இன்றைக்கு என்பது இனி கிடையாது!

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue

இரா. சுந்தரேஸ்வரன்.


காமிக்குகளின் காலம் போய்
ரொம்ப காலம் ஆகிவிட்டாற் போல்
ஓர் உணர்வு…!

நான்காம் பாிமாணத்தில் உலவும்
கால இயந்திரங்களைப் பற்றிய
கதைகளையெல்லாம்
காமிக்குகள் தாங்கி வரும்!

அக்காலம் தொட்டே
ஏனோ மனதில்
கால இயந்திரம் பற்றிய
கனவு இருந்து வருகிறது!

பல ஏடுகள் பயின்று
வெகு காலம் முயன்று
இயந்திரம் ஒன்று செய்தேன்,
காலத்தில் பயணம் செய்ய!

முயற்சியின் பலனை அறிய
வேற்றாள் ஒருவரையும்
சோதிக்க விருப்பமில்லை!

குமிழுனுள் நுழைந்து
நாளைய தேதிக்கு போகச் சொல்லி
பொத்தானை அழுத்த…
இதோ! நாளைக்குச் சென்றுவிட்டேனே!

காயிதே மில்லத் கல்லூாியில்
அன்றுதான் புத்தகக் கொண்டாட்டம் ஆரம்பம்!
எல்லா செய்தித்தாள்களையும் வாசித்தேன்!
(வாசிப்பேன் என்பதுதான் சாியோ ?)

‘இன்றைக்கு ‘த் திரும்புவதற்கு
விசையை அழுத்தினேன்!
நெடு நேரம் கழித்து,
மீண்டும் நாளைக்கே சென்றது,
எனதருமை இயந்திரம்!

என்ன நிகழ்கிறது இயந்திரத்தினுள் ?

இயந்திரத்தை இயக்கும் மென்பொருளை(நான் எழுதியது)
மெதுவாக மனதிற்குள் ஓட்டிப் பார்த்தேன்-
தவறு புாிந்தது!

ஆனால்…
நானோ தற்போது மென்பொருளின் வசம்!
மென்பொருளிலிருந்து விடுபடாமல்
மென்பொருளை மாற்றியெழுதுவதென்பது இயலாது!

தவறென்னவோ சிறிதுதான்!
‘x=x+1 ‘ என்பது
தவறான இடத்தில்
எழுதப்பட்டிருப்பதுதான்!
விளைவு:
இனி,
என் வாழ்வில்
இன்றைக்கு என்பது கிடையாது!

***

Series Navigation

இரா. சுந்தரேஸ்வரன்.

இரா. சுந்தரேஸ்வரன்.