இசையோடியைந்த தமிழ்க்கல்வி

This entry is part [part not set] of 28 in the series 20020518_Issue

சரவணன்1978

ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையே இசை. ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி, உச்சரிப்புக்கும் வார்த்தைக்குமான இடைவெளியைப் போன்றது. மானுடமனதில் அறிவுக்கூறு (Knowing), உணர்ச்சிக்கூறு (Feeling), முயற்சிக்கூறு (Willing) என்ற மூன்று கூறுகளையும் ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன. இயல்-இசை-நாடகம் என்ற மூன்று பிரிவுகளையுடைய தமிழ்மொழி, ‘இயல் ‘ மூலமாக மானுட மனதின் அறிவுக்கூறையும், ‘இசை ‘ மூலமாக உணர்ச்சிக் கூறையும், ‘இயலும் இசையும் ‘ சேர்ந்து நிகழ்த்தும் நாடகம் மூலமாக முயற்சிக் கூறையும் வளர்த்துச் செழுமைப்படுத்துகிறது. உணர்ச்சிக் கூறுக்கும், முயற்சிக் கூறுக்கும் மூலாதாரமாக ‘இசை ‘ அமைந்திருப்பதனை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். நமது முன்னோர்களாகிய சான்றோர்கள் தம் வாழ்நாளில் கண்டடைந்த மெய்மைகளை நிரப்பிவைத்துள்ள சொற்பேழைகள் தான் ‘செய்யுள் ‘கள். கவிதையை (செய்யுளை) உரைநடையிலிருந்து பிரித்துக் காட்டுவது இசை. மாணவர்களுக்குச் செய்யுள் பகுதிகளைப் பாடமாக்குவதன் நோக்கமே, மாணவர்கள் இலக்கியச் சுவையைத் தாண்டி, அதன் பின்னணியாகவுள்ள தாள லயத்தையும், இசை நயத்தையும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே. இசையை – இசைபற்றிய அறிவை – மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியிலுள்ள இசைப்பாடல்களின் வழியே வளர்ப்பதே முறை. மரபின் நீட்சி தடையின்றித் தொடர்வதால் எளிதில் உள்வாங்கிக் கொள்ள இயலும்.

மாணவர்கள் செய்யுளை இசையமைதியுடன் கற்றுத் தெளிவதற்கு ஏற்ப அவர்களுக்குக் கற்றுத்தருமளவிற்குக் கூடத் தற்காலத் தமிழாசிரியர்கள் இசைபற்றிய அடிப்படை அறிவு பெறாமலிருப்பதுதான் மிகவும் வருத்தமளிக்கிறது. இதனினும் மன அழுத்தத்தை உயர்த்தக்கூடியவையாக, எத்தனை ஆசிரியர்கள் திருக்குறளை முழுமையாகப் படித்துள்ளனர் – எத்தனை பேராசிரியர்கள் கம்பராமயணத்தை முழுமையாகப் படித்துள்ளனர் என்ற கேள்விகளுக்கான பதில்கள் உள்ளன. 1904இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மரபுவழியிலோ அல்லது குருகுல முறையிலோ இசையறிவைப் பெற்றிருந்தனர். 1940க்குப் பிறகு உரைநடை இலக்கிய வடிவத்தின் வீச்சு பலதரப்பட்ட பயன்களைத் தரத் தொடங்கியதன் மூலம் இசை மீதான மதிப்பு குறையத் தொடங்கியது. 1980க்குப்பின் இராகம், தாளம் முதலான மிக அடிப்படையான இசையறிவு கூடத் தமிழாசிரிர்களுக்குத் தெரியாது போயிற்று. தமிழாசிரியர்கள் செய்யுள்களை இசையமைதியுடன் நடத்தாமைக்கு மூன்று காரணங்கள் உண்டு. (1) இசையில் ஆர்வமின்மை, (2) மரபினை மதிக்காத தன்மை, (3)இசைப்புலமையின்மை.

