யாரோ, அவர் யாரோ ?

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

சோதிப் பிரகாசம்


யார் அவர் ? சுரேஷின் நண்பர்!

மிகவும் சிறிதாக அவர் ஒரு மடல் எழுத, மிகவும் பெரிதாக அதற்கு ஜெயமோகன் பதில் எழுதி இருக்கிறார் என்றால், அதில் ஏதோ ஒரு சிறப்பு இருந்துதான் இருக்க வேண்டும் என்று நம் எல்லோர்க்கும் தோன்றுகிறது

ஆனால், சுரேஷின் நண்பருக்கு இப்படித் தோன்றிட வில்லையோ என்னவோ, ஜெயமோகனை எதிர் கொள்வதற்கு இன்னமும் அவர் முற்படாமல் இருக்கிறார்.

கதை-கவிதைகளைப் பற்றியும் கிசு-கிசுப்புகள் மற்றும் துண்டு-துக்காணிகளையும் பற்றியும்தாம் சுரேஷின் நண்பர் எழுதி இருந்ததாக நமக்கு ஞாபகம்! ஆனால், அனைத்து இலக்கியங்களையும் போதைப் பொருள்கள் என்று அவர் மொழிந்து தள்ளி விட்டதாக அவரை ஜெய மோகன் கருதிக் கொள்கிறார் என்றால், இந்தச் சறுக்கல் மட்டும் போதாதா, ஜெய மோகனை அவர் எதிர் கொள்வதற்கு ?

சுரேஷின் நண்பரே, களத்தில் இறங்குங்கள்! வெற்றி வாகையினைச் சூட்டி உங்களை வரவேற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். வெளியே வாருங்கள்.

வருவீர்களா ?

sothipiragasam@yahoo.co.in

தொலை பேசி எண்கள்: சென்னை: 2617 2823; 2644 463

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்