ஆரியம் இருக்குமிடம்… ? ? ? ?

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

வரதன்


அன்புள்ள அண்ணா,

பல வருடம் கழித்து உங்கள் ஆரியம் பற்றிய எழுத்துக் கண்டேண்.

இதோ என் எண்ணம்,

அக்ரகாரத்து ஆரியர்கள் அமெரிக்காவிற்கு விரட்டப்பட்டு விட்டார்கள்.

செட்டியார்கள் தொழிலதிபர்களாகவும், முதலியார்கள் பல் துறை வித்தர்களாகவும் மாறி விட்டார்கள்.

தேவர்கள் கட்சிகளில் அதிகம். நாடார்களோ பரவி பல திசைகளில்.

ஆரியம் துரத்தும் உங்கள் கட்சியின் தம்பிகளிடம் ஆரியத்தின் நிலை கேட்க அண்ணா அறிவாலயம் சென்றேன்.

– தூரப்போ தூரப்போ என்று விரட்டினார்கள்.

சத்தமாகப் பேசாதே, உள்ளே திரு.கருணாநிதி இருக்கிறார் என்றனர்.

விலகு விலகு என்றனர்,

உங்கள் மூத்த தம்பி, திரு.கருணாநிதியின் மகன் திரு.ஸ்டாலின் வருகிறாராம்

– விலகி நிற்கலாம் என்றால், முதல் மாடிக்கு ஒரு தொழிலதிபர் செல்கிறார் வழியை மறைக்காதே எட்டிப் போ என விரட்டினர்.

– உங்களுக்குப் பதில் மத்திய சென்னையில் நின்ற திரு.முரசொலி மாறனின் மகன், திரு.கலாநிதி மாறன் மேலே செல்ல , கீழேயிருக்கும் கட்சித் தொண்டர்கள் விரட்டப்படும் காட்சி.

திடாரென்று, பரபரப்பு,

எட்டிப் பார்த்தால்,

மதுரை ராஜா, திரு.அழகிரி வருகிறாராம்

என்னாடா இது என்று அங்கு கிடந்த ஒரு புத்தகத்தைப் புரட்டினால், செல்வி.கனிமொழியின் கவிதை.

திரு.மாறனுக்குப் பின் உங்கள் தம்பிகளில் யார் மந்திரி என்றால், திரு.டி.ஆர்.பாலு ஒரு பாலகன் போல் நினைத்தோ என்னவோ,

திரு.தயாநிதி மாறன் விரைவில் M.P என்றனர்.

காரணம், அவருக்கு நன்றாக இந்தி தெரியுமாம்.

மொழிப் போரி தியாகிகளின் வாரிசுகளை நினைத்துப் பார்த்தேன்.

அவ்வழி போனவர், தி.மு.க தலைவரி குடும்பம் ஜாதி பாரபட்சம் காட்டாது என்று சொல்லி கொசுறாக திரு.முரசொலி மாறனின் மறுமகள் ஒரு பிறாமணர் எனச் சொல்லிச் சென்றார். உண்மையா.. ? அண்ணா… ?

அண்ணா, மூக்குப் பொடி நீ போட்டு, காரசார பேச்சில் சொக்குப் பொடி எமக்கும் போட்டு எம் முன்னோர் வாக்குகளை கவர்ந்தீர்கள்.

அய்யரைக் காண்பித்து ஆரிய பூதமென்று பயமுறத்தி, அரசு கண்டார்கள்.

அங்கங்கங்கு இருந்த ஆரியம் ஒட்டு மொத்தமாக விஸ்வரூபம் எடுத்து, அண்ணா அறிவாலயத்தில்,

சொல்லுங்கள் அண்ணா, என்ன செய்ய வேண்டும்,

இந்த தமிழன்…….. ? ? ? ? ? ? ? ? ? ஆரியம் ஒழிக்க …… ? ? ? ? ? ? ? ?

————————————————-

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்