அன்பின் வெகுமானமாக…

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

சுகுமாரன்


@

அன்பின் வெகுமானமாக
நீ கொடுத்த பூங்கொத்தின்
ஏதோ ஒரு மலரில் மிஞ்சியிருக்கிறது –
தேன்கூட்டை முழுமையாக்கும்
கடைசித் துளி தேன்.

எது அந்த மலரென்ற
கேள்வியில் விரிகிறது –
காலம்.

19 மார்ச் 2005
—-
sukumaran@SUNNETWORK.ORG

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்