வேத வனம் -விருட்சம் 39

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

எஸ்ஸார்சி


அக்கினி அறிஞன்
அறிஞர்களின் தடம் தெரிந்தோன்
இருட்டின் கதவுகள் திறப்பவன்
போற்றிப்பாட
துதித்துப்புகழந்திட வளர்பவன்

தண்ணீரின் கரு அவன்
நீரின் நண்பன்
மனிதர் இல்லம் நடுவே
தேவர்களால் கொணரப்பட்டவன்

தூண்டிட அவன்
துணை வருவான்
வழிகாட்டி
வருணன்
அக்கினி ஒளியைப்பொழிபவன்
அமைச்சன் அவன்
வீட்டுச்சேவகன் அவனே
ஒடும் நதிகளுக்கு
உயர்ந்த பர்வதங்களுக்கு
தோழன் அக்கினி.

நீரைச்செய்தவன் அக்கினி
நீரைக்காப்பவன் அவனே
சுத்தன் அவன்
சர்வ வியாபி
நெருப்பும் நிலமும்
அவன் பெற்றோர்
பெற்றோரை எப்போதும் புதுக்குபவன் அக்கினி ( ரிக் 3/5)

விபாசா சுதுத்ரி இரு நதிகளே
நீங்கள் கடலுக்குப்பாயும்
கடிவாளம் தளர்ந்த புரவிகள்
கன்று முகம் காண விரை
இரு பசுக்கள்

விசுவாமித்திர முனியே
நிலம் வளம் பெற்றது
நாங்கள் கடலுக்குப் பயணம் செய்கிறோம்

சோமம் கொணர எனது பயணம்
வழி தாருங்கள் நதிகளே

விருத்திரன் எங்கள் தடம் அழிக்க
இந்திரன் வச்சிராயுதன்
அவனை முடிக்க
தேவ சவிதா
எங்கள் நீர்த்தடம் வழிப்படுத்தினான்
br>
ஆம் நதிகளே
இந்திரன் மிகுவீரன்
நதிகட்கு வாழ்வு தந்தவன்
அஹியை த்துணித்தவன்

சிரேட்ட முனியே
மறவாதிரும் இம்மகிமையை
காலம் காலமாய்
புவி வரு சனங்கள்
இதை ப்போற்றிப்புகழட்டும்

கவி நீ உன் சூக்தங்களில்
எம் அன்பைக்கொண்டு தா
மனிதரிடை எம்மை நீ உயர்த்து
வணக்கம் சொல்கிறோம் உமக்கு
குழவிக்குப் பால்முலைகாட்டும் அன்னையாய்
கணவன் மார்புதழுவும் தாரமாய்
உம்மைப்பணிகிறோம் யாம்

முனி நதி கடந்தான்
ஆவினம் தேடும்
பரத சனம் நதி கடந்தது

நதிகளே வளம் தாரும்
அன்னமாய் அள்ளித் தாரும்
நிறைக நிரப்புக
சீறுக பாய்ந்தோடுக ( ரிக் 3/33 )


essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி