அக்கினிப் பூக்கள் – 6

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

சி. ஜெயபாரதன், கனடா


பெண்ணென்றால் பேயும் இரங்குமாம் !
மருமகளுக்குப் பிரதம எதிரி யார் ?
வரதட்சணைக்கு மடி விரிப்பது யார் ?
புருசன் பெட்ரோல் ஊற்ற
சீதாவைத் தீக்குளிக்க செய்வது மாமியார்
ஞானப் பெண்ணே ?

பாதிப்பேர் முட்டாள் என்றேன், அந்த ஊரில்
பளாரென அறைந்தார் முகத்தில் !
பாதிப்பேர் அறிஞர் என்றேன், இந்த ஊரில்
பூமாலை விழுந்தது கழுத்தில் !
ஞானப் பெண்ணே !

சாவித்திரி எமன் பின் சென்று கணவன்
ஆவியை மீட்டு வந்தாள் !
கோவலன் கள்வனோ எனக் கண்ணகி
கொற்றவன் முன் உடைத்தாள் சிலம்பை !
பெண்ணுக்குப் போராடும் கண்ணன் பிறப்பனோ
ஞானப் பெண்ணே ?

வேடத்துடன் மெய்யாக நடிகரெலாம் நடித்தார்
நாடக மேடையிலே ! முன்னமர்ந்து
வேடிக்கை பார்ப்போ ரெல்லாம்
மூடி அணிந்து பொய்யாகக் கண்ணீர் வடித்தார்
ஞானப் பெண்ணே !

மேலே ஏறியவன் எள்ளி நகையாடிக்
கீழே தள்ளினான் ஏணியை !
மௌனமாய் ஏணி சொன்னது :
“இமயத்தில் ஏறியவர் தங்க முடியாது” என்று
ஞானப் பெண்ணே ?
>br>

தோட்டக்காரனைப் பார்த்தும் கீழே இறங்குவோனை
“என்னடா செய்கிறாய்?” என்று கேட்டான் தோட்டக்காரன்.
“தேங்காய் தேடப் போனேன்” என்று சொன்னான் வாலிபன்.
தேங்காய் ஏதடா பனை மரத்தில்” என்றான் தோட்டக்காரன்.
“அதனால்தான் இறங்குகிறேன்,” என்பான் வாலிபன்.

++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 24, 2007

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா