நடாலி ஆன்ஜியர் (நியூயார்க் டைம்ஸ்)
நமது மூதாதையர்கள் ஏன் நான்கு கால்களில் நடப்பதை விட்டு எழுந்து நின்றார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை நட்சத்திரங்களைச் சரியாகப் பார்க்க எழுந்து நின்றிருக்கலாம்.
தேவர்களின் காலடித்தடங்களல்ல, அவை நமது சூரியனைப் போலவே ஒளிவீசும் பலகோடிக்கணக்கான நெருப்புப்பந்துகள் என்று வானத்தைப் பார்ப்பவர்கள் உணர்ந்த போது, அவர்கள் அங்கே எப்படிப் போவது என்று யோசித்தார்கள். சும்மா இங்கே 3,83,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனையும் தாண்டி, பல கோடிக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இந்த சூரியர்களுக்கும் அங்கு இருக்கும் கிரகங்களுக்கும், ஒருவேளை அங்கு இருக்கும் நம்மைப்போன்ற சமுதாயங்களையும் சந்திக்க வரும் ஆவலை யார்தான் கட்டுப்படுத்த முடியும் ?
ஏதேனும் ஒரு அறிவியலாளர்கள் குழு தங்களை ‘மிகவும் ஆசைப்படும் கனவுவாதிகள் ‘ என்று அடையாள அட்டையிலேயே அடித்துக்கொள்ளக்கூடியவர்கள் தவிர வேறு யாருக்கும் இது உடனே நடக்கக்கூடிய காரியமும் அல்ல, யாரும் இதை நோக்கி முயற்சி செய்யப்போவதுமில்லை. ஆனால், ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்த மட்டில், இந்த சவால் தாண்டமுடியாத சவால் அல்ல. இதை நோக்கி முயற்சி செய்வதற்கு எந்த பெளதீக விதிகளும் தடையில்லை. ஆகவே, இதைப்பற்றி இப்பவே யோசித்தால் என்ன குடி முழுகிப்போய்விடப்போகிறது ?
சென்ற மாதம் பாஸ்டனில் நடந்த அறிவியலை முன்னேற்றும் அமெரிக்க சங்கம் (American Association for the Advancement of Science) நடத்திய மாநாட்டில், ஸ்டார் டிரக் தொலைக்காட்சி மெகா சீரியல் மாதிரி, லைக்ரா உடையோடு, விரைத்துக்கொண்டு கிர்க் போல பேசாமல், எப்படி நட்சத்திரங்களுக்கு பயணப்பட முடியும் என்பதை சில அறிவியலாளர்கள் பேசினார்கள்.
இவர்கள் ஒளியின் வேகத்தில் ஒரு பின்ன அளவு வேகத்தில் இந்த நட்சத்திரங்களை அடைவது எப்படி முடியும் என்று பேசினார்கள்.
இன்னும் இங்கு, பல தலைமுறை விண்வெளிப்பிரயாணம் பற்றிப் பேசினார்கள். (அதாவது வெகுகாலம் விண்ணில் குடும்பத்துடன் பயணம் செய்து ஆரம்பிக்கும் தலைமுறை இல்லாமல் ஒரு சந்ததி தலைமுறை ஒரு நட்சத்திரத்தை அடைவது ) இதில் ஜெனடிக் டிரிஃப்ட் எனப்படும் உள்ளுக்குள் இனவிருத்தி செய்வதால் வரும் பிரச்னைகளை எப்படிக் களைவது என்றும் பேசினார்கள். இப்படிப்பட்ட ஒரு விண்வெளிக்குழு எப்படிப்பட்ட கட்டளை சங்கிலியைக் கொண்டிருக்கவேண்டும் என்றும், எந்த மொழியைப் பேச வேண்டும் என்றும், எப்படிப்பட்ட குடும்ப, திருமண கொள்கைகளை கொண்டிருக்க வேண்டும் என்றும், இவர்கள் என்ன என்ன உணவு வகைகளை வளர்க்க வேண்டும் என்றும் பேசினார்கள். ஜீன் ஹண்டர் என்ற கார்னல் பல்கலைக்கழகத்து உயிரியல் சுற்றுச்சூழல் பொறியியல் துணைப் பேராசிரியர் சொல்லும்போது, நிச்சயம் மாட்டுக்கறி, பாலாடைக்கட்டி கேக் போன்றவைகளை விட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் பேசப்பட்ட பல விஷயங்கள், எப்படி ஒற்றைக்கொம்பு குதிரையை குலோனிங் பண்ணுவது போன்று பேசுகிறார்கள் என்று நாம் யோசிக்கவைப்பவை என்பதை மறுக்க முடியாது என்றாலும், பல ஆராய்ச்சியாளர்கள், மிகவும் கடினமான, சாதாரண வாழ்க்கைக்கு பொறுந்தாத இடங்களில் மனித இனம் வெற்றிகரமாக தன்னை மாற்றிக்கொண்டு வாழ்வதை கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும் என்று வாதிட்டார்கள்.
புளோரிடா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக இருக்கும் ஜான் மூர் அவர்கள், இவ்வாறு விண்வெளிப்பிரயாணத்தில் செல்லும் முன்னோடிகளை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் கடலில் பிரயாணம் செய்து இன்றைய பாலினீஸியத் தீவுகளில் இருப்போர்களின் முன்னோர்களுக்கு ஒப்பிடலாம் என்று குறிப்பிட்டார். இளம் மக்கள், பெரும் கலங்களில் கிளம்பினார்கள். அப்போது இவர்களில் யார் திரும்பிவருவார்கள் என்று யாருக்கும் தெரியாது. பலர் கடலில் இறந்தார்கள். இருப்பினும், காலக்கிரமத்தில் இன்றைய நியூசிலாந்து, ஈஸ்டர் தீவுகள், ஹவாய் போன்ற இடங்களில் பாலினீஸியர்கள் தங்கி இனப்பெருக்கம் செய்தார்கள்.
இருப்பினும் மனித வரலாற்றின் எந்த ஒரு மக்கள்தொகை இடப்பெயர்ச்சியும் இந்த முனைப்புக்கு ஒப்பிட முடியாதது. மிக அருகாமையில் இருக்கும் நட்சத்திரம் ஆல்ஃபா செண்டாரி. இது 4.4 ஒளி வருட தூரத்தில் இருக்கிறது. ஒரு ஒளிவருடம் என்பது சுமார் 6 டிரில்லியன் மைல்கள். இதுவரை மனிதன் அனுப்பிய பொருள்களிலேயே மிக அதிக வேகம் கொண்டது ஒரு வினாடிக்கு சுமார் 9.3 மைல்கள் (ஒரு வினாடிக்கு 15 கிலோமீட்டர்கள்) செல்லும் வாயேஜர் கோள்கள்தான் என்று நாஸாவில் பணிபுரியும் ஜியோஃப்ரி கூறுகிறார்.
