முள்வேலிமுகாம்களிலிருந்தும் ஊர்விலக்கத்திலிருந்தும் விடுதலைக்கான தீர்மானங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

வி.சிவராமன்


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமரிமாவட்ட மாநாடு 24 – 10 – 2009அன்று நாகர்கோவில் அசிசி அரங்கில் முனைவர்சிறீகுமார்,நாவலாசிரியர் மீரான்மைதீன்,திறனாய்வாளர் ஆர்.பிரேம்குமார் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் காருபாறை,தக்கலை. பூதப்பாண்டிகிளைகளின் அறிக்கை மோகன்தாஸ்,நடசிவகுமார்,ச.கண்ணன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் வி.சிவராமன்மாவட்ட செயல் அறிக்கையை வாசித்தார். விவாதங்கள் விரிந்தமுறையில் நடைபெற்றது.செம்பவளம் கல்வெட்டாய்வுக் குழுவின் அறிக்கையை ஆய்வாளர் செந்தீநடராசனும்,ஜீவா பொன்னீலன் அறக்கட்டளை அறிக்கையை சொக்கலிங்கம் அவர்களும் முன்வைத்தனர்.பொருளாளர் எம்.விஜயகுமார் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார்.

இம்மாநாட்டை வாழ்த்தி மாநிலத்தலைவர் பொன்னீலன் சிறப்புரை நிகழ்த்தினார்.

எதிர்கால வேலைத்திட்டத்தில்

1)வாரந்தோறும் செவ்வாய் இலக்கியசந்திப்பு

2)வாரந்தோறும் சனி பண்பாட்டு தத்துவ உரையாடல்

3)மாதந்தோறும் சிறப்புக்கருத்தரங்கங்கள்

4)ஆண்டுதோறும் மேமாதத்தில்தமிழகம்தழுவிய கலை இலக்கிய முகாம்

என்பதான வேலைத்திட்டங்களுக்கான கருத்தாக்கங்கள் பொறுப்பாளர்களுக்கான வேலைப்பங்கீடு செய்யப்பட்டது.

இம்மாநாட்டில் முனைவர்.எஸ்.சிறீகுமார், மாவட்டத்தலைவர்,நாவலாசிரியர் மீரான்மைதீன், ஆய்வாளர்பிரேம்குமார்,கவிஞர்நட.சிவகுமார் மாவட்டத்துணைத்தலைவர்கள்,வி.சிவராமன் மாவட்டச் செயலாளர், எஸ்.ஜே.சிவசங்கர்,ஜி.எஸ்.தயாளன்,ச.கண்ணன் துணைச்செயலாளர்கள் எம்.விஜயகுமார் மாவட்ட பொருளாளர் மற்றும்13 பேர் கொண்ட மாவட்ட செயற்குழுவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

இம்மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1)இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வும்.சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கும் வாழ்வதற்குமான உத்தரவாதத்தையும்

ஈழத்தமிழர்களுக்கான அரசியல்ரீதியான தீர்மான வரைவு உருவாக்கவும் இந்திய அரசும் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்ககோரியது.

2)தமிழ்நாடு வக்ப்வாரியத்தலைவராக மாண்புமிகு கவிக்கோஅப்துல்ரகுமான் பதவி ஏற்றப் பிறகு கவிஞர்ஹெச்.ஜி.ரசூல் மற்றும் அவர்தம் குடும்பத்தின்மீதுநிகழ்த்தப்பட்ட ஊர்விலக்கம் சமூகபுறக்கணிப்பை ரத்து செய்ய அறிவுறுத்திய பிறகும் அதனை செய்யாத்ததற்கான காரணகேட்புவிளக்கத்தை ஜமாத்திடம் கேட்டுள்ளது.தனது ஜனநயாக கடமையை நிறைவேற்றிவரும் கவிக்கோவிற்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தும்,கவிஞர்ஹெச்ஜி.ரசூல் அவர்தம் குடும்பத்தை ஜமாத்தில் சேர்த்து சகல உரிமையும் பெற்றவர்களாக மாறுவதற்கும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாடு வக்ப்வாரியத்த்லைவர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொண்டது.

Series Navigation

வி.சிவராமன்

வி.சிவராமன்