அப்பா (உள்ளது உள்ளபடி)

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

தேவமைந்தன்


கூடத்தின் நடுவில் அப்பா,
பாக்கமுடையான்பட்டுக் காதிபவனின்
பார்சல் பிரித்த காய்கறி பிரியாணிக்குப் பின்புறம்.
கொக்குப்பாலம் அருகே நெல்லிக்காய் விற்றவனின்
உபதயாரிப்பும் துணைவிற்பனையுமான
நெல்லி ஊறுகாயைச்
சப்புக்கொட்டித் தொட்டுக்கொண்டு.
காரைக் கோவில்பத்து துளசிகடை
எலுமிச்சை சாதத்தை
மாட்டுக்காரர் வீட்டு மண்ணில் எறிந்தவர்.
ஆங்கார நாதர். இருக்கும் இடம் சலித்துவிட்டால்
‘ெ ?ண்ட்டி ‘லாய் அடுத்தபிள்ளை
வீட்டுக்குப் புறப்படாமல்
‘குருே ?த்திரம் ‘ உண்டாக்கிவிட்டு,
‘கூ ‘லாய் நடையைக் கட்டியவர்.
உடம்புடன் போனார் மண்ணுக்கு,
நினைவை எங்களுக்காய் விட்டுவிட்டு.
ஆழ உழுத நினைவுகளை எனக்காக அர்ப்பணித்து,
‘வாழும் ‘ எனக்காக….
காணாமல்போன எண்ணங்களின் உலகம்.
அப்பாவுக்கு இன்றோடு நூற்றியோரு வயது,
இங்கல்ல – அங்கே
நினைவுகள் உறைந்த தளத்தில்..
கவிதையை உள்வாங்குவோர்
குறைந்துவிட்டார்கள்,
உள்ளான் குருவிகள்போல்.
மேலோட்டம், எல்லாவற்றிலும்.
அடுத்தவன் கவிதைத் தலைப்புகளை
கூச்சநாச்சம் இல்லாமல் கரம்பற்றுபவர்கள்,
தலைமை ஏற்கிறார்கள் கவியரங்கம் பலவற்றில்,
குறிப்பாக ‘முட்டாள் பெட்டி ‘க்காக.
தலைமை ஏற்கலாம்; வெல்ல முடியாது,
சொந்த வாழ்க்கையில்.
அர்ச்சுனத் தபசிகளைக் காட்டிலும்
உலகத்துக்குப் பிடித்தவர்கள்,
வியூகமுடைத்து உட்புகுந்து
உள்ளேயே மாண்ட அபிமன்யுக்களே.
அப்பா சொல்வார்.
‘ ‘அவரவர் வினையின் அவரவர் வந்தார்;
அவரவர் வழியே அவரவர் போவார். ‘ ‘
உலகம் யாருக்காகவும் ஒருகணமும் நின்றதில்லை;
யார்இல்லாமலும் யாரும் அழிந்ததில்லை.
தலைவர் போய்விட்ட குடும்பமும் கட்சியும்
மேலும் வளர்ந்தகதை வரலாறு கூறும்.
யார்போன பின்னாலும் எல்லாமும் வாழும்.
அகத்தியம் யாரும்இல்லை அண்டத்துக்கும் பிண்டத்துக்கும்.
ஓரிரு கண்சொட்டுத் தெறித்துவிட்டு
அவரவர் வழியே அவரவர் நடப்பர்.
கூடத்தில், அன்பு ஆன அப்பா!
சப்புக்கொட்டிக் கொண்டு
காய்கறி பிரியாணி, நெல்லி ஊறுகாய்
அப்பாவுடன் மணக்க மணக்க,
அடுத்த நான்.
pasu2tamil@dataone.in

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்