ஒரு சந்தத்தை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப வார்த்தைகளை நிரப்புவது ‘இசைத்தமிழ் ‘. நிரப்பிய வார்த்தைகளுக்குத் தக்கபடி சந்தத்தை உருவாக்குவது ‘இயற்றமிழ் ‘. இயற்றமிழின் சுவையைக் கூட்டுவதற்கே இசைத்தமிழ் உதவவேண்டும். அதாவது, இசை கவிதைக்குத் துணைபோக வேண்டும். தமிழாசிரியருக்கும் இசையாசிரியருக்குமான இடைவெளிதான் தற்போது தமிழாசிரியர்கள் கவிதைகளை உரைநடைபோல் நடத்த ஏதுவாயிற்று. இதற்கு அடிப்படை காரணம், இயற்றமிழையும் இசைத்தமிழையும், தனித்தனியே கற்றுத்தரத் தொடங்கியதுதான். ஒரு கோணத்தில் பார்த்தால், இருபெரும் துறைகளையும் தனித்தனியே கற்கும் போதுதான் ஆழங்கால்பட முடியும். இருதுறைகளுக்குமே பரஸ்பர பரிமாற்றம் அவசியம்.

உதாரணமாக, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தனது பாலிய காலத்தில் கோபாலகிருஷ்ண பாரதியாருக்குத் தெரியாமல் காலையில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழும், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குத் தெரியாமல் மாலையில் கோபாலகிருஷ்ண பாரதியிடம் இசையும் கற்றுவந்தார். ஒருமுறை மீனாட்சி சுந்தரம்பிள்ளையும் உ.வே. சாமிநாதய்யரும் நடந்து செல்கையில், கோபால கிருஷ்ண பாரதியார் எதிர்ப்பட்டார். அப்போது மீனாட்சி சுந்தரம் பிள்ளை கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் உ.வே.சாமிநாதய்யரை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன், ‘இவன் என்னிடம் தமிழ்ப்பயிலும் மாணவன் ‘ என்று கூற, அதற்கு கோபாலகிருஷ்ண பாரதியார், ‘தெரியுமே! இவன் என்னிடம் இசைபயில்கிறான் ‘ என்று கூற இருவரிடமும் உ.வே.சாமிநாதய்யர் சிக்கிக் கொண்டார். மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு இசை மீது நாட்டம் இல்லை. மீனாட்சி சுந்தரம் பிள்ளை உ.வே.சாமிநாதய்யரை அழைத்து, ‘நீ என்னிடம் தமிழைக்கற்றுக் கொள் அல்லது கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை கற்றுக் கொள் ‘ எனக்கூறி ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வலியுறுத்தினார். அவ்வாறு வ.யுறுத்தக் காரணம், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு இசை மீதான நாட்டம் அறவேயில்லை என்பது மட்டுமல்ல ‘மனம் இசையில் இலயித்துவிட்டால் பின்னர் ஒரு போதும் இயற்றமிழை நாடாது ‘ என்பதனை உணர்ந்திருந்தும்தான்.

மேற்பரப்பில் மெளனமாகச் சுழன்று சுழன்று மெல்ல உள் அழுந்தி சுழற்சியில் வேகம் கொண்டு, அடித்தளம் வரை இழுத்துச் சென்று மணலில் புதைத்துவிடும் நீர்சுழியைப் போன்றது இசை. இசையை ஒரு பொழுதுபோக்காகவே (சாப்பாட்டிற்கு ஊறுகாய் போல்) பிற துறை அறிஞர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக, தீவிர எழுத்தாளர்களுக்கு இசை ஒரு தற்காலிக விடுதலை – அவர்கள் தம்மனதை ஆசுவாசப் படுத்திக் கொள்ள இசை நல்லதொரு வஸ்து. பிற துறையினர் மிகக் கவனமாக – அளவாகவே இசையைப் பயன்படுத்துவர்.

பழைய பேராசிரியர்களுள் சிலர் வகுப்பறைகளில் தமிழ் இசைப் பாடல்களையும் தமிழ்ச் செய்யுள்களையும் அதற்குரிய தாள லயத்துடன் பாடி, மாணவர்களுக்கு இசைமீது பற்றுவளர உதவியுள்ளனர். குறிப்பாக, பேராசிரியர் அ.சங்கர நாராயணன், பேராசிரியர் சுப. அண்ணாமலை போன்றோர். ‘பேரா.அ.சங்கர நாராயணன் அவர்கள் பாரதிதாசன் இயற்றிய ‘இயேசுநாதர் ஏன் வரவில்ை ‘ என்ற கடினமான இசைப்பாடலைப் (பதினான்கடி கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) பிசிறு தட்டாமல் வகுப்பறையில் பாடுவார் ‘ என்று அவருடைய பழைய மாணவர்கள் கூறுகின்றனர். அதே சமயம் ‘ ‘புகழ்பெற்ற பேராசிரியர்கள் ஒளவை துரைசாமிப் பிள்ளை, இலக்குவனார், ஆ.கி. பரந்தாமன் போன்றோர் இசை பற்றிச் சிறிதும் அறிந்திருக்கவில்லை ‘ ‘ என்று அவர்களுடைய பழைய மாணவர்கள் கூறுகின்றனர்.