அந்த வேகத்தில், சுமார் 11000 வருடங்களுக்கு முன்னர் ஒரு குகைவாசி ஒரு கோளை அனுப்பியிருந்தால், மிகச்சமீபத்தில் இருக்கும் ஆல்ஃபா செண்டாரிக்கு சுமார் ஐந்தில் ஒரு பாகத்தையே இன்றைக்கு கடந்திருக்கும் என்று கணக்கிடலாம். ராபர்ட் ஃபார்வேர்ட் என்னும் பார்வேர்ட் அன்லிமிட்டட் என்ற நிறுவனத்தின் தலைவர், ராக்கெட்டுகளின் எடையும், அவற்றில் இருக்கும் எரிபொருளின் எடையும் ஒரு விண்வெளிக்கப்பலை தேவைப்பட்ட வேகத்துக்கு செல்லமுடியாமல் தடுத்துவிடும் என்று கூறுகிறார். அவர் கற்பனை செய்வது, ராக்கெட் எரிபொருள் இல்லாத ஒரு விண்கலம், அதில் டெக்ஸாஸ் அளவுக்கு பெரிய பாய்மரப்பாயும், ஒரு சிறிய பாலம் அளவுக்கு பொருள்களும் உடைய ஒரு விண்கலம். இதன் மூலம் கணக்கிடுவதில், ஒளிவேகத்தில் மூன்றில் ஒரு பங்கு வேகத்துக்கு விண்கலம் செல்லும் என்று பார்க்கலாம் (சுமார் 55000 மைல் ஒரு வினாடிக்கு)
சில 16 வயதுக்காரர்களைப் பிடித்து, அவர்களுக்கு பயிற்சி தந்து 20 வயதில் அவர்களை வானத்தில் அனுப்பி, பலத்த போரடிக்கும் பயணத்துக்கு அப்பால், ஆல்ஃபா செண்டாரியை அணுகும்போது அவர்களுக்கு சுமார் 60 அல்லது 70 வயதாகி இருக்கும். பிறகு அங்கு சற்று சுற்றிப்பார்த்துவிட்டு, அங்கு கண்டதை பூமிக்கு செய்தியாக அனுப்பலாம்.
இன்னும் நீளமான பயணங்களுக்கு, விண்கலத்திலேயே இருக்கும் என்ஜினும், எரிபொருளும் தேவை. அணுகுண்டுகளைக்கொண்டு வேண்டுமென்றால் எரிபொருள் தயாரிக்கலாம். அல்லது பொருளையும் எதிர்ப்பொருளையும் கலந்து வினையின் விளைவாக கிடைக்கும் சக்தியைக்கொண்டு பயணம் செய்யலாம்.
எப்படி விண்கலத்தை வானத்தில் தள்ளினாலும், அதற்குள் செயற்கை புவியீர்ப்பு விசை வேண்டும் என்றும், உள்ளே அழகாக (டிஸ்னியைக்கொண்டு) வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் ஆராய்ச்சியாளர்கள் வாதிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், விண்கலத்தின் உள்ளே ஒரு ஷாப்பிங் மால் போல வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும், உள்ளே இருக்கும் இடத்தைவிட அதிக இடம் இருப்பது போன்ற் பிரமையைத் தருவதாகவும் இருக்கவேண்டும் என்றும் கோரினார்கள்.
குடும்பத்தை அழைத்துவர ஷாப்பிங் மால்கள் சிறந்த இடங்கள். விண்வெளிப்பிரயாணத்தின் வெற்றிக்கு பாரம்பரிய குடும்பம் முக்கியமான தேவை என்று மூர் குறிப்பிட்டார்.
மூர் மற்றும் அவரது சகாக்கள் ஒரு கணினி செயற்கை வடிவமைப்பில்(computer simulation), விண்கலக்குழு சுமார் 80 பேரைக்கொண்டதாக இருந்தால்தான் சுமார் 1000 வருடங்களுக்குத் தாக்குப்பிடிக்கும் என்று கணக்கிட்டார்கள். இதில் சட்டத்தை எல்லாம் ஏற்படுத்தினார்கள். அதாவது பெண்கள் 35 வயதுவரை குழந்தை பெறாமல் இருக்க வேண்டும் என்றும், அப்படியே பெற்றாலும் 2 குழந்தைகள் மட்டுமே அதிகபட்சம் பெற வேண்டும் என்றும் சட்டம் வைத்துக்கொண்டார்கள். அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறை ஒவ்வொரு இனப்பெருக்கத்தின் போதும் நடக்கும் குரோமசோம் சிதைவுக்கான வாய்ப்பைக் குறைக்கும். அதே நேரத்தில் இது அந்த மூடிய மக்கள்தொகையின் மரபணு வித்தியாசத்தையும் பரவலையும் பாதுகாக்கும்.
