முயல்தலில் ஒளிர்தலானது….

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

சாரங்கா தயாநந்தன்


விறகின் மேல் மேனியில்
நீறாய்க் கிடக்கிறது சாம்பல்.
நெஞ்சுறுத்தி.
நிகழப் போகும் என் இறப்புணர்த்தி.
நாளைய மயானத்தில்
நான் தகனித்தலின் பின்னான
என் உரு.
வரண்ட இதயத்திலிருந்து
வடிகிறது ஞானத்தின் முதல்துளி.
வெறுப்பில்லை .
விருப்பும் தானில்லை .
நடுவே
நின்று நிதானித்துள்ளது ஆத்மா.
கறுப்பு இல்லை .
வெண்மையும் தானில்லை.
இடையே இடறுகிறது
சாம்பலின் வர்ணம்.
மெல்லக் குனிந்து
ஊதுங்குழலால் துருத்த
உள்ளொளி விகசித்து
செஞ்சிவப்பாய் சிரிக்கிறது.
‘ ‘முயல்தலில் ஆத்மாவின் ஒளிர்தல் ‘ ‘
பற்றிய
உன்னதமான உண்மையை விரித்து….

nanthasaranga@gmail.com

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்