முன் நின்றலின் இயíகாவியல்

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


உலக வரலாற்றில் சர்வ சகஜமான சிந்தனையான இயíகாவியல்[metaphysics] மார்சிய தாக்கத்துக்கு பின் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கின்றது.பின் நவீனவாதிகளும் இதை அதிகம் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். பின்நவீனவாதிகளின் ஒரு பிரிவினர் இயíகாவியல் மரணித்துவிட்டது என்று கூறினார்கள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பின்நவீனசிந்தனை முறையியல் இயíகாவியலை நிர்மூலமாக்கிவிட்டது என்பதாகும்.ஆனால் தெரிதா முன் நின்றலின் இயíகாவியல் என்ற சொல்லாடலை அடிக்கடி பயன்படுத்தி வந்தார்[presence of metaphysics].அதாவது புனித நூற்களின் சொல்லாடல்கள் கடவுளின் வார்த்தைகளை புலப்படுத்திக்கொண்டிருக்கும்.இயíகாவியலை புனித சொல்லாடல்கள் கடவுளின் வார்த்தைகளை அல்லது கடவுளின் குரலை தோன்றச்செய்யும்.மொழி எதையும் உறுதிபடுத்தி சொல்லும் தன்மையுடையதல்ல.இப்போது சொல்வது,காண்பது இது தான் நிஜமாக தோன்றுகிறது என்பதே இருண்மை மயக்கமாகும்.இதை பகடி மூலமே மனிதனை சுயபிரக்ஞையவனாக மாற்றமுடியும்.பிரதிகளின் குரல் ஆசிரியனை நினைவூட்டுவதும் காண்பியத்தை காணும் போது உண்மை என்று தோன்றுவதும் இந்த தோன்றல் தான் முன் நின்றலின் இயíகாவியல் என்பதாகும்.உலகமயமாதலின் தீவிர பாய்ச்சலில் தகவல் தொடர்பு சாதனíகளின் நகல் பெருக்கம் ஒற்றை நிலையை வற்பறுத்துகிறது.ஒவ்வொரு விஷயத்திலும்,பொருளிலும் ஒற்றை நிலை இருப்பதாக கூட்டுநனவிலி மனம் நம்புகிறது.நிகழ்ச்சிகளை பார்த்து ஆராயும் விஷயத்தில் ஒற்றை நிலை இயக்க நிலையை புறக்கணித்து அசையா நிலையை அíகீகரிக்கிறது.உலகம் மாறவில்லை,உலகில் புதிதாய் எதுவுமில்லை,நிகழ்வுகள் திரும்ப திரும்ப நிகழ்கின்றன,மனித இயல்பு மாறவில்லை,வாழ்க்கை வாழ்க்கைதான்,மரணம் மரணம் தான் என்பன போன்ற தோன்றலை எப்போதும் மனம் கொண்டிருப்பதும் பலவற்றை பார்த்ததும் அது ஊர்ஜிதமாவதும் முன்நின்றலின் இயíகாவியல் ஆகும்.இப்படியாக ஒவ்வொன்றையும் இன,குண வேற்றுமைகளை குறிப்பிட்டு ஒவ்வொரு பொருளையும் கறாராக பிரித்து விடுகிறோம்.ஆகவே இயíகாவியலின் முதல் குணாதிசயமே அதுவே இது என்ற பார்வையை குறிக்கும் ஒற்றை நிலைபாடுதான்.

பொருட்களை தனித்தனியே பிரித்து பார்ப்பது என்பதும் இலக்கியவாதி தத்துவம் பேசக்கூடாது அரசியல் கலக்க கூடாது ஒன்றையும் இன்னொன்றையும் இணைக்க கூடாது என்பன அடையாளபடுத்துதலாகும்.இப்படி ஒவ்வொன்றையும் தனித்தனியே இனம்கண்டு பிரிப்பதன் மூலம் சமுதாயத்தை தனிமைபடுத்தும் பார்வை உருவாகிறது.அது போல மனிதனை மற்ற மனிதர்களிடமிருந்து,சூழ்நிலையிலிருந்து,சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தி தனிமனிதனை பற்றி பேசுவது இயíகாவியல் சிந்தனையாகும்.ஆனால் மனிதன் ஒவ்வொன்றோடும் ஊடாடிக்கொண்டிருக்கிறான் என்பதே உண்மையாகும்.பொருள்களையும்,விஷயíகளையும் இயíகா நிலையில்,மாறா நிலையில் பார்க்கும் பார்வையை விரும்பி கைக்கொண்ட பிறகு அவற்றை தனித்தனியே இனம் பிரித்து வேறு வேறாக பட்டியல் போட்டு வைத்தோம்.தமிழ்ச் சூழலில் பார்ப்பனர்,பார்ப்பனரல்லாதோர் என்ற பிரிவினை மூலம் பார்பனர் இப்படிப்பட்டவர் தான் என்று சொல்லுவது இயíகாநிலை சிந்தனையின் வெளிபாடாகும்.அது போல தலித் தான் தலித் இலக்கியம் படைக்கமுடியும் என்று சொல்லுவது நிரந்தர பிரிவினையை விரும்பும் சிந்தனையோடு தொடர்புடையது.இந்த பிரிவினைகள் எத்துடனும் எந்தவித சம்பந்தமோ,சார்போ கொண்டவையல்ல.அவை சாஸ்வதமானவை,அவற்றை கடக்க முடியாது என்று நம்பும் நிலைக்கு அது நம்மை கொண்டு செல்லுகிறது.

