வேத வனம் -விருட்சம் 62

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

எஸ்ஸார்சி


உத்தமன் விசுவ கர்மன்
நான்கும் தெரிந்தவன்
படைப்போன் காப்போன்
தேவர்கட்குப்பெயர் வைப்போன்
முனிவர்கள் தாமே அவனுக்கு
வேள்வி செய்கிறார்கள்

நீரில் நின்றது ஒரு கரு
விண்ணுக்கும் புவிக்கும்
தேவர்க்கும் எட்டா நின்றது
பிறவா அஜனின் நடு நாபியில்
கிடந்தது அது
இப்புவனத்தின் மூலம்

புவனும் படைத்தோனை
நீவீர் அறியமாட்டீர்
உள்ளதில் உறைவோனை
அந்நியனாய் உணர்வீர்
அறியாமைத்திரை
மூடுபனிபோல்
உயிராசை விடுவதாய் இல்லை
பிதற்றும் மொழிச் சிறை
சங்கிலியாய்ச்சடங்குகள் (ரிக் 10/82 )

மன்யுவைப்போற்றுவோம்
இந்திரன் அவன்
தேவனும் அவனே
விஷயம் தெரிந்த வருணனவன்
மன்யுவே வலு தருவோன்
பலவான் அவன்
வல்லமை தருவோன்
ஆரியனை தாசனை
வெல்ல நட்புக்கரம் அருளி
மன்யுவே சோமம் பருகட்டும்
தச்யுக்களை அழித்திடவே
வருகை புரியட்டும் (ரிக் 10/83)

அக்கினித்தேவனே
எம் மனைவியை மீண்டும்
எமக்களிக்கவும்
நூறாண்டுகாலம் யாம் வாழ்வோமாக
சோமன் முதலில் அடைந்து
பின்னர் கந்தர்வன் வசமாகி
அக்கினியோ மூன்றாவது கணவனான்
நான்காவது கணவனே மானுடன்
பத்துப்புதல்வர்கள்அவள் பெறுக
கணவன் பதினோறாவது புதல்வனா கட்டும்
மாமனுக்கும் மாமிக்கும்
நாத்திக்கும் மைத்துனனுக்கும்
அரசியாகிறாள் அவள் ( ரிக் 10/85 )

தேவர்கள் புருடனை
ஜனனம் செய்தார்கள்
புருடன் வேள்வியில் பலியானான்
நெய்யும் தயிரும் தோன்றின
மிருகங்கள் சனித்தன
ருக்கு யஜுர் சாமங்கள்
சந்தங்கள் தோன்றின
வாயாகப் பிராமணன்
கைகளாய் அரசன்
தொடையாய் வைசியன்
பாதங்களாய் ஏனையோர்
மனம் வழி சந்திரன்
கண் வழி சூரியன்
வாய் வழி அக்கினி
சுவாசம் வாயுவை
தலை வானை
சிரசு விண்ணை
கால் புவியை
செவி திசைகளைக்
கொணர்ந்துப்
புருடன் பலி முடிய
மகாத்மாக்கள் மொத்தமாய்ச்
சொர்க்கம் சேர்ந்தனர். (ரிக் 10/89 )

——————————————————–

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி