத்திற்கு இப்படியொரு பொம்பிளை கிடைச்சிருக்கே… அதை நினைச்சாத்தான் கவலையாக இருக்குது…”

“ஓம்… ஓமோம்… எனக்கில்லாத கவலை உனக்குத்தான் வந்திருக்கோ…இதை முடிக்கேக்கு முதல் தான் நினைச்சுருக்கவேண்டும் இப்ப கதைச்சுப் பிாியோசனம் இல்ல….” என்றாள் சுஜி.

அடம்பிடிப்பதும் அவசரத்தில் வார்த்தைகளை அள்ளி வீசவதும் அன்றாட வாழ்க்கையாகப் போயிற்று அவளுக்கு அப்படிப் பிழை விட்டாலும் அதற்காக ஒருதடவையேனும் மனதார கவலைப்படுவதும் கிடையாது. என்ன செய்தாலும் சொன்னாலும் தன்னுடைய பக்கமே சாியென்று நினைப்பாள். அவளுடைய மனத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகப் பலதடவை முயற்வித்தேன். முடியாமல் போயிற்று. அவளுக்கென்றொரு கொள்கையை வைத்துக்கொணடு வாழ்ந்து வருகிறாள். என் நினைவு. கனவு எல்லாம் அவவைப் பற்றியதுதான். எங்களுக்குள் பிாிவு என்றொரு நிகழ்வு நிக்ழ்ந்து விடக்கூடாது. சிலவேவையில் மனமுடைந்து தந்கொலையே செய்யலாம்போல் தோன்றி மறையும்.

இன்னொரு வைகறைக்காக ஏங்கும் எமது மண்ணில் இவ்வளவு தூரம் பிச்சனைகள் எமுவதில்லை. அப்படி எமுந்தாலும் மறுபொழூதோடு மறைந்து போய்விடும். அந்த மண்ணோடு ஒட்டிய வாழ்வை இப்பொழூது நினைத்தாலும் சிலவேளை கவலைப்படுவேன். வெள்ளாப்போடு எழூந்து விடுவலைக்குப் போயிற்று வரும் தொழிலாளர்களோடு ஒருவனாய் ஒரு காலத்தில் கைகுலுக்கி வாழ்ந்தேன். வறுமை எங்களைப்போர்த்தியபோதும் வாழ்நிலம் வெறுமை போர்க்கவில்லை. நெஞ்சினில் கனவுகளைச் சுமந்தபோதும் கண்கள் ஏனோ கலங்குவதில்லை. கவலை என்ற சொல்லுக்கே இடமில்லை. இங்க வாழ்கின்ற ஒவ்வொரு பொழூதும் இணக்கம் காணமுடியாத பிரச்சனைகள் எழூகின்றன.ஆயினும் நானைய வாழ்வுக்காக நம்பிக்கையை விதைக்கிறோம். நினைவிலிருந்து விடுபட்ட கணமே சுஜியைப் பார்த்துக்கொண்டு;

“சுஜி அப்படியென்றால் நான் அம்மாவுக்காக வக்காளத்து வாங்குகிறேன் என்றே வைத்துக்கொள். உன்ர பிடிவாதத்திலிருந்து ஒருதளியும் இறய்கி வருவதாகத் தொியேல்ல அப்ப என்னண்டுதான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது… ? உன்னட்ட ஏதாவது ஜடியா இருந்தா சொல்லு”என்றேன்.

நான் சொன்னதைக் கேட்டு மெளனமாக நின்றாள். ஏதோ மனத்துக்குள் நினைத்துக் கொண்டு கண்ணை மேலேயும் கீழேயுமாக உருட்டிப் பார்த்துத்துக் கொண்டிருந்தாள்.

நான் சின்னவளை மடியிலிருந்து இறக்கிவிட்டேன். வேலைக்கு நேரமாயிற்று சலனத்தோடு விடை பெற முயல்கின்றது மனசு….

யக்கற்றையும் சூவையும் போட்டுக் கொண்டு வெளியே இறங்கினேன். திடாரென ஓடிவந்தாள் சுஜி. வந்த வேகத்தில் அவளுடைய மூச்சுக் காற்று என்னில் விழுந்து சிதறியது. அவள்முகத்தில் ஆனந்தம் களைகட்டியது. என்றுமில்லாதவாறு பளிச்சென்று இருந்தது அவள் கன்னம்.

“இங்கெரப்பா நான் கேட்கிறேன் என்று குறை நினைக்காதைங்க. நம்மட குடும்பத்தில் பிரச்சனை வராத மாதிாிக்கு ஒரு ஜடியா இருக்கு. அதை நீங்க நினைச்சா செய்யலாம்”என்றாள் சுஜி.

என்ன சொல்லப்போறாள் சுஜி… இவ்வளவு நாளும் என் மூளைக்கு எட்டாமல் போய்விட்டதைக் கண்டுபிடித்து விட்டாளோ… ?ஆழமாய் யோசித்து முடிவெடுத்தவள்போல் நின்றாள்.

“இங்கெரப்பா நாள் சொல்றன் எண்டு குறை நினைக்க வேண்டாம் நான் என்ர மனசில் பட்டதை சொல்றன்….இங்க கிடக்ககிற இரண்டு கிழடுகளையும் வெளியில் கலையுங்க ….ஒரு பிரச்சினையும் வராது” என்றாள்.நான் விக்கித்துப்போனேன். “யாரைச்சொல்றியல்…. ? என் அப்பாவையும் அம்மாவையும் அனாதைகளைப்போல வெளியில அனுப்ப நினைக்கிறீயா ? சாி உனக்காக அதையும் விட்டுத்தாறன்…. நான்வேலையால் வந்தவுடன் என்ர சினேகிதன் சக்தியின்ர வீட்டில் அம்மாவையும் அப்பாவையும் கொண்டு விடுறன்” என்றான்.

லொத்தா விழுந்த சந்தோசம் அவள் முகத்தில் படர்ந்தது.

(முற்றும்)

daniel.jeeva@rogers.com

Series Navigation

நாவாந்துறைடானியல்ஜீவா

நாவாந்துறைடானியல்ஜீவா