சமூகத்தை தனித்தனியே பிரித்து பார்ப்பது கூட இயíகாவியல் சிந்தனையாகும்.ஏழை x பணக்காரன்,உயர்ந்தவன் x தாழ்ந்தவன்,முதலாளி x தொழிலாளி என்பன போன்ற பிரிவினைகள் செய்வது மட்டுமல்லாது இந்த பிரிவினைகள் எப்போதும் இருந்து வந்திருக்கின்றன என்று சொல்லவது தான் நிரந்தர பிரிவினையை சுட்டிக்காட்டுகிறது.இயíகாவியல் இப்படி நிரந்தர பிரிவினையை வலியுறுத்துவது சாதாரணம் என்ற போதும் அதன் குணம் விவாதத்துக்குரிய ஒன்றாகும்.வேறு வேறானவை எல்லாம் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று சொல்லுவது அதன் குணமாகும்.மேலே சொன்னதிலிருந்து என்ன முடிவு கிடைக்கிறது என்றால் வாழ்வு வாழ்வு தான் சாவு சாவு தான் என்று நாம் சொல்லும் போது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் பொதுவான அம்சíகள் இல்லை என்று அறைந்து சொல்லுகிறோம்.இரண்டையும் பிரித்து தூர விலக்கி வைக்கிறோம்.வாழ்வை தனியே பார்ப்பதோடு நின்று விடுகிறோம்.சாவையும் தனியே நிறுத்தி பார்ப்பதோடு நின்று விடுகிறோம்.

பொருட்களையும்,விஷயம்களையும் தனித்தனியே எடுத்து பரிசீலிக்கப்போய் ஒவ்வொன்றையும் வேறுவேறானதாய் பிரித்து எடுத்து பரிசீலிக்க போய் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை நிறுத்தும் நிலைக்கு வந்து சேருகிறோம்.இது இயíகாவியல் சிந்தனையாகும்.ஒன்றிலிருந்து ஒன்று வேறுப்பட்டிருப்பவை எல்லாம் ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை என்று கருதுவதே இதன் குணமாகும்.அது ஒன்றை மற்றொன்றுக்கு எதிராக நிறுத்தி வைத்து அப்படி வேறுப்பட்ட இரண்டு பொருட்கள் ஒரே சமயத்தில் இருக்க முடியாது என்று அடித்து பேசுகிறது.அப்படி இரண்டு பிரிவுகளை பேசும் போது மூன்றாவது ஒன்று இருக்க முடியாது.எனவே இந்த இரண்டில் ஒன்றை நாம் தேர்வு செய்து கொள்ளவேண்டும்.இப்படி இதுவுமன்றி அதுவுமன்றி மூன்றாவது ஒரு நிலை இருப்பது சாத்தியம் என்பது முரண்பாடு ஆகும்.ஐனநாயகம் இருக்கிறது சர்வாதிகாரம் இருக்கிறது.இது அதுவல்ல.அது இதுவல்ல.இரண்டும் வெவ்வேறானவை.எதிர்மறையானவை.இரண்டில் ஒன்றை தேர்வு செய்.இல்லாவிடில் நீ முரண்பாட்டில் சிக்கிக்கொள்வாய்.உன் நிலை சுத்த அபத்தமாக போய்விடும்.நீ இரண்டும் கெட்டான் நிலைக்கு வந்துவிடுவாய் என்கிறது.

இந்த வைதீக சிந்தனை மரபு தான் மனித பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமாக திகழ்கிறது.அமைப்பியல்வாதிகள் கூட மொழியியல் சிந்தனைகள் இருமை எதிர்வில் தான் இருக்கிறது என்று சொன்னார்கள்.மொழி என்ற அமைப்பில் இரட்டை நிலைபாடே இருக்கிறது.எனவே மனித மனம் இருமை எதிர்வுகளாக இயíகும் தன்மை வாய்ந்தவை என்றனர்.மனம் தர்க்க ரீதியாக இயíகி இவற்றை நகல் செய்து தமக்கு தோதானவற்றை பயன்படுத்திக்கொள்கிறது.உதாரணமாக பாலைவனத்தில் வாழும் அரபுகள் தíகளது கொடியாக பச்சை நிறத்தை வைத்துக்கொண்டார்கள்.இப்படியாக தான் மனம் கட்டப்பட்டிருக்கிறது என்ற சிந்தனையும்,தர்க்கமும் இயíகாநிலையின் பாற்ப்பட்டதாகும்.எனவே தர்க்கம் என்ற சிந்தனைமுறையியல் பற்றி பார்க்கிற போது பிழையின்றி சிந்திக்கும் கலை என்று தர்க்கத்தை சொல்லுகிறார்கள்.உண்மைக்கு பொருத்தமாக சிந்திப்பது என்பதற்க்கு அர்த்தம் தர்க்கவிதி படி சிந்திப்பது தான் என்பதாகும்.இந்த தர்க்கமே பகுத்தறிவை பிரதானப்படுத்துகிறது.பின் நவீனத்துவம் முன்வைக்கும் முக்கிய விவாதமே பகுத்தறிவின் பயíகரவாதம் பற்றியதே.பகுத்தறிவு சிந்தனை என்பது இயíகாவியல் சிந்தனையின் நவீன வடிவம் ஆகும்.அது ஒற்றைநிலையை,தனித்தனியே பிரித்து பார்க்கும் குணாம்சத்தை,நிலையான பிரிவினைகளாக கருதும் நிலையை,வெவ்வேறானவை எல்லாம் ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற நிலையை வலியுறுத்தி சொல்கிறது.இந்த பகுத்தறிவு சிந்தனைக்கு இயíகாவியலும்,தