“இதற்கு முன்”

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

கே.பாலமுருகன்


இதற்கு முன் நான்
அவனைப் பார்த்ததில்லை
எப்பொழுதோ ஒரு நாள்
வீட்டு வாசலில் அவன் காத்திருந்தான்.
நான் கடந்து போகையிலும்கூட
அவனை இதற்கு முன் பார்த்தாகத்
தெரியவில்லைதான்.
அவன் முற்றத்து மஞ்சள் பூக்களாகத்
தெரிகிறான்.
திடீரென்று உயர வளர்ந்து
வானம் போல் விரிந்து கொள்கிறான்.
அவனுக்கென்று எந்த விதிகளும் இல்லாத பொழுதில்
மரணத்தைப் பற்றி அவன் பேசுவதாகத் தெரியவில்லை.
அவன் தனிமையில்தான் காத்துக் கிடக்கிறான்.
மனித மரணங்கள் குறித்து
அவனுக்கு கணமான நம்பிக்கையுண்டு.
இதற்கு முன் அவன் அப்படி இருந்ததாகத்
தெரியவில்லை.
அவனும் நானும் ஒன்றுபோல் தெரியும்
ஒரு மங்கிய வெளிச்சத்தில்தான்
மரணம் பற்றிய பிரக்ஞை
ஊன்றுகோளுடன் நடந்து கொண்டிருக்கிறது!


கே.பாலமுருகன் மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்