இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

பாப்லோ நெருடா


—-

In these lonely regions I have been powerful
in the same way as a cheerful tool
or like untrammeled grass which lets loose its seed
or like a dog rolling around in the dew.
Matilde, time will pass wearing out and burning
another skin, other fingernails, other eyes, and then
the algae that lashed our wild rocks,
the waves that unceasingly construct their own whiteness,
all will be firm without us,
all will be ready for the new days,
which will not know our destiny.

சந்தோஷமான ஒரு கருவி போலவும்
மிதிக்கப்படாத புல் தன் விதைகளை தெளிப்பதுபோலவும்
பனித்துளிகளில் புரண்டுவிளையாடும் நாய்போலவும்
இந்த தனிமைப் பிரதேசங்களில் நான் வலிமையோடிருந்தேன்
மாடில்டே,
இன்னொரு தோலை தேய்த்தும் எரித்தும்,
வேறொரு நகங்களை தேய்த்தும் எரித்தும்
வேறொரு கண்களை தேய்த்தும் எரித்தும்
காலம் கடக்கும்
நமது தொடப்படாத பாறைகளின் மீது பாசி படரும்
அலைகள் தங்களது வெண்மையை முடிவற்று கட்டமைக்கும்
அவை அனைத்தும் நாம் இல்லாமலேயே உறுதியாய் இருக்கும்
அவை அனைத்தும் புதிய நாட்களுக்காய் ஆயத்தமாய் இருக்கும்
நமதி விதி பற்றிக் கவலையற்று.

What do we leave here but the lost cry
of the seabird, in the sand of winter, in the gusts of wind
that cut our faces and kept us
erect in the light of purity,
as in the heart of an illustrious star ?

கடற்பறவையின் இழந்துபோன குரல்
பனிக்காலத்தின் மணல்வெளி
நம் முகங்களில் தெறித்த காற்றின் வீச்சு-
இவையெல்லாம் நம் முகத்தைக் கிழித்து
தூய்மை ஒளியில் திமிர்ந்து இருக்கச் செய்தன –
ஒளிமிக்க நட்சத்திரத்தின் இதயம் போல:
இவை தவிர
வேறென்னத்தை இங்கு விட்டுச் செல்கிறோம் ?

What do we leave, living like a nest
of surly birds, alive, among the thickets
or static, perched on the frigid cliffs ?
So then, if living was nothing more than anticipating
the earth, this soil and its harshness,
deliver me, my love, from not doing my duty, and help me
return to my place beneath the hungry earth.

குளிரும் உச்சிகளின் மீது
உயிர்ப்புடன் கூட்டின் உள்ளே
உட்கார்ந்திருக்கும் பறவை போன்ற வாழ்வு தவிர
வேறென்னத்தை இங்கு விட்டுச் செல்கிறோம் ?
இந்த பூமியின், அதன் மண்ணின், அதன் கடுமையின்
எதிர்பார்ப்புதான் இந்த வாழ்க்கை என்றால்,
எனது கடமையைச் செய்யாமலிருப்பதிலிருந்து என்னைக் காப்பாற்று
என் அன்பே,
பசிக்கும் பூமியின் உள்ளே எனக்கென இருக்கும் இடத்துக்கு
என்னை அனுப்ப உதவு

We asked the ocean for its rose,
its open star, its bitter contact,
and to the overburdened, to the fellow human being, to the wounded
we gave the freedom gathered in the wind.
It ‘s late now. Perhaps
it was only a long day the color of honey and blue,
perhaps only a night, like the eyelid
of a grave look that encompassed
the measure of the sea that surrounded us,
and in this territory we found only a kiss,
only ungraspable love that will remain here
wandering among the sea foam and roots.

கடலின்
ரோஜாவைக் கேட்டோம்
திறந்த நட்சத்திரத்தைக் கேட்டோம்
கசப்பான தொடு உணர்வைக் கேட்டோம்
பாரம் சுமப்பவனுக்கும், சக மனிதனுக்கும், காயம்பட்டவனுக்கும்
காற்றிலிருந்து சேகரித்த சுதந்திரத்தைக் கொடுத்தோம்
தாமதமாகி விட்டது இப்போது
ஒருவேளை
தேனின் நிறமும் நீலநிறமும் கலந்த நீண்ட நாள் இதுவோ
ஒருவேளை கண்ணிமை போன்ற இரவு
நம்மைச் சுற்றும் கடலின் அளவென இறந்த பார்வை
இந்த பிரதேசத்தில் ஒரே ஒரு முத்தத்தை மட்டுமே கண்டோம்
கையில் அடங்காத காதல் மட்டுமே இங்கிருக்கும்
கடல்நுரையிலின் நடுவேயும், வேர்களின் நடுவேயும் அலைந்தபடி

(ஆங்கில மொழியாக்கம் Dennis Maloney and Clark Zlotchew : தமிழில் துகாராம்)

Series Navigation

பாப்லோ நெருடா

பாப்லோ நெருடா