உலக வங்கி சிபாரிசு : சீனாவிற்கு மாட்டுக் கறி

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

ப்ராட் எட்மண்ட்ஸன்


சீனாவின் பாரம்பரிய உணவு உடம்புக்கு நல்லது. அரிசியும், காய்கறியும் கொண்டது. சிறிது மாமிசம் உண்டு. ஆனால் பால்தொடர்பான பொருட்கள் இல்லை. மேநாடுகளில் பரவலாய்க் காணப்படும் இதய நோய்களும் சீனாவில் அரிது. சீனர்களின் சராசரி உயிர் வாழ்க்கை வயது 70 வருடங்கள் – உலக சராசரியை விட இரண்டு வருடங்கள் அதிகம். உலக வங்கி இப்போது மாட்டுக்கறியையும், பால் கிரிம்களையும் சீனாவில் பயன்படுத்த வற்புறுத்தத் தொடங்கிவிட்டது.

டிசம்பர் 1999-ல் உலக வங்கி 93.5 மில்லியன் டாலர்கள் கடன் வழங்கியது. எதற்காக ? 130 மாட்டுஅ லாயங்களையும், ஐந்து பதப்படுத்தும் மையங்களையும் கட்டுவதற்காக. பல கணக்கீடுகளின் படி ஒரு பவுண்ட் மாட்டுக்கறி தயாரிக்க 360 காலன் தண்ணிரும் ஐந்து முதல் எட்டு பவுண்டு தானியமும் தேவை.

சீனாவின் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இந்தக் கடன் உதவும் என்பது உலக வங்கியின் சாக்கு. சீனாவின் நடுத்தர வர்க்கத்தின் உணவுப் பழக்கம் மாட்டுக் கறிக்கான தேவையை அதிகரித்து வருகிறது. செல்வச்செழிப்பு மேநாட்டு உணவுப் பழக்கத்தில் தான் வெளிப்பட வேண்டுமா என்று பலரும் கேள்வி கேட்கின்றனர். சியரா சங்கம் (சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்காகப் போராடும் ஓர் அமைப்பு) , பொறுப்புள்ள மருத்துவத்திற்காக போராடும் மருத்துவர்களின் அமைப்பு, மிருக வதைத் தடுப்புச் சங்கம் ஆகியவை இதை எதிர்க்கின்றன.

மற்ற வளரும் நாடுகளுக்கு சீனா உதாரணமாய்த் திகழ வேண்டும் என்று உடல் நல வல்லுனர்கள் விரும்புகிறார்கள். மற்ற வலர்ந்த நாடுகள் மெற்கொண்ட உடல்நலத் தவறுகளை சீனா போன்ற வளருஇம் நாடுகள் செய்யக் கூடாது என்று வாதிடுகிறார்கள். புகையிலையின் பரந்த உபயோகத்தைத் தடுப்பது அவர்கள் முக்கிய நோக்கம். மிருகக் கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பதையும் அவர்கள் வேண்டுகிறார்கள்.

பொருளாதார வளர்ச்சியின் பக்க விளைவு ‘உடல்நல மாறுதல்கள் ‘. 1900-ல் அமெரிக்காவில் 40 சதவீத மரணங்கள் 11 ஒட்டுவாரொட்டி நோய்களினால் ஏற்பட்டது – டைஃபாயிட், அம்மை, நிமோனியா போன்றவை அந்த வியாதிகள். புற்றுநோய், இதயநோய் போன்றவற்றால் 16 சதவீத மரணங்கள் அப்போது நிகழ்ந்தன. காலம் மாறிய போது இதுவும் மாறியது. 1973-ல் ஒட்டுவாரொஇட்டி நோய்களால் அமெரிக்க மரணங்கள் வெறும் 6 சதவீதமே. ஆனால 58 சதவீத மரணங்கள் மூன்று வெகுநாட்பட்ட இதயநோய் புற்று நோய் போன்ற வியாதிகளால் ஏற்பட்டன. ஆய்வுகளின் படி உடல்நலம் முன்னேற்றம் பெற்றது மருத்துவத் தொழில் நுட்ப முன்னேற்றத்தினால் சிறிதளவே. பெருமளவு முன்னேற்றம் உணவுத் தூய்மை, நீர்த்தூய்மை, சுற்றுப்புறச் சூழல் தூய்மையால் ஏற்பட்டதே.

1980-களின் நடுவிலும், 1990களின் நடுவிலும் அமெரிக்க சீனா ஆய்வாளர்கள் காம்ப்பெல் தலைமையில் சீனாவின் உடல்நல மாற்றத்தைப் பற்றி ஆய்வு செய்தார்கள். சில மரணங்களின் காரணம் ஏழ்மை என்றால் சில மரணங்களின் காரணம் செல்வச் செழிப்பு என்று குறித்தார்கள். எழ்மையின் நோய்கள் : நிமோனியா, டி பி போன்றவை. புற்றுநோய்களும், இதய நோய்களும் செல்வத்தின் நோய்கள். சீனர்களின் புகைபிடிக்கும் பழக்கமும், சர்க்கரை, கொழுப்புச் சத்துகள் அதிகமுள்ள உணவு உட்கொண்டு செழிப்பின் நோய்களுக்கு சீனர்கள் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று கண்டார்கள்.

1998-ல் இன்னொரு ஆய்வு சீனாவின் உடல் நல மாற்றத்தை விவாதிக்கச் செய்தது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ரிச்சர்ட் பெடோ செய்த இந்த ஆய்வின் படி : புகையிலை, ஆண்களின் மரணங்களில் 13 சதவீத மரணங்களுக்குக் காரணமாய் இருக்கிறது. இந்த புகை பிடிக்கும் பழக்கம் இதே போல் தொடர்ந்தால் 33 சதவீத மரணங்களுக்குக் காரணமாகும். (பெண்கள் புகை பிடிப்பது குறைவு. சமீப காலங்களில் குறையவும் செய்தது.) சீன ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 25 வயதுக்கு முன்பே புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டு விடுகின்றனர். இந்த புகை பிடிப்பவர்களில் பாதிப் பேர் மரணத்திற்கு புகையிலை காரணமாகி விடும். அமெரிக்கர்களைப் போலவே இவர்கள் புகை பிடிக்க, குடிக்க, உணவு அருந்த முற்பட்டால், அமெரிக்கர்களைப் போலவே மரணமுறுவார்கள்.

எதை உண்பது எதை குடிப்பது என்பது வயதுவந்தவர்களின் தேர்விற்கு விட்டுவிட வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும், பொதுமக்கள் நலனை நோக்கிய கொள்கைகள் உருப்பெற வேண்டும் என்று பலர் உலக வங்கியை விமர்சிக்கிறார்கள். 1991-ல் புகையிலை விவசாயத்திற்கு கடன் தருவதை உலக வங்கி நிறுத்திவிட்டது. ஆனால் மாமிச உற்பத்திக்குக் கடன் கொடுப்பதைத் தொடர்ந்து செய்கிறது.

சீனாவில் புகையிலை எதிர்ப்பாளரான ஜ்உடித் மக்கே சொல்கிறார்: உடல நலம் பற்றிய கல்வியையும், புகையிலை உபயோகத்தைக் கட்டுப் படுத்தும் கொள்கையையும் பரவலாய்க் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இஇதைக் கைக்கொள்ளாவிட்டால், அமெரிக்காவின் இன்றைய பிரசினைகள் சீனாவின் நாளைய பிரசினைகள் ஆகிவிடும். புகையிலை மற்றும் மாமிசத் தொழிற்சாலைகள் அரசாங்கம், ஊடகங்கள், பொது ஜனக் கருத்து இவற்றை மோசமாகப் பாதிக்கும் அளவு செல்வாக்குச் செலுத்தும். புற்று நோய், இத நோய் பரவும். நுகர்பொருளுக்கு வெறும் சந்தையாகாமல், உடல் நலம் பேணும் சமூகங்களாகவும் வளரும் நாடுகள் உருவாக வேண்டும்.

***

Series Navigation

ப்ராட் எட்மண்ட்ஸன்

ப்ராட் எட்மண்ட்ஸன்