அவனுக்கென்று ஒரு வானம்…

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

ஆ. மணவழகன்.


என்
சின்னச் சின்ன
அசைவுகளையும்,
தேடித்தேடி ரசிக்கிறாய்…

என் கோபப்படுதலிலும்
அழகு இருப்பதாய்
ஆனந்தப்படுகிறாய்…

என்றோ நான் உடுத்திய
உடையின் வண்ணத்தைக் கூட
இன்றும் – நீ
ஞாபகப்படுத்துகிறாய்…

சில வேளைகளில்
என்னின் தவறுகள் கூட
உனக்கு – ஒரு
குழந்தையின் குறும்பாய்…

என் சிரிப்பும்,
என் தீண்டலும்;
என் காட்சியும்,
என் கவிதையும்;
என் தமிழும்,
என் தவிப்பும்;
‘உனக்கே உனக்கு ‘ என்று
உறக்கம் தொலைக்கிறாய்..!

அடி பெண்ணே!
என்றாவது எட்டிப் பார்த்ததுண்டா ?
என் இன்னொரு பக்கத்தின் எரிமலைகளை….!!!

தென்றலின் தீண்டல் இல்லை,
புயலின் சீற்றம் உண்டு!
நீரின் கருணை இல்லை,
தீயின் வெம்மை உண்டு!
கடவுளில் நம்பிக்கை இல்லை,
கையில்ி வலிமை உண்டு!
பழக்கத்தில் பகடு இல்லை,
பசியிலும் பாட்டு உண்டு!
கோழையாய் வாழ்வு இல்லை,
வீரனாய் மரணம் உண்டு!

ஆம்,
கைகோர்த்து ,
கதை பேசி,
காலார நடந்து,
கடற்கரையில் காற்று வாங்கும்,
காட்ிசி வாழ்க்கை அங்கில்லை…!

கருவேலந்தோப்பில்,
கள்ளியின் மத்தியில்,
வெறுங்காலில் நடக்கையிலும்,..
வீணை மீட்ட விருப்பம் என்றால்…..
இன்றே சொல்…!
‘எனக்கும் கூட காதல் பிடிக்கும் ‘

************
a_manavazhahan@hotmail.com

Series Navigation

ஆ. மணவழகன்

ஆ. மணவழகன்