இப்னுபஷீரின் சிரிப்பு

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

கார்கில் ஜெய்


முன் குறிப்பு: இந்த எதிர்வினை நல்ல கோர்வையான கட்டுரை வடிவில் இல்லாததற்கு திண்ணை வாசகர்கள் மன்னிக்கவும். இதற்குக் காரணம் நான் கட்டுரை வடிவில் போனமாதம் எழுதிய எதற்கும் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803209&edition_id=20080320&format=html) இப்னுபஷீர் பதில் கூறாததே. அவருக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதனால் எளிதாக இலக்கமிட்ட கேள்விகளாகவே கேட்டுள்ளேன். இதற்காகவாவது (பதினான்கு கேள்விகளுக்கும்) பதில் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்னுபஷீரின் சிரிப்பு :
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80804104&format=html

இப்னுபஷீர் எழுதியது : //இந்த வாரம் மனதார சிரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திண்ணை வாசகர்கள் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வாய்ப்பை தந்த மலர் மன்னனுக்கு நன்றி!//

இப்னுபஷீரின் சிரிப்புக்கு காரணம் என்ன என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை. ஒரு இனிய மாலைப்பொழுதில் நாம் எல்லாரும் திண்ணையில் கூட்டமாக உட்கார்ந்து சில அறிஞர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருப்பதாகக் கொள்வோம். மலர் மன்னன் ஒரு முக்கிய பிரச்னை பற்றி பேசுகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். அதற்கு முன் வஹ்ஹாபி ‘உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் முஸ்லீமாகவே பிறக்கிறது’ என்று சொல்லி சொற்பொழிவை முடித்துக் கொள்கிறார்.

கேள்வி 1) வஹ்ஹாபி பேசியபோது சிரிக்காத இப்னுபஷீர் பின்னர் மலர் மன்னனின் நேரான பேச்சை கேட்டு ‘மனதார சிரித்தால்’ அந்த கூட்டத்தில் இருப்போர் இப்னுபஷீரை ‘ஒரு மாதிரி’யாக நினைக்க மாட்டார்களா?

இப்னுபஷீர் எழுதியது : // ‘மாயூரம்’ என்று சொல்வது ஏன் இழிவுக் குறிப்பாகத் தோன்றுகிறது என்பதை அறிவுப் பூர்வமாக ஆதாரங்களுடன் விளக்குங்களேன் பார்க்கலாம்’ என்று யாரும் விதண்டாவாதம் செய்து கொண்டிருக்க மாட்டார்கள்! //

கேள்வி சுதந்திரத்தின் காரணமாக ‘`ஏன் “மாயவரம் (அ) மாயூரம்” என்றழைப்பதில் என்ன இழிவு?’ என யார் வேண்டுமானாலும் கேட்கலாம். பெயரை மாற்ற கோரியவர்கள் விளக்கமளிக்கத்தான் வேண்டும்.
மாயவரம் = மாய + வரம் => மாய்வதற்கான + வரம் => இறப்பதற்கான வரம் என்றாகிறது. வாழும் இடத்தை மாயும் இடமாக சொல்லுதல் இழிவே — என்பதே மாற்ற கோரியவர்களின் விளக்கம்.

கேள்வி 2) அதேபோல் ஏன் ‘முகமதியர்’ என்னும் பெயர் இழிவானது என விளக்க இப்னுபஷீர் விளக்க முடியுமா? முகமதியர் என்னும் பெயர் இழிவானது இல்லை என்றால் இப்னுபஷீர் ஏன் மாற்றக் கோருகிறார் ?

கேள்வி 3) மயூரம் என்பதன் திரிபே மாயூரமும் மாயவரமும். மயூரத்தின் திரிபானதால்தான் ‘மாயவரம்’ என்பது தவறு. எதன் திரிபானதால் ‘முகமதியர்’ என்பது தவறு என இப்னுபஷீர் விளக்குவாரா?

இப்னுபஷீர் எழுதியது : //மாயூரம் போலவே,
பாம்பே மும்பை ஆகிவிட்டது
மெட்றாஸ் சென்னை ஆகிவிட்டது//
மெட்றாஸ், பாம்பே தவறு; ‘மும்பாதேவி’யால் மும்பை என்பதும், ‘சென்னபுரிஅம்ம’னால் -சென்னை என்பதுமே சரி என்று உதாரணம் காட்டுகிறார் இப்னு பஷீர்.
கேள்வி 4) அதேபோல் பார்த்தால் ‘முகம்மது’வை பின்பற்றுபவர்களை ‘முகம்மதியர்’ எனபதுதானே சரி? இதை மட்டும் ஏன் இப்னுபஷீரால் ஏற்க முடியவில்லை?