தமிழாசிரியர்கள் செய்யுளை நடத்துவதற்கு முன், அச் செய்யுளில் உள்ள ஒலிஒழுங்கை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். எல்லாச் செய்யுள்களையும் தனக்கான ஒரு தனி ஓசை ஒழுங்கோடு பகுத்து பலமுறை பாடிப் பயிற்சி செய்து பழக வேண்டும். சேது ரகுநதாதன் போன்றோர் எல்லாப் பாடல்களையும் தனக்கான ஒரு தாள அமைப்புடன் பாடி மாணவர்களுக்குக் கற்பித்தனர். கவிதையில் உள்ள ஒலிஒழுங்கை மனத்தில் வாங்கிக் கொண்டாலே போதும். இயற்றமிழின் சுவையைக் கூட்டுவதற்கே இசைத்தமிழ் உதவவேண்டும். இசை, கவிதைக்குத் துணைபோக வேண்டும். ஆண்டாள் தனது திருப்பாவையை எந்த இராகத்திலும் பாடவில்லை; மாணிக்கவாசகர் திருவெம்பாவையை எந்தப் பண்ணிலும் இயற்றவில்லை. பிற்காலத்தில் வந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்தான் திருப்பாவையை ஒரு இராகத்தில் (தனக்கான ஓர் இசை ஒழுங்கில்) அமைத்தார்.

செய்யுளில் ஒவ்வொரு அசையும் ஒரு தாளமாகக் கொள்ள வேண்டும். அதாவது, ஓர் அசை உயர்ந்தும், அடுத்த அசை தாழ்ந்தும், அதற்கடுத்த அசை உயர்ந்தும் .. என்றாவது அமைத்துச் சென்றால் அது ஒருவகை தாளமாக அமையும். அடிப்படையில் தாளம் ஏழுவகைப்படும்.

அமைக்கின்ற இசை பாட்டின் உட்பொருளுக்கு இயைந்து வருதலே இராகம். பாட்டின் மையம் ‘பிரிவுத்துயர் ‘ என்றால் ‘சோக இசை ‘ என்பதுபோல, உணர்ச்சி முரண்படாமல் எண்வகை மெய்ப்பாடுகள் திரிபடையாமல் இசைக்கப்படுவதே இராகம். அடிப்படையில் 72 மேளகர்த்தா ராகங்கள் உள்ளன. அடிப்படை சுரங்களின் (இசையொலிகளின்) பெயர்களாக குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு பெயர்களும் இவற்றுக்குரிய எழுத்துக்களாக முறையே ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிரெழுத்துக்களும், பண்டைத் தமிழிசையில் இருந்தன. இவையே பின்னர் சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று வட மொழியில் கூறப்பட்டு ஸ, ரி, க, ம, ப, த, நி என்று வழக்கில் வந்தன. இந்த ஏழு இசையொலிகளும் சுரங்கள் என்று வழங்கப்பட்டு, பின்னர் பன்னிரு சுரங்களாக வளர்ச்சியடைந்தன. ஏழு சுரங்களுள் குரலும் (ச), இளியும் (ப) வகை பெறா இரு சுரங்களாகும். மற்ற சுரங்களான துத்தம், கைக்கிளை, இழை, விளரி, தாரம் (ரி,க,ம,த,நி) ஆகிய ஐந்தும் ஒவ்வொன்றும் இரண்டு வகைபெறும் சுரங்களாகும். ஆக 12 இசை நிலைகள் ஆங்கிலத்தில் Sharp, Flat என்று குறிப்பதுபோலவே, தமிழிசையில் இவை நிறை – குறை, வன்மை – மென்மை, ஏறிய – இறங்கிய என்றும்; வடமொழியில் கோமள – தீவிர என்ற சொற்களைக் கொண்டும் குறிக்கப்படுகின்றன. ஏழு இசைகளின் தொகுப்பு அல்லது பன்னிரு இசை நிலைகளின் தொகுப்பு ஒரு மண்டிலம் ‘ எனப்பட்டது. இதனை ‘இயக்கு ‘ என்றும் ‘ஸ்தாயி ‘ என்றும் ‘தானம் ‘ என்றும் கூறுவர். இது மூவகைப்படும். சமன், மெலிவு, வலிவு. சமன் மண்டிலம், மத்திய ஸ்தாயி என்றும். மெலிவு மண்டிலம் மந்த்ர ஸ்தாயி என்றும், வ.வு மண்டிலம் தார ஸ்தாயி என்றும் தற்போது வழக்கில் உள்ளன. இசைப் பயிற்சி செய்வோரின் குரல்மிக உயர்ந்தும், மிகத் தாழ்ந்தும் ஓரெல்லை வரையில்தான் ஒ.க்கும். இவற்றைப் பண்டைத் தமிழர் மெலிவில் நான்கு சுரங்களும், சமனில் ஏழு சுரங்களும், வலிவில் மூன்று சுரங்களுமாக 14 சுரங்கள் இயற்கையாக ஒ.க்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

