வறுமையே! வறுமையே!
புஷ்பா கிறிஸ்ரி

என்னை நேசிக்கும் வறுமையே
என்னை விட்டு நீ போகாதே
கண்ணைக் கட்டி கடலில் விட்டாலும்
கண்ணுள் தெரிந்திடும் வறுமையே
உன்னை நான் விடுவதாயில்லை..
நான் உன்னோடு, உயிரோடு,
உடலோடு, ஒன்றாகிறேன்..
என் மரணம் நிச்சயிக்கப் படும்
ஓர் இரவில், என்னோடு கூட
நீயும் படுத்திருப்பாய்..
என் மரணம் சம்பவிக்கும் போது
என்னுடன் நீயும் சங்கமிப்பாய்..
என் பாத யாத்திரை தொடங்கும் போது
உன் வாழ்வும் தொடரும்..
நீ என்னோடு முடிந்து விடு..
இனி வரும் காலங்களில்
வாழ வரும் மனிதனையேனும்
நீ வாழவைத்து விடு,..
என்னோடு நீயும்
மடிந்து விடு வறுமையே!
pushpa_christy@yahoo.com