யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


காஸா பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்படுவதை தொலைகாட்சிகளில் பார்த்திருப்பீர்கள். முற்போக்குவாதியாக இருந்தால் ஆரவாரமாக நீங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கவும் கூடும். பாலஸ்தீனியர்கள் என கபட நாடக- மதச்சார்பின்மை திமிகளால் அழைக்கப்படும் இஸ்ரேலிய அராபியர்கள் அது குறித்து ஏகே-47களை வெடித்து அவர்களுக்கே உரிய பண்பாடுடைய முறையில் கொண்டாடியதையும் கண்டு ‘இதல்லவா ஹமாஸின் வெற்றி ‘ என்று ஆனந்தப்பட்டிருப்பீர்கள். ஆனால் யூதர்கள் காஸாவை விட்டு வெளியேறிய பின்னர் நடந்துள்ள விசயங்களின் மற்றொரு பரிமாணத்தை இப்போது காணலாம்.

ஆரோன் கெலியின் ‘வோர்ல்ட் நெட் டெய்லி ‘ பத்திரிகையின் தற்போதைய ஜெருசலேம் நிருபர். அராபிய பயங்கரவாதியான யாசர் அராபத், எகூத் பராக், மகமத் அல் அசார் மற்றும் இதர தலிபானிய தலைவர்கள் போன்றவர்களை பேட்டி எடுத்தவர். ஆகஸ்ட் மாத காஸாபகுதி யூதர்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அங்கு காலம் காலமாக வாழ்ந்துவந்த அராபியர் சிலரை அவர் பேட்டி கண்டார். விளைவு அவருக்கே அதிசயமாக போயிருக்க வேண்டும். யூத ‘பசுமை வீடுகளில் ‘ பணியாற்றிய மகமூது ‘இதனால் எனக்கு பணி போவதுடன் நான் நல்ல நண்பர்களை இழக்கிறேன் ‘ என்றார். பகூத் 63 வயதான மற்றோர் அராபியர். ‘என் தகப்பனார் காலத்திலிருந்து நான் இங்கே வேலை செய்து வந்துள்ளேன். மூன்று தலைமுறைகளாக நாங்கள் யூதர்களுடன் பணியாற்றியுள்ளோம். என்னைப் பொறுத்தவரையில் (யூதர்களுடனானது) சிறந்த வாழ்க்கையாக இருந்திருக்கிறது. யூதர்கள் வீடுகளில் எல்லா விசேஷங்களுக்கும் திருமணங்களுக்கும் எங்களுக்கு அழைப்பு உண்டு. ‘ என தமது ஆகஸ்டுக்கு முந்தைய வாழ்க்கையை ஏக்கதுடன் நினைத்துப் பார்த்திருக்கிறார். 42 வயதான் சகீதுக்கும் இதே போன்ற எண்ணங்கள்தாம். தனது யூத மேலதிகாரிகள் தம்மை தோழமையுடன் நடத்தியதையும் எண்ணிப்பார்க்கிறார் அவர். ஏற்கனவே காஸா பகுதியில் ஆடல்-பாடல்களை ஹமாஸ் தலிபானியத்தனமாக தடை செய்துள்ளது. ஒரு தலிபானிய பிரதேசமாக தமது பிரதேசம் மாற்றப்படுவதை இம்மக்கள் அச்சத்துடன் எதிர்நோக்குகின்றனர். மேலும் இதுவரை ஆனந்தமாக வாழ்ந்து வந்த இஸ்ரேலிய அராபியர்கள் இந்த வெறியர்களிடமிருந்து தமக்கு பிரச்சனைகள் வரலாம் என கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் யூத வெளியேற்றத்திற்கு பிறகு விவசாயம் செய்ய வந்த அராபியர்கள் பூச்சிகளை அகற்றுவதில் படு தோல்வியைக் கண்டிருக்கிறார்கள். வெறியாட்ட ஆர்ப்பாட்டத்துடன் காஸாவிற்குள் நுழைந்த பாலஸ்தீனிய பயங்கரவாதக் கூட்டம் பல இஸ்ரேலிய பசுமை-வீடுகளை நாசம் செய்தது. 890 ஏக்கர்களில் யூதர்கள் உருவாக்கியிருந்த இப்பசுமை மையங்களில் பாலஸ்தீனிய அத்தாரிட்டிக்கு, தமது அடங்காப்பிள்ளைகளின் வெறியாட்டத்திற்கு பிறகு 75 சதவிகிதத்தையே மீட்டெடுக்க முடிந்திருக்கிறது முப்பது வருடங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு யூதர்கள் குடியேறிய போது அப்பகுதிகளில் வாழ்ந்த அராபியர்கள் இந்த ‘சபிக்கப்பட்ட ‘ நிலத்தில் அவர்கள் எப்படி வேளாண்மை செய்யப்போகிறார்கள் என ஆச்சரியப்பட்டனர். ஆனால் யூத முயற்சிகளுக்கு பலனை பாலைவனங்களில் பூத்த பசுமையில் அவர்கள் கண்டனர். பன்மை பயிர் செய்யப்பட்ட காசாவில் இன்றைக்கு ஸ்ட்ராபெரி மட்டுமே பயிர் செய்யப்படுவதாக கூறுகிறார் அருட்ஷெவா செய்தி அமைப்பில் ஹிலல் பெண்டால்.

தொலைக்காட்சிகளில் பரப்பப்படும் ஹமாஸின் கொண்டாட்டங்களுக்கு அப்பால் எளிய இஸ்ரேலிய அராபியர்களின் யூதர்களின் வரவிற்கான ஏக்கம் அறியப்படாமலே போகிறது. ஆழமாக அறியப்படாத விசயம் ‘பாலஸ்தீனிய ‘ பிரச்சனை இஸ்ரேலிய அராபிகளின் வாழ்வியல் உரிமை குறித்ததல்ல, பான்-இஸ்லாமிய இறையியலின் யூதர்கள் மீதான அதீத-காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான்.

‘O ye who believe! Take not the Jews and Christians for friends…. ‘ – [குரான் 5:51]

[நன்றி:

July 20, 2005: WorldNetDaily: ‘Palestinians: Gaza evacuation bad for us ‘ Arab workers to lose income, fear hard-line Islamist rule, உரல் : http://www.worldnetdaily.com/news/article.asp ?ARTICLE_ID=45354

டிசம்பர் 13, 2005, அருட்ஷெவா, இஸ்ரேலிய செய்தி நிறுவனம், ‘PA Farmers in Gaza: How Do Those Israelis Do It ? ‘ by Hillel Fendel]

aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்