சரிக – வலிவு – 3 சரிகமபதநி – சமன் – 3 மபதநி – மெலிவு – 4

ஒரு சுரத்திற்கும் மற்றொரு சுரத்திற்கும் இடையே உள்ள அளவை 1/2 மாத்திரைகளாகவும், 1/4 மாத்திரைகளாகவும் பகுத்துணரும் தன்மை இசைத்தமிழில் வளர்ந்தது. இவ்வாறு 22 பகுப்புகள் இருந்தன. இவைகளை அலகு, மாத்திரை, சுருதி போன்ற பெயர்களில் குறிப்பிட்டனர். இப்பகுப்புகள் சமமானவையல்ல.

குரல் (ச) 4

துத்தம் (ரி1) (ரி2) 4

கை¢கிளை (க1) (க2) 3

உழை (ம1) (ம2) 2

இளி (ப) 4

விளரி (த) 3

தாரம் (நி) 2

ஏழு சுரங்களின் தொடர்பினை இணை, கிளை, பகை, நட்பு என்றும் முறையில் பண்டைத்தமிழர் விளக்குவர். இணை : நின்ற நரம்பிற்கு ஏழாவது இடத்தில் வரும் சுரம் இணைச்சுரம். குரல் (ச) – இளி (ப). நட்பு : நின்ற நரம்பிற்கு நாலாவது இடத்தில் வரும் சுரம் நட்புச் சுரம். குரல் (ச) – கைக்கிளை (க2). கிளை : நின்ற நரம்பிற்கு ஐந்தாம் இடத்தில் வரும் சுரம் கிளைச்சுரம். குரல் (ச) – உழை (ம1) பகை: நின்ற நரம்பிற்கு மூன்றாம் இடத்தில வரும் சுரமும், ஆறாம் இடத்தில் வரும் சுரமும் பகைச் சுரங்களாகும். குரல் (ச) – கைக்கிளை (க1), குரல் (ச) – உழை (ம2).

பாலை என்றால் பகுப்பு. ஏழிசையின் பகுப்பு நான்கு வகைகளில் அமைகின்றன. ஆயம், சதுரம், திரிகோணம், வட்டம். முழுமையான வட்டத்தில் பன்னிரெண்டு கோணஞ்செய்து அதில் ஏழுகோணத்தைக் கொண்டு உறழப்டுவது வட்டப்பாலை. இதுவே. சிலப்பதிகார உரையாசிரியர்களாலும், பஞ்சமரபிலும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏழு சுரங்களும் 12 இராசிகளில் வலமுறையாகவும், இடமுறையாகவும் உறழப்பட்டு ஏழு பெரும் பாலைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

———————————————————

பாலைகள் ! வட்டப்பாலையின் தற்கால நிலை ! இராகங்கள்

———————————————————

குரல்………!..செம்பாலை…………………………..!..அரிகாம்போதி

துத்தம்…….!..படுமலைப்பாலை……………………!..நடபைரவி

கைக்கிளை..!..செவ்வழிப்பாலை…………………..!..பஞ்சமம் இல்லாத தோடி

உழை………!..அருகம்பாலை………………………!..சங்காரபரணம்

இனி……….!..கோடிப்பாலை………………………!..கரகரப்பிரியா

விளரி……..!..விளரிப்பாளை……………………..!..தோடி.

