வேத வனம் விருட்சம் 54

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

எஸ்ஸார்சி


மனத்தால் பிணைபடு தேருடை
அசுவினிகளே அழகர்களே
உஷையைப் பின் பற்றுங்கள்
எங்களுக்கு ஆவினம்
மறப்புதல்வர்
புரவி யொடு வளமை தாரும்
வேள்விச்செல்வர் நீவிர் ஆங்கே
அவிகொடுப்போர் யாம்

பாதுகாப்புடை மனை தருக
அறிஞர்களைக் காப்பவர் நீவிர்
வழிபடு ஏனையர் வசம்
தங்கி எமக்கு த்தாமதம் செய்யாதீர்

உமது தேர் பீடம் பொன்
உமது தேரச்சு பொன்
தேர் சக்கரம் பொன்
கடிவாளம் கூடப் பொன்னே
தேர் ஒளியைப் பொழிகிறது
தாசர்கள் வாழிடம் தகர்க்கும் நீவிர்
உணவொடு புகழ் செல்வம்
கொண்டு தாரும் எமக்கு ( ரிக் 8/5 )

அசுவினிகளே செல்வர்களே
உமது தேரில்
சூரியை அமர்ந்தவுடன்
உமது விருப்பங்கள் நிறைவுற்றன

வெட்கம் பந்தப்படுத்தா
செல்வம் தருக எமக்கு
உரிய காலத்தே
மக்கட்பேறருள்க
நிந்தைக்கு எம்மை ஆட்படா
வாழ்வு தாரும்

அசுவினிகளே உமது
தேரின் முச்சக்கரங்கள்
பார்வைக்கு அகப்படாதவை
இப்போது புலனாகின்றன
யாம் தொலைத்தவை
எமக்கு மீட்பர் நீவிர்
சத்தியம் காப்போம் யாம்
எம்முன் வாரும் நீரே (ரிக் 8/8 )

அக்கினி அனலொடு
எமக்கு சுகம் தருக
சூரியன் ஒளிச்சுகம் தருக
மாசிலாக் காற்று வீசி இனிமை தருக

எங்களுக்கு க்கேட்டைத்தேடும்
கொடிய மானிடன்
தனக்கே அது அதுவாகி
இடறுருவான்
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோன்
எமக்கு இடர் தருவோன்

பழித்துப்பேசி பகைவளர்ப்போன்
பாவம் கூட்டிகள்
மானிடர் இதயம் அறிந்த நீவிர்
கயவன் யார் என்பதையுமறிவீர்கள் ( ரிக்8/18 )
————————————————
essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி