மேட்ரிக்ஸ் தமிழில்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

நட்சத்திரவாசி


நீங்கள் மேற்கொள்ளும் பயணம்
நிச்சயமாக மாறுபாடனதொன்றே
பஜாரில் நீங்கள் நுழைந்ததுமே
அன்னியர்களில் ஒருவராய் மாறிவிட்டீர்
பஜாரில் மட்டுமே அன்னியருக்கு
அதிக மரியாதை இருந்தது
பஜாரில் நேர்த்தியாக,வரிசையாக
அமைந்திருந்த கடைகளில்
உற்சாகமான வரவேற்புகளும்
விதவிதமான காட்சிகளும்
காணக்கிடக்கின்றன
விதவிதமான குரல்களில்
ஆழ்ந்திருந்தன எல்லாம்
சுராஸ்யமான விஷயம் என்னவென்றால்
அன்னிய கிரகத்து மனிதர்கள்
வந்து போயிருக்கிற கடைதான்
மனித தலைகள் அங்கு
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன
நிஜமான மனித தலைகள்
இரத்த ஒழுக்கோ,துர்நாற்றமோயின்றி
நயமான விருப்பத்துடன்
ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன
கண்ணாடி பெட்டிகளில்
சுழன்று கொண்டிருந்த மனித
தலைகள் புன்னகையோடு இருந்ததை
நீங்கள் பார்த்தீர்கள்
மனித தலைகளை ஆர்வமுடன்
வாங்கிச்செல்லும் அன்னிய கிரகத்துவாசிகளை
யாரும் ஆச்சரியமாக பார்க்காத்தும்
விசித்திரமானதுதான்
சில அன்னியகிரகத்துவாசிகள்
ஜந்தாறு தலைகளை சேர்த்து வாங்கினர்
பஜாரை விட்டகன்று
வெளியே வந்தபோது
நீங்கள் உங்கள் தலையை
தொட்டுப் பார்த்ததை எப்படி
வர்ணிக்க இயலும்?
நிச்சயமாக இந்த பயணத்திலிருந்து
மீண்டெழுந்த போது
இருக்கையில் அமர்ந்திருந்தீர்கள்
உங்களை சுற்றி தொழில்நுட்ப கருவிகள்
இயங்கிக்கொண்டிருந்தன
பிந்தலையில் திருகிட்டு
உள்நுழையும் இயந்திரம்
விலகி கழன்றிருந்தது

Series Navigation