வேத வனம் விருட்சம் 28

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

எஸ்ஸார்சி


யான் என்பது துற
விடுதலை கைமேல்
யான் அது உள்ளவரை
உனக்கு ஏது விடுதலை
மனிதனுக்கு யானே விலங்கு
யான் அந்நியப்படப்பட
விடுதலை நின் அருகில்
பொறாமை
பேராசை
சினம்
சுய நலம்
வெறுப்பு
தன்னை த்தான்
அறிய மட்டுமே தொலையும் இவை

தூய்மை
அமைதி
பிறர் நலம்
போதுமென்னும் ஒரு பொன்குணம்
அண்டப்பெருவெளி மீது அயராக் காதல்
அறக்குணத்து சனிப்பவை இவை.

வந்துவிட்ட இடும்பை
எதிர் நிற்கும் துன்பம்
வரவிருக்கும் தீமை
தன்னை அறிய
தடைகளாய்த்தான் இவை
எப்படி வெல்வாய் நீ
வைராக்கியம் தொடர் ஆன்ம விசாரணை
வெல்லும் வந்தவிட்ட இடும்பைகளை
புலன் கொணர் பசியை வெல்
எதிற் நிற்பது துன்பம்
எப்படி ச்சாத்தியம் அது
சரியானதொரு முடிவே
காசொடு மனைவி மக்களை
வென்று செல்லும்.

கசடறக்கல்லாதவனா நீ
நல்லது தொடர்ந்து கேள்
தவறாய்த் தெளிந்தவனா
ஒயாது பெறுக குரு அருள்

திரிந்துபோனதா நம்பிக்கை
ஒயாத் தியானம்
ஒன்றே வழி

அகங்காரம் ஆட்சி செய்கிறதா
பெரு மெளனம் மட்டுமே மருந்து
வருவிருக்கும் தீமையோ
இன்னும் தொடரும் பிறப்பு
பிறந்து மட்டுமே
தொலைக்கத்தொலையும் அது
நடந்தே கழியணும் தூரம். ஆனந்த பிந்து உபநிசத் 6-8


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி