மூழ்கும் காதல்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

சக்தி சக்திதாசன்கண்மணியே என்னெஞ்சம்
காதலினால் கட்டுண்டது
நிந்தன் நினைவுகள் தந்த
குளிர்மை உடலை வாட்ட
உந்தன் கனவுகள் எனும்
உஷ்ணப் போர்வை தழுவியதே

விழிகள் என்னும் அம்பு
விட்டெறிந்த பார்வைக்
கணைகள் கடந்து சென்ற
கடலின் உள்ளே கண்ணே
கலந்ததெந்தன் பிரிவின்
கண்ணீர்த் துளிகள்

வரலாமா ? என்று கேட்டு
வந்ததல்ல உன்மேல் காதல்
வரட்டுமா? என்று சொல்லிப்
பிரியவில்லை உன் நெஞ்சம்
எதிர்பார்த்து கிடைத்தல்ல
ஏழையெனக்கு உன் காதல்

கொடுத்ததையெல்லாம் தானே
கொடுமையாகப் பறித்துக்
கொண்டே ஓடும் காலம் ஓடுகிறது
ஓடைமேலே நீந்து காகிதக் கப்பலாய்
உன்னினைவைச் சுமந்த வண்ணம்
மூழ்குகின்றதே என் காதல்


sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்