வேர்வாசிகள்
பிச்சினிக்காடு இளங்கோ

வாழ்க்கையை
விரும்பியவர்கள்
மண் சுதந்திரத்தை
மறுதலித்தார்கள்
மண்சுதந்தரம்
மானமென்றவர்கள்
வெடித்துச்சிதறினார்கள்
களத்தில் நில்லாமல்
காகிதத்தில் நின்றவர்கள்
புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள்
கல்லறைகளில் எழும்
கட்டடத்தில் குடிபுக
மல்லுகட்டுகிறார்கள்
ஜனநாயகத்துணையுடன்….
—-
pichinikkaduelango@yahoo.com