புஹாரி, கனடா
ஓ…
இளைஞர்களே…
எந்தக் கிரீடமும்
நமக்குச்
சூட்டப்படவில்லைதான்
அதற்காக
முட்கிரீடங்களையா
நாம்
சூடிக் கொள்வது… ?
நெஞ்சத்தின்
அழிக்க மாட்டாத ஆசைகளுக்கு
வடிகால்களென எண்ணி
கற்பனைக் குதிரைகளைக்
கஞ்சாப் புகையால் தட்டிவிட்டுக்
கல்லறை வீதிகளிலா
பவனி வருவது.. ?
கல் தடுக்கலுக்கெல்லாம்
கல்லூரிக் கதவுகளுக்குத்
தாலாட்டுப் பாடிவிட்டு
பொது உடைமைகளில்
நம்
ஆத்திரங்களைக் கக்கி
நாசமாக்குவதா நமக்கு
வீரம்…. ?
சிசர்…. சார்மினார்… வில்ஸ்களால்
தற்காலிக மேகங்களெழுப்பி
ஜாக்கி… ராணி… ராஜாக்களைத்
தோகைகளாக்கிக்
கால முத்துக்கள்
கணக்கின்றி அழிய
இதய மயிலை
காபரே ஆடச் செய்வதா
நம் முழுநேரப்பொழுது போக்கு… ?
குட்டிச் சுவர்களுக்குப்
பக்கத்தில்
குட்டிச் சுவர்களாய்….
முக
முக்காடுகளுக்குள் புகுந்து….
புட்டிகளைப்
பொசுக்கெனக் கவிழ்த்து….
நடு வீதிகளில் நாணம் துறந்து
தலை கவிழும் சுதந்திரமா
நாம் பெற வேண்டும்…. ?
ஓ…
என்னருமை இளவரசர்களே….
உங்கள்
வெள்ளை ரோஜாக்களில்
சேற்றுக் கறைபடிவதை
அறிவு முட்களால்
தடுக்கவேண்டாமா…. ?
வாலிபம்
இப்படியா கெடுவது… ?
தனியொரு மனிதனுக்கு
உண்ண உணவில்லையெனில்
ஜகத்தினை அழிக்க வேண்டாம்
உருவாக்குவோம்
ஓடி வாருங்கள்.
——————————-
buhari2000@hotmail.com
- மாற்றம்
- தேவகோட்டை – சிவகங்கை
- சீரணி அரங்கத்தில் பேரணி
- பயணம்
- மெளனம்
- இந்திய இளவரசர்களே!
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- கோயிலுக்கு
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- ஈழத்தில் சமாதானம்
- இழந்த யோகம்
- சின்னப் பூக்கள்
- தீ தித்திப்பதில்லை…
- காவல்
- குழந்தை யேசு
- தலைப்பாரம்…..
- உதிரும் சிறகு
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- ஞாநிக்கு மீண்டும்
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- என் அக்கா
- பால்யகாலத்து நண்பன்!