தாரம்………!..மேற்செம்பாலை…………………..!..கல்யாணி

இனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவமைப்பின் பண் என்று கூறலாம். வடமொழியில் உள்ள இராகம் என்ற சொல்லோடு பண் என்ற சொல் ஒத்தமைகிறது. பண்டைய தமிழகத்தின் நான்கு நிலங்களுக்கு ஏற்ப நாற்பெரும் பண்கள் இருந்தன. திருக்குறளுக்கு உரை செய்த பரிமேலழகர் காலத்தில் (11ஆம் நூற்றாண்டு) 10 பண்களாகவும், சிலப்பதிகார உரையாசியர் அடியார்க்கு நல்லார் காலத்தில் (12ம் நூற்றாண்டு) 11,991 ஆதி இசையாகவும் விரிவுபடுத்தப்பட்டன. இசைத்தமிழ் இலக்கணத்தில் பண், திறம் என்ற இரு பிரிவுகள் உள்ளன. பண் என்பது ஏழு சுரங்களைக் கொண்டது. திறம் என்பது பண்ணினும் குறைந்த சுரங்களைக் கொண்டது. திறம், அதில் பயிலப்படும் திறங்களின் அடிப்படையில் பண்ணியல் திறம், திறம், திறத்திறம் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. இவை தற்காலத்தில் (வடமொழியில்) சாடவம், ஒளடவம், சுவாராந்திரம் என்று வழக்கில் உள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய பண்கள் பாடப்பட வேண்டும் என்பதில் பழந்தமிழர்கள் அதி முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். இதனடிப்படையிலேயே கோயில்களில் தெய்வங்களுக்குப் பாடப்படும் போது பகற்பண், இரவுப் பண், பொதுப்பண் என்ற மூன்று வகைப்பாடுகள் பிற்காலத்தில் ஏற்பட்டன. தற்காலத்திலும் இவை காலையில் பூபாளம், நண்பக.ல் கல்யாணி, இரவில் நீலாம்பரி எனத் தொடரப்படுகின்றன.

இக்கட்டுரையின் நோக்கம், தமிழாசிரியர்கள் தமது பரிவாரங்களை வகுப்பறைக்கு அழைத்து வந்து இசைக்கச்சேரி நடத்த வேண்டும் என்பது அல்ல. தமிழாசிரியர்கள் செய்யுளினைக் கற்பிக்கும் போது, அச் செய்யுளின் உயர்நிலைக் கருத்திற்குள் நுழைந்து, அக் கருத்தைத் தொகுத்துரைப்பதற்கு முன், அச்செய்யுளுக்குரிய ஏற்ற பண்ணில் அல்லது தனக்கான ஓர் இசை ஒழுங்கோடு, எடுத்தல் – படுத்தல் – நலிதல் ஆகிய குரல் ஏற்றத்தாழ்வுகளுடன் (Modulation of Voice) தெளிவான நல்ல உச்சரிப்புடன் (Good pronounciation) ‘பாடிக் காட்டுதல் ‘ அவசியம். முறையற்ற இசை ஞானத்தை மூலதனமாகக் கொண்டு, அபஸ்வரத்தில் செய்யுள்களைப் ‘படித்துக் காட்டுதல் ‘ ஒருபோதும் கூடாது. அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும். தற்காலத் தமிழாசிரியர்கள் இசைபற்றிய அடிப்படை ஞானத்தை முறையாகப் பெற வேண்டும். மாணவர்களிடையே ‘இசை கேட்கும் ‘ பழக்கத்தையும் பயிற்சியையும் ஏற்படுத்த வேண்டும். இசை பற்றிய அடிப்படைச் செய்திகளை எளிய நடையில் எழுதி நூல்களாக்கி மாணவர்கள் மத்தியில் கொண்டுவர வேண்டும். இவைகளே இயற்றமிழ், இசைத்தமிழுக்குச் செய்யும் பெரும் சேவைகளாகும்.

உசாத்துணை :

1. இலக்கிய ஓவியங்கள் – ச. ஆறுமுக முதலியார்

2. பஞ்சமரபில் இசைமரபு – முனைவர் இ. அங்கயற்கண்ணி

3. முனைவர் ப.ச.ட. ஹரன், பேராசிரியர் செ. போத்திரெட்டி ஆகியோருடனான சந்திப்புகள்.

சொல்புதிது இதழ்-9இல் வெளிவந்த கட்டுரை

Series Navigation

நிகழ்ச்சிகள்