இப்னுபஷீர் எழுதியது : // ‘முகமதியன்’ என்று திரித்து திருகுதாளம் செய்தவர் இதே மலர் மன்னன் தான். //, //ஆங்கிலேயர்களாலும் இந்துத்துவவாதிகளாலும் முஸ்லிம்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட பெயர் இது.//
வேறு ஒரு அகராதியில் ‘விரும்பாத சொல்’ என குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒட்டு மொத்தமாக பின்வரும் இந்த மூன்று உதாரணங்களும் ‘முகமதியன்’ என்பதே மிகச்சரியான சொல் என உறுதியாக்குகின்றன : இஸ்லாத்தை பற்றி மிக உயர்வாக சித்தரிக்கும் ஒரு புத்தகத்தின் பெயரே ‘முகம்மதனிஸ்ம்’ தான் ( http://www.amazon.com/Mohammedanism-H-R-Gibb/dp/0195002458 ) . மெரியம் வெப்ஸ்டரின் ஆங்கில அகராதி 1681- ல் இருந்து ‘முகம்மதன்’ என்ற வார்த்தை கையாளப்படுவதை உறுதிப்படுத்துகிறது. http://www.merriam-webster.com/dictionary/Mohammedan. அது வசைச் சொல் என மெரியம் வெப்ஸ்டரின் அகராதியில் குறிப்பிடப் படவில்லை. விளையாட்டில் கூட மதத்தை முன்வைத்து ‘முகம்மதன் ஸ்போர்ட்டிங்’ (1891) http://www.mdsportingclub.com/ என்று பெருமை கொண்டோரும் முஸ்லீம்களே.
கேள்வி 5) ‘மொகம்மதன் ஸ்போர்ட்டிங்’ என பலவந்தமாக பெயர் வைத்தது இந்துத்துவவாதிகளா? அப்படியானால் ஏன் இன்னும் அதை மாற்றவில்லை?
கேள்வி 6) 118 வருடங்களாக, கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் மொகம்மதன் ஸ்போர்ட்டிங் மேல் காண்பிக்க வேண்டிய கோபத்தை, இப்போது ‘முகமதியன்’ என்று பெருமைப்படுத்தும் மலர்மன்னன் மேலும், நேசகுமார் மேலும் ஏதோ இப்போதுதான் நடப்பது போல் ஏன் காண்பிக்க வேண்டும்?

இப்னுபஷீர் எழுதியது : // காந்திஜியே ‘முகமதியர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினாரா, அல்லது அவர் ஹிந்தியிலோ குஜராத்தியிலோ எழுதியது மொழி மாற்றம் செய்கையில் ‘முகமதியர்’ என்று மாறியதா என்பதை தெரிந்து கொள்ள இயலவில்லை. அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பிருப்பதையும் மறுப்பதற்கில்லை. காந்திஜி Mussalman என்று எழுதியதை தமிழாக்கம் செய்கையில் ‘முகமதியன்’ என்று திரித்து திருகுதாளம் செய்தவர் இதே மலர் மன்னன் தான். (சுட்டி 2)
ராமச்சந்திர குஹா தனது கட்டுரையில் காந்திஜி 1928-ல் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். (மலர்மன்னன் கண்ணில் இது படவில்லை போலும்!)
“We can only pray, if we are Hindus, not that a Christian should become a Hindu, or if we are Mussalmans, not that a Hindu or a Christian should become a Mussalman, nor should we even secretly pray that anyone should be converted [to our faith], but our inmost prayer should be that a Hindu should be a better Hindu, a Muslim a better Muslim and a Christian a better Christian. That is the fundamental truth of fellowship.”//
கேள்வி 7) மொழியாக்கத்தின் போது வரலாற்றாசிரியர்கள் ‘முகமதியர்’ என்று இலகுவாக மாற்றினார்கள் என்றால் ‘முகமதியர் ‘ எனும் பதம் இயல்பானது என்றுதானே பொருள்?
கேள்வி 8) மிக சாதரணமாக பாரதியையும், சுஜாதாவையும் திரிபுவாதிகள் என்று போனமாதம் ஆதாரமின்றி எழுதிய இப்னுபஷீர் இப்போது மலர்மன்னனையும் திரிபுவாதி என்கிறார். இவ்வாறு நாகாக்காமல் எல்லாரையும் ஏசுதல் நாகரீமான, ஆரோக்கியமான செயலா?
கேள்வி 9) ‘மலர்மன்னன் கண்ணில் இது படவில்லை போலும்’ என்று சொல்லும் இப்னுபஷீர் கண்ணில் காந்தி முகமதியர் என்று ஆங்கிலத்தில் எழுதியது படவேயில்லையா?
கேள்வி 10) மேலும் ஆங்கிலத்தில் மொழியாக்கத்தின் போதுதான் எல்லா ஆசிரியர்களும் தவறாக முகமதியர் என மாற்றியிருக்கக்கூடும் என்றால், அது போன்ற ஆசிரியர்களில் ஒருவரான இப்னுபஷீர் குறிப்பிட்ட ‘ ராமச்சந்திர குஹா ‘ வும் காந்தியார் ‘முகமதியர்’ என்று குறிப்பிட்டதை மாற்றி ‘Mussalman’ என்று எழுதியிருக் கக்கூடும் அல்லவா?

