யார் அந்த தேவதை!
Published May 15, 2011 • By
ரசிகன்
ரசிகன்

என்னை
கடந்து செல்லும்
பெண்ணவள் தோழிக்கூட்டமும்
தேரோட்டம் தான்!
யாரிந்த பெண்ணோ
கதை பேசி நடக்கின்றாள்…
என்னுடலில் கை தீண்டாமல்
உயிர் கொன்று போகின்றாள்…
முட்டும் சாலை வளைவில்
முகம் திருப்பி
என்னுயிர் தூக்கி எறிகின்றாள்!
அப்பக்கம் வந்த
பட்டாம்பூச்சி
எனை பார்த்து கேட்கிறது…
அலட்டிக்கொள்ளாத
ஒரு அழகு..
மடிப்பு கலையாத கைக்குட்டை
சிவப்பு சாயம் பூசிய சிரிப்பு…
யார் அந்த தேவதை???
– ரசிகன்