இரண்டு செய்திகள்

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue


1.பொன்னீலனின் தாயாரும் ‘கவலை ‘ தன்வரலாற்று நாவலின் ஆசிரியருமான அழகியநாயகி அம்மாள் சென்ற மாதம் 17 அன்று மரணமடைந்தார். வயது 85.இந்த வாழ்க்கைக் குறிப்புகளை அவர் 1970 கலிலேயே எழுதிவிட்டார்.அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரசுரிக்கும் படி சுந்தர ராமசாமி வலியுருத்திவந்தார்.அவரது வீட்டில் இக்குறிப்பை நான் பார்த்ததுண்டு.பலகாலம் கழிந்து சி மோகனால் செப்பமிடப்பட்டு பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் சார்பில் இது வெளியிடப்பட்டது .பொன்னீலனை அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தேன் .உங்களுக்கு விஷயம் தெரியும் என நினைத்தேன்.திண்னையில் காணவில்லை என்பதனால் இக்கடிதம்.

2.பாமா எழுதிய கருக்கு என்ற தன் வரலாற்று நாவலுக்கு கிராஸ் வேர்ட் பரிசு கிடைத்துள்ளது.இந்திய ஆங்கில நாவலுக்கும் ஒரு மொழிபெயர்ப்பு நாவலுக்கும் தரப்படும் இப்பரிசு இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய பரிசுகளில் ஒன்று .[ரூ ஒன்றரை லட்சம்] கருக்கு மதுரை தலித் ஆய்வுமையத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. பாமாவின் கிறிஸ்தவ துறவுலக வாழ்க்கை பற்றியது.மொழிபெயர்த்தவர் லட்சுமி ஆம்ஸ்டம் .பாமா ராஜ் கெளதமனின் தங்கை.

செய்தி – ஜெயமோகன்

Series Navigation