மரபணு வித்தியாசமும் பரவலும் முக்கியம்தான். ஆனால், மிச்சிகன் பல்கலைக்கழத்தில் மொழியியல் பேராசிரியராக இருக்கும் சாரா தாம்ஸன் அவர்கள் எல்லோரும் ஒரே மொழியைப் பேசவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆகவே முதல் விண்வெளிக்குழுவுக்கு மொழி ஆங்கிலமாகத்தான் இருக்கும் என்று அவர் சொன்னார்.
‘அவர்களது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் விண்வெளி ஆங்கிலம் பேசுவார்கள். ஆறுகள், பனிக்காலம், பனி, கொசு போன்ற வார்த்தைகள் அவர்கள் மொழியிலிருந்து அழியும். மனித ஆக்கத்தின் விளிம்புகளைப் பரிசோதிக்கும் இன்னொரு பகுதி விண்வெளி சமையல். மாடுகள், ஆடுகள் இல்லாமல், சாப்பாடு கொண்டுவர உப துணைக்கலங்கள் இல்லாமல், அவர்கள் தன்னிறைவு கொண்டவர்களாக இருக்க வேண்டும். வெறும் தண்ணீரில் விளையும் தாவரங்கள் கொண்ட தோட்டங்களை இவர் கற்பனை செய்கிறார்.
இத்தோடு கூட, விவசாய ஆராய்ச்சியாளர்கள், மைக்ரோப் என்னும் நுண்ணுயிரிகளைப் பற்றி ஆராய்கிறார்கள். பிளமெண்டஸ் மோல்ட் filamentous mold என்னும் பாசம் உருவாக்கும் குவொர்ன்quorn என்னும் புரோட்டான் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பேசினார்கள். விளையாட்டுக்கல்ல, இது உண்மையிலேயே கோழிக்கறி போன்ற ருசி கொண்டது.
***
- அன்புள்ள தோழிக்கு….
- பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்
- பெண்படைப்பாளிகளின் தொகுப்பு – ஊடறு பற்றி…
- விதியோ ?
- அநித்தமும் அநாத்மமும் (ஆன்மா குறித்து நாகசேனருக்கும் மினான்டருக்கும் இடையே நடந்த உரையாடல்)
- திலகபாமாவின் புத்தக வெளியீடு
- பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்
- புதுவருடத்தில் வேண்டும் என்று 10 பாகிஸ்தானிய ஆசைகள்
- ஏனோ ….
- சுய ரூபம்
- வால்மீனின் போக்கை வகுத்த எட்மன்ட் ஹாலி [Edmond Halley](1656-1742)
- நிழல் யுத்தம்
- தேர்தல்
- நானொரு பாரதி தாசன்!
- எரிமலைப் பொங்கல்
- பூவின் முகவரி
- அமைதி
- ஞானம்
- விக்ரமாதித்யன் கவிதைகள்
- வெட்கமில்லா ஊரில் வெட்கமில்லை!
- நேர்ந்தது
- கடிதங்கள்
- உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்
- அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி
- தேவை ஒரு சுத்தமான பாத்ரூம்
- இந்த வாரம் இப்படி (ஜனவரி, 4, 2003) (இந்தப் பகுதி பற்றி, பர்தா கொலைகள், திராவிடத்வா)
- பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம்
- அனுமன் வேதம்
- ‘காங்ரீட் ‘ வனத்துக் குருவிகள்!
- சிறு கவிதைகள்
- இறைவன் அருள் வேண்டும்
- வரம் வேண்டி
- ஸ்ரீஆஞ்சனேயன்..
- மீண்டு(ம்) வருமா வசந்தம்… ?
- நீ வருவாய் என..
- அடுத்த நிறுத்தம் – ஆல்ஃபா செண்டாரி
- அறிவியல் துளிகள்