அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

வித்யாசாகர்


என் குடிசை வீட்டு சகோதரிக்கு கூட
காட்டு கலக்காவும், எருக்கம்பூ மாலையும்
மாவிலையும், களிமண்ணும்
காசு வாங்கித் தரும் பண்டிகைக்கு –

தெருவெல்லாம்
மனக்கட்டை மீது கடவுளை செய்து சுமந்து நடக்கும்
மாணவக் கடவுள்களுக்கு –

நம்பினால்;
நான் பிடித்து வைக்கும் பிடி மண்ணில் கூட
அந்த தெய்வமே இறங்குமென,
‘என் முன்னோர் நம்பிய நம்பிக்கைக்கு

அன்னை தந்தையே என் உலகம் என சுற்றிக் காட்டி விலங்குகளுக்குள்ளும்,
அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கும் இறைமையை உணர்த்தும் தும்பிக்கைனாதனை கொண்டாடும் இந்த சிறப்பு விழாவிற்கு –

ஏழை பாழை வீட்டில் கூட
நல்லசோறு பொங்கும் பிள்ளையார் சதுர்த்திக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் தோழர்களே!
———————————————————————————————————————
வித்யாசாகர்

Series Navigation

வித்யாசாகர்

வித்யாசாகர்