This entry is in the series 20020917_Issue

தேவையான பொருட்கள்


4 கோப்பை கோதுமை மாவு

2 கோப்பை வெந்தயக்கீரை

1 கோப்பை எண்ணெய்

1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்

1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1 தேக்கரண்டி இஞ்சிப் பூண்டு விழுது

உப்பு ருசிக்கேற்ப

செய்முறை

மாவு, கழுவி வெட்டிய வெந்தயக்கீரை, சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் உப்பு ஆகியவற்றை கலக்கவும்

கால் கோப்பை எண்ணெய், இஞ்சிப்பூண்டு விழுதையும் இத்தோடு சேர்க்கவும்

எல்லாவற்றையும் சப்பாத்தி மாவு போல சற்றுத் தண்ணீர் விட்டுப் பிசைந்து தனித்தனி உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

சப்பாத்தி செய்து பொன்னிறமாகும்வரை தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்

இதனை தயிரோடு அல்லது மற்ற சப்பாத்தி துணைப் பண்டங்களோடு சாப்பிடலாம்

Series Navigation