கேள்வி 11) ‘முகமதியர் என்னும் சொல் வசையோ அல்லது இழிவானதோ இல்லையே?, முஸ்லிம்களை முகமதியர் என்று குறிப்பிடுவது எதனால் அவர்களுக்கு இழிவுக் குறிப்பாகத் தோன்றுகிறது?’ — என்று அறிவுப் பூர்வமாக விளக்கினால் அதைப் பயன் படுத்துவதை நிறுத்திவிடலாம் என்றார் மலர்மன்னன். அது இழிவான சொல் என நிரூபிப்பதற்கு பதிலாக, கடைசியில் நான்கு பத்திகளிலும் ‘முகம்மதியர் என்பது இழிவோ, வசையோ இல்லவே இல்லை’ என்று அதே கருத்தைத்தான் இப்னுபஷீரும் சொல்லி நிறைவு செய்து இருக்கிறார். அதற்கு எதற்கு கட்டுரை எழுதினார்?

இப்னுபஷீர் எழுதியது : //முகமதியர்/முகமதியம் ஆகிய இரு சொற்களும் முஸ்லிம்களைக் காயப் படுத்துவதற்காக ஆளப்படும் (both are considered offensive) சொற்கள் என்பதுதான் உண்மை. – வஹ்ஹாபி (சுட்டி 3)
‘முகமதியர்’ என்ற பதம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே பயன்படுத்தப் பட்டதில்லை. ஆங்கிலேயர்களாலும் இந்துத்துவவாதிகளாலும் முஸ்லிம்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட பெயர் இது. இது வசைச் சொல் அல்ல என்ற போதிலும் முஸ்லிம்களின் அடையாளத்தை சிதைக்கும் முயற்சி என்பதாலேயே முஸ்லிம்கள் இந்த வார்த்தைப் பிரயோகத்தை எதிர்க்கின்றனர். – இப்னுபஷீர் (சுட்டி 4)//

கேள்வி 12) இப்னுபஷீரே ‘இது வசைச்சொல் அல்ல; இழிவானதும் இல்லையே?’ எனும்போது, வஹ்ஹாபி ‘முஸ்லிம்களைக் காயப் படுத்துவதற்காக ஆளப்படும் சொல்’ என்று கூறுவது முரணாகவில்லையா? இப்படி முரணாகப் பேசும் வஹ்ஹாபியைத்தானே குறைசொல்ல வேண்டும்? அதற்குப் பதிலாக ‘அது இழிசொல் இல்லை’ என்று இப்னுபஷீருடன் ஒப்புக்கொள்ளும் மலர்மன்னனையும், நேசகுமாரையும் குறைசொன்னால் இதைப்படிக்கும் திண்ணை வாசகர்கள் இப்பெருங் குழப்பத்தினால் மனநலம் பாதிக்க படமாட்டார்கள?

கேள்வி 13) ‘பிராமணன் என்பவன் அந்தண குலத்தில் பிறப்பவன் அன்று; பரப்பிரம்மத்தை நோக்கி செல்பவனே பிராமணன்’ என்று கீதையில் கூறப்பட்டுள்ளது. ‘பிராமணர்’ என கூறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? அவர்கள் அந்தண குல அடையாளத்தை சிதைப்பதாக அவர்கள் கருதாத போது ஏன் ‘முகமதியர்’ என்பதை, சிதைக்கும் முயற்சியாக கருதி இஸ்லாமியர் பதற்றமடைய வேண்டும்?

இப்னுபஷீர் போனமாதம் எழுதியது : (http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803063&format=html) // யாரோ ஒரு சுற்றுலா வழிகாட்டியின் வார்த்தைகளை விட, தேச விடுதலைக்காக பாடுபட்டு, அதிலேயே தனது உயிரையும் பறிகொடுத்த காந்தியின் வார்த்தைகளை நான் ஆதாரமாக எடுத்துக் கொள்கிறேன் //

கேள்வி 14) மற்றவர்களைக் காட்டிலும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் காந்தியாரின் சொல்லையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று போனமாதம் சொன்ன இப்னுபஷீர், இப்போது மலர்மன்னன் காந்தியாரின் சொல்லை சுட்டிக்காட்டும் போது மட்டும், அதற்கு எதிராக வஹ்ஹாபி, இப்னுபஷீர் போன்றோரின் எழுத்தை சுட்டிக்காட்ட காரணம் என்ன? ஒருவேளை ‘இப்னுபஷீரும் , வஹ்ஹாபியும் கூட இந்திய சுதந்திரத்துக்காக போராடி அதிலேயே தனது உயிரையும் பறிகொடுத்தார்கள்’ என இப்னுபஷீரே பேசி முடிவெடுத்துவிட்டாரா ?

– கார்கில் ஜெய்


– jaykumar.r@gmail.com

Series Navigation

கார்கில் ஜெய்

கார்கில் ஜெய்