விக்னேஷ் கவிதைகள் ஐந்து

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue


குடிகாரன்

மரச்சீனி குழி வெட்டி,
வயல்ல வரப்பு கட்டி
மேலெல்லாம் ஒரே வேதனை.
பொழுதெல்லாம் புழுதில கிடந்து
பொழுதணையும்போ
பத்து பைசா ஊறுகாயும்
பட்டை சாராயம் ஒரு கிளாசும் அடிச்சு,
கலுங்கில இருந்து கதைபேசும்போ
நல்லா இருக்கும்.
வேதனை மறக்க பட்டையடிச்சு
பட்டையடிக்க சம்பாதிச்சு,
சைக்கிள் டயர்போல
நட்டெல்லில்லா வட்டமாக் கிறங்கும்
எங்க ஜ ‘விதம்.
குடிகாரப் பாவின்னு சீத்த விளிப்பான்
பார்ட்டி முடிஞ்சு வர பணக்கார தொர…

+

கிழிசல் கலாச்சாரம்

நல்ல துணி
கிழிஞ்சு போச்சுண்ணு
அழுதுட்டே போனா
பள்ளிக்கூடம் போற என் செல்ல மக…
கார்ல வந்த ஒரு
காலேஜ் பொண்ணு
கிழிஞ்ச துணி தான் நல்லாயிருக்குண்ணு
நல்ல துணியை கிழிச்சு போடறா….
ராசா…
பள்ளிக்கூடத்துக்கும்
காலேஜ ‘க்கும் எம்புட்டு தூரம்பா….

+

சமத்துவம்

சந்தை கூடிச்சு,
மரக்கறி எல்லாம் ஒருபக்கம்,
மீனெல்லாம் ஒரு பக்கம்,
கருவாடெல்லாம் இன்னொரு பக்கம்,
சந்தை கலஞ்சதுக்கு பொறவு
சமத்துவமா கிடக்கும்
காியிலைகளும், மீன் நாற்றமும்.

+

தலையெழுத்து

தொட்டாடி பில்லு பறிச்சு
ஆட்டுக்கு போடணும்,
ஆடு தொடா இலையை ஆடு தொடாது.
பசுவுக்கு
மாவிலை, பலா இலை எல்லாம் போடலாம்,
எருமைக்கு
வைக்கோல் தான் நல்லது…
பிண்ணாக்கு வாங்கினா
எல்லாத்துக்கும் போடலாம்….
எல்லா பாலும் வெள்ளைதான்
ஆனாலும் வேற வாசம், வேற சுவை.
விசயம் எல்லாம் நல்லா தொியும்….
தலையெழுத்து…
மாடு வாங்க தான் வசதியில்ல.

+

உறக்கம்

பகல் முழுக்க நாய் வேல,
பேயா மனசு அலஞ்சாலும்
ராத்திாி நல்லா உறக்கம் வரும்
ஆனா வெளுபாங்காலம் வேலை இருக்கே…
கோழி கூவுறதுக்கு முன்னாடியே
எழும்பியாகணும்.
நல்ல தணுப்பு உறங்க சொல்லும்,
கண்ணு எாியும்…
ஒரு நாளாவது
போவாம இருக்கணும்ன்னு தோணும்.
அப்போதான் புரண்டு படுக்கிற
பையன் காலு மேல விழும்.
சட்டுண்ணு எழும்புவேன்.
அவனாவது படிக்கட்டும்
உறக்கம் என்ன வேண்டிக்கெடக்கு எனக்கு.

+

Series Navigation

விக்னேஷ்

விக்னேஷ்