அலைகள் திமிங்கிலம்

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

அலறி


அதிகாலை நீலக்கரை கடலில் தொிந்தது
தோணிகள் இழுத்த கோடுகளும் மிதந்தது
அணுவில் ஆயிரத்திலொரு மடங்கு கொந்தளிப்பும்
தொிந்திருக்கவில்லையென்று
கடலை கரைத்துக் குடித்தவர்கள் சொன்னார்கள்
காற்று
மழை
சூாியன் மூன்றும் சொன்னது

ஒரு மின்னல் இடைவெட்டும் கணம் தான்
எல்லாம்
எல்லாமே தலை கீழானது

பால்நுரை கக்கும் அலைகள்
இவ்வண்மத்தை பூிந்திருக்காது
பூிந்திருக்கவே இருக்காது
ஆயிரத்து நூறு ஆண்டுகள் பசி கொண்டிருந்த
இராட்சத திமிங்கிலங்கள்தான்
இதை செய்திருக்கும்
அல்லது பேரலைகளாக உருமாறிப் புரண்டிருக்கும்

ஒன்று இரண்டு மூன்று நான்கென
குமுறி எழுந்து
நிலக் கீழ் பாறைகள் அதிர்ந்து
சுறுண்டன அலைகள்
இல்லை பாய்ந்தன திமிங்கிலங்கள்.

வேரோடும் வேரடி மண்ணோடும்
மரங்களை சாய்த்தன
வீடு தூக்கி வானில் கொழுவின
பாளம் பாளமாக உடைந்து நொறிங்கின
மனித உடல்களை அரைத்துச் சப்பின
நீரை தரையில் கொப்பளித்து விட்டு
சாக் குரலால் கடல் நிறைந்தது
ஒரு மின்னல் இடைவெட்டும் கணம்தான்
எல்லாம்
பின் துளித் துளியாய் நிரம்பியது கடல்

துயாில் பிாிவில் உறைந்த மனிதா;கள்
வாழ் வெழுதி வருகின்றனர்

ஊரை விழுங்கிய திமிங்கிலங்கள்
கடலடியில் உறங்குகின்றன அவை அலைகளல்ல.

கோடை வெயிலில் ஒரு கள்ளமழை

கொதித்து கொதித்து வழிகிறது
சூாியன்
கருகிக் கருகி சுருள்கிறது
பூக்கள்
செடிகொடிகள்

ஆகாயத்தில் அடுப்பு மூட்டி
சூாியனை காய்ச்சுவது யார்
அனலாய் தகிக்கிறது வெயில்
ஆவியாய் பறக்கிறது ஆறுகள்

ஒரு கோப்பை தண்ணீர்
கொடுப்பாாின்றி தவிக்கிறது குளம்
நீர்க் கரை தேடி ஓடிய ஓடைகள்
திரும்பவில்லை

வெயிலை தள்ளியவர்கள்
தலையில் சுமந்து திாிந்வர்கள்
பாரம்தாங்காமல்
வியர்துக் களைத்து
மரத்தின் கீழ் ஒதுங்குகின்றனர்
நிழலும் தீய்க்கிறது

மழையே!
இந்நேரம் நீ யெங்கு போனாய்
முகிலாய் திரண்டு
கடலுக்குள் ஒழித்ததேன்
ஒரு பாட்டம் சாியேன்
பயிர் பச்சை குடித்து முழுக

இதோ
துளிர்த்துப்பெய்கிறது மழை
கொதிக்கவைத்து சூடாக்குது வெயில்
மாலை
தேனிர் தயாாிக்கலாம்.

அலறி, இலங்கை

Series Navigation