‘ஆபிாிக்க அமொிக்கக் கனேடியக் குடிவரவாளன் ‘

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

வ.ந.கிாிதரன்


தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நுாலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாாி. அடிக்கடி நுாலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நுாலகத்தின் சிறுவர் பிாிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நுாலகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நுாலொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காழியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்கும் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பொியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.

‘ என்ன துாக்கக் கலக்கமா ‘ என்றேன்.

‘ இல்லை மனிதா! சாியான களைப்பு. வேலைப் பளு ‘ என்று கூறிச் சென்றான்.

சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

‘என்ன அடிக்கடி இங்கு நுால்கள் திருட்டுப் போகின்றனவா ? ‘ என்றேன்.

அதற்கவன் ‘இந்தப் பாடசாலைக் குழந்தைகள் பொல்லாததுகள். கணினிப் புத்தகங்களிலுள்ள சிடிகளை திருடிச் சென்று விடுவார்கள். சாியான தொல்லை. ஆனால்.. ‘ என்றான்.

‘என்ன ஆனால்.. ? ‘ என்றேன்.

‘ஆனால்.. நானும் ஒருகாலத்தில் கலிபோர்னியாவில் இதையெல்லாம் செய்து திாிந்தவன் தான் ‘ என்றான்.

‘என்ன நீ கலிபோாினியாவிலிருந்தவனா ? ‘

‘ ஆமாம் மனிதனே! அது ஒரு பொிய கதை. அது சாி நீ எந்த நாட்டவன். ? ‘

‘நான்..நான் ஒரு கனேடியன்.. ‘

‘அது சாி. னால் எந்த நாட்டிலிருந்து வந்தவன். பாகிஸ்தானா..அல்லது இந்தியாவா ‘

‘இரண்டுமில்லை..ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட நாடொன்றிலிருந்து வந்தவன்.. ‘

‘அது எந்த நாடு.. ? ‘

‘சிறிலங்காவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றாயா ? ‘

‘ஓ..நீ சிறிலங்கனா ? ‘

‘ம் நண்பனே! ஆனால் நாங்கள் எல்லோருமே ஓாினம். உங்களைப் போல். ஆபிாிக்கர்களைப் போல் ‘ என்றேன்.

‘ஓ.. ‘

‘அது சாி.. நீயென்ன நைஜ ‘ாியனா ‘

‘நான் நைஜ ‘ாியன் தான். ஆனால் நைஜ ‘ாியாவிலிருந்து வந்தவனல்ல ‘

‘புதிரா.. ? ‘

‘ஒரு புதிருமில்லை. நான் கலிபோாினியாவிலிருந்து கனடா வந்தவன். இதென்ன நாடு ? சொன்னால் நம்பமாட்டாய். நான் இங்கு வந்தே முப்பது நாட்கள் கூட முடியவில்லை. ஆனால் இருந்து பார் நான் மே முடிவதற்குள் கலிபோாினியா திரும்பி விடுவேன்.. ‘

‘ஏன் அப்படிச் சொல்லுகிறாய். உனக்குக் கனடா பிடிக்கவில்லையா..பின் ஏன் இங்கு வந்தாய் ? ‘

‘ஏ! மனிதனே! நான் உன்னைப் போல் கனடா வந்தவனல்ல. நீ சிறிலங்காவிலிருந்து வந்தவன். உனக்கு வேண்டுமானால் கனடா பொிதாகவிருக்கலாம். ஆனால் நான் அவ்விதம் வந்தவனல்ல. கலிபோர்னியாவிலிருந்து வந்தவன். கலிபோர்னியாவிலிருந்து வந்து பார்த்தாயென்றால் தொியும் கனடாவின் நிலைமை. ‘

‘கலிபோர்னியாவில் வீட்டு வாடகை மிக அதிகமென்று கேள்விப்பட்டிருக்கின்றேன் ‘

‘அது சாி..ஆனால் அங்கு வாழ்க்கைத் தரம் சாியான குறைவு..ஐம்பது சதத்துடன் நாள் முழுக்க பஸ்ஸில் மாறி மாறிப் பயணம் செய்யலாம். இங்கு அப்படிச் செய்ய முடியுமா ?. எனக்கு ஏன் வந்தேனென்று ேருக்கின்றது. வேண்டுமானால் பார். யூன் வருவதற்குள் நான் போய் விடத்தான் போகின்றேன். கலிபோாினியா போய் விடத் தான் போகின்றேன்.நான் ஜெனிபாிடம் கூடக் கூறி விட்டேன். அவளுக்காகத் தான் என் அருமைக் கலிபோர்னியாவை விட்டு இந்தப் பாழாய்ப் போன கனடாவிற்கு வந்தேன். ஆனால் இம்முறை அவள் வருகின்றாளோ இல்லையோ நான் போகத் தான் போகின்றேன். ‘

எனக்கு அவன் கதை மிகவும் ச்சர்யத்தைத் தந்தது. தற்செயலாக எனது குழந்தை பங்கு பற்றும் நிகழ்வொன்றிற்காக நுாலகம் வந்த இடத்தில் தான் இந்த கலிபோர்னியா நைஜ ‘ாியனைச் சந்தித்திருந்தேன். அதுவும் சந்தித்துச் சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. அதற்குள் அவன் எவ்வளவு விரைவாகத் தனது மனக் குறைகளை அள்ளிக் கொட்டி விட்டான். உண்மையில் அவன் கனடா வந்து முப்பது நாட்கள் தானா அல்லது முந்நூறு நாட்கள் தானா ஆகி விட்டிருந்தன என்பது எனக்குத் தொியாது. ஆனால் அதற்குள் அவன் ஏன் என்னிடம் இவ்விதம் தன்னைத் திறந்து காட்டினான். அவன் கதைத்தது கூட மிகப் பலமான குரலில் தான். அவன் கூறுவதைக் கேட்ட அருகில் நுால்களைத் தேடிக் கொண்டிருந்த ஒரு சில வெள்ளையின முதியவர்கள் கூட இலேசாகத் தலைகளை நிமிர்த்தி அவதானிக்கத் தான் செய்தார்கள். ஆனால் அந்த ஆபிாிக்க அமொிக்கப் பாதுகாவலன் அது பற்றியெல்லாம் அதிகமாகப் பொருட்படுத்தியதாகத் தொியவில்லை. ஒருவேளை அவனுடன் நட்பாக உரையாடத் தொடங்கிய எனது செயல் இன்னுமொரு மண்ணில் வேரூன்றுவதில் முயன்று தோல்வி கண்டிருந்த இவனுக்கு ஒருவித ஆறுதலையும் தன் மனப்பாரத்தை இறக்க வேண்டிய தேவையினையும் ஏற்படுத்தி விட்டிருக்குமோ என்றும் பட்டது. இதற்கிடையில் என் மகள் தன் நிகழ்ச்சி முடிந்து ‘டாடி ‘ என்றவண்ணம் வந்து விட்டாள்.

‘யார் உன் குழந்தையா ? ‘ என்றான்.

‘ஆம் நண்பனே! நீ போவதற்குள் முடிந்தால் வந்து சந்திக்க முயல்கின்றேன் ‘ என்றேன்.

‘அதற்குச் சாத்தியமில்லை. இன்று மட்டும் தான் தற்காலிகமாக இங்கு எனக்கு வேலை. நாளைக்கு வழமையான இடத்தில் தான். உன்னைப் போன்றவர்களை இங்கு பார்ப்பதே அாிது. கலிபோர்னியாவில் எல்லோருமே நட்புணர்வு மிக்கவர்கள். ஒருமுறை வந்து பார். பின்னர் நீயே புாிந்து கொள்வாய் ‘ என்றபடியே விடை கொடுத்தான். அத்துடன் எனக்கும் அவனுக்குமிடையிலான தற்காலிக உறவில் நிரந்தரப் பிாிவேற்பட்டது. ஆனால் வழக்கம் போல் இந்த உறவின் பிாிவும் இலேசாக மனதை நெருடத் தான் செய்தது போல் பட்டது.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்