அறிவுத்திறத்தின் பரிணாமம்- செடி SETI மற்றும் விண்வெளி உயிரியலின் இன்றியமையா பகுதி

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

லோரி மரினோ, எமரி பல்கலைக்கழகம்


விண்வெளி உயிரியலின் முக்கியமான கேள்வி, உயிர் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கும் கிரகங்களில் ‘அறிவு ‘ இருக்குமா என்பது. ‘அறிவு ‘ இருக்குமா என்பதைக் காண நாம் அளவிடக்கூடிய அறிவுடன் இணைத்துப் பேசப்படும்குணங்களை உபயோகப்படுத்த வேண்டும். அதாவது பிரச்னைகளை தீர்ப்பது, ஞாபகசக்தி ஆகியவை. இந்தக் குணங்கள் பரந்த உயிரின வகைகளில் பரிசோதிக்கக்கூடியவையாக இருக்க வேண்டும். The Encephalization Quotient (EQ) என்னும் மூளை அளவு ஒரு உபயோகமான அளவை. ஒரு உயிரினத்துக்கும் அதன் மூளைக்கும் இருக்கும் விகிதங்களை அளப்பது இந்த அளவை. தன்னுடைய உடலில் பெரும் அளவு மூளையாக இருக்கும் உயிரினங்கள் பெரும்பாலும் ‘அறிவு ‘ கொண்டு இருக்கின்றன. உதாரணமாக நவீன மனிதர்களுக்கு ஈ.க்யூ எண் 7. அதாவது நமது உடல் அளவு கொண்டிருக்கும் மிருகங்களில் எதிர்பார்க்கக்கூடிய மூளையின் அளவை விட நம் மூளை அளவு 7 மடங்கு பெரியது.

ஈ.க்யூ எண் மிகவும் வசதியானது. ஏனெனில், உயிருடன் இருக்கும் விலங்குகளையும், உலகில் இன்று இல்லாமல் அழிந்து போய் வெறும் எலும்புகள் மட்டும் கிடைக்கும் விலங்குகளையும் ஒப்பிட இது உதவுகிறது. மேலும், இந்த எண் நேரடியாக மூளையின் அளவை மட்டும் அளக்காமல், மூளையின் சிக்கலான அமைப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இதனைக் கொண்டு, பரந்த விலங்கினத்தில், ஒரு குத்துமதிப்பான ‘அறிவுத்திறத்தை ‘ நாம் கணக்கிடலாம்.

அதிகப்படியான ‘அறிவுத்திறம் ‘ பரிணாம ரீதியில் நேரடியாக தெரிவு செய்யப்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டதே நமது அறிவுத்திறம் பற்றிய புரிதல். இதுதான் உண்மை என்றும் தெரிகிறது. பூமியில் முதலில் தோன்றிய ஒற்றை செல் உயிரினங்களில் நரம்பு மண்டலம் இல்லை. பலசெல் உயிரினங்கள் சுமார் 560 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் தோன்றியபோது, மிக எளிய நரம்பு மண்டலங்கள் உருவாயின. சமீபத்திய குழுக்களான, முதுகெலும்பிகள் போன்றவை பெரும் மூளையுடனும் சிக்கலான நரம்பு மண்டலங்களோடும் இருக்கின்றன. இந்த வழி, பரிணாமம் தொடர்ந்து சிக்கலான நரம்பு மண்டலம் கொண்ட உயிரினங்களை தொடர்ந்து தேர்வு செய்கிறது என்பதை நிரூபிக்கிறது. மிகவும் சிக்கலான நவீன மனிதன் சுமார் 500000 வருடங்களுக்கு முன்னரே தோன்றினான்.

பூமியின் வரலாற்றில் மிக அதிகப்படியான அறிவுத்திறமும், சராசரி அறிவுத்திறமும் தோன்றியிருக்கின்றன என்பதை சாட்சியங்கள் கூறுகின்றன. இருப்பினும் இரண்டு வழிமுறைகள் இந்த வழிக்குக் காரணமாக இருக்கமுடியும். முந்தைய உயிரினங்கள் சிறிய மூளையுடன் உருவாகியிருந்தால், அந்த உயிரினங்கள் பரந்து விரிவடையும்போது, சராசரி மூளை அளவு அதன் கூடவே அதிகரிக்கவேண்டும். ஜான் மைனார்ட் ஸ்மித் கூறுவது போல, ‘மூளையின் அளவு அதிகரிக்கத்தான் முடியும் ‘ இந்த வழிமுறை மறைமுக (passive) வழி என்று கூறலாம். இதில் நேரடியாக அறிவுத்திறத்தை பரிணாமம் தேர்வதாக கூற இயலாது. இதற்கு மாறாக, இயற்கைத் தேர்வு நேரடியாக அதிகப்படியான மூளை அளவைத் தேர்வதையும் மூளை அளவு அதிகரிப்பதையும் நேரடியான பரிணாமப் பாதிப்பான வழிமுறையாக இருக்கிறது.

அதிகப்படியான மூளை அளவுள்ள உயிரினங்கள் அதிகரிப்பதையும், குறைந்த மூளை அளவுள்ள உயிரினங்கள் அழிவதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதன் மூலம் தொடர்ந்து வாழ்வதையும் காணலாம்.

செடேசியன் cetacean brain பரிணாமம் பற்றி ஆராய எனக்கும் என் தோழர் டாக்டர் டானியல் மக்சீ அவர்களுக்கும் மான்யம் வழங்கப்பட்டது. (2002) மனிதர்கள் அளவுக்கு ஈ.க்யூ கொண்ட இந்த செடேசியன் உயிரினங்கள், பாலூட்டிகளை விட அதிகமான ஈக்யூக்களைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் செடேசியன்கள் 85 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரே மூதாதையரை மனிதர்களோடு பகிர்கின்றன. இதனால், இவைகளது மூளை வேறு அமைப்பில் அமைந்திருக்கிறது. ஆகவே, இவைகளின் மூளையை ஆராய்வது நமது பரிணாமப் பாதையைவிட வேறான ஒரு பரிணாமப்பாதையில் சென்ற ஒரு உயிரினத்தின் மூளையை ஆராய உதவுகிறது.

அழிந்து போன எலும்பு மட்டுமே இருக்கும் பாஸில்களின் மூளை அளவையும் இன்றையை செடேசியன்களின் மூளை அளவையும் ஒப்பிடுவது போன்றவையே எங்கள் வழி முறை.

எங்களது வேலை மூலம், விண்வெளி உயிரியல் பற்றி இன்று நடக்கும் பேச்சுக்களை அதன் பேச்சளவிலிருந்து விடுவித்து உண்மையான் அறிவியல் பூர்வமான, அளவை அடிப்படை கொண்ட ஒன்றாக மாற்றுவதே நாங்கள் செய்ய விரும்புவது. http://www.seti.org/about_us/voices/marino.html

Series Navigation

லோரி மரினோ, எமரி பல்கலைக்கழகம்

லோரி மரினோ, எமரி பல்கலைக்கழகம்