மைக்கல் ஜாக்சன்

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

ரஜித்


மழைத்துளிகளை
எண்ணிவிட்டேன்
உன்னிடம் மயங்கிய
மக்கட் துளிகளை
எப்படி எண்ணுவேன்?

உதிரும் சொல் விலை
ஒரு கோடி
அதிரும் அசைவுகள்
அறுபது கோடி

நீயே செய்துகொண்டாய்
உன் சொர்க்கத்தை
கடவுளுக்கு
வேலை மிச்சம்

உன் இசையும் அசையும்
கடவுள் தந்தது
பங்காளி உனக்கு
கடவுள் மட்டுமே

உன் கண்ணொளியில்
கூசிப்போகிறான் கதிரவன்
உன் ‘திரில்லர்’ வட்டு
‘பாப்’ உலகத்தைத்
திருகிப் போட்டது
வட்டுக்கள் விற்ற கணக்கு
மில்லியனில் முன்னூறாம்

வங்கமென விரிந்தது
வங்கிக் கணக்கு
பின் வழக்குகள் தின்றதால்
வற்றிப் போனது

ஐந்தில் அரங்கேறினாய்
ஐம்பதில் அடங்கிவிட்டாய்
ஒளிக் கீற்றாய் வாழ்ந்தாய்
இன்று ஒளிவட்டாய் வாழ்கிறாய்

புற்றுநோய்க்கும்
மற்ற நோய்க்குமாய் நீ
வாரிக் கொடுத்தாய்
வெந்துபோன முகத்துக்காய்
வந்த கோடி ஒன்றரை
அத்தனையையும் நீ
கொட்டிக் கொடுத்தாய்
கொடையாக

நீ சேர்த்துப் போட்ட
செல்வங்களை
சேர்த்த கடன் தின்றுவிடும்
நீ கொடுத்தது மட்டுமே
உன் கொடியைப் பறக்கவிடும்

Series Navigation

ரஜித்

ரஜித்