மூட்டுவாதத்துக்கு Arthritis அட்டைக்கடிLeeches மருந்து

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue


மருத்துவ அறிஞர்களால், மூட்டுவாதத்துக்கு அட்டைகள் மூலம் மருத்துவம் செய்யலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ், ருமெட்டாய்ட் ஆகிய மூட்டுவாதங்களுக்கு இந்த ரத்தத்தை உறிஞ்சும் உயிரிகளைக் கொண்டு மருத்துவம் செய்து வெற்றிகண்டிருக்கிறது ரஷ்ய மருத்துவக்குழு.

அட்டைகளைக்கொண்டு தந்த மருத்துவம் இந்த வியாதிகளால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த பல வியாதியஸ்தர்களுக்கு மருந்தாகி இருக்கிறது என்று சாலிகோவ் மற்றும் சகாக்கள் கஜான் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் கூறியிருக்கிறார்கள்.

வெகுகாலமாகவே மேற்கத்திய மருத்துவர்கள் அட்டைகளைக்கொண்டு மருத்துவம் செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த அட்டைகளின் எச்சிலில் பல அனல்ஜஸிக் அனஸ்தடிக் மூலக்கூறுகள் இருக்கின்றன. அதாவது காயம்பட்ட இடத்தை மரத்துப்போகும் படிக்குச் செய்யும் பொருட்கள். அத்தோடு கூடவே, ரத்தத்தை உறையாமல் வைத்திருக்கும் ஹிருடின் hirudin என்ற மூலக்கூறும் இதில் இருக்கிறது. (அட்டையின் எச்சிலில் இந்த பொருட்கள் இருக்கக்காரணம், அட்டை கடித்ததும் கடிபட்ட மாட்டுக்கு தான் கடிபட்டது தெரியாமல் இருக்க, மரத்துப்போகச்செய்யும் பொருள், வெளிவரும் ரத்தம் குடிப்பதற்கு ஏதுவாக, காயாமல் இருக்க வேண்டி ரத்தத்தை உறையாமல் வைத்திருக்க உதவும் ஹிருடின் ஆகிய பொருள்கள்)

ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள், அட்டை மருத்துவத்தை சுமார் 105 வியாதியஸ்தர்களிடம் இருந்த ருமாட்டாய்ட், ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ் ஆகிய வியாதிகளை குணப்படுத்த உபயோகித்திருக்கிறார்கள்.

இந்த ஹிருடின் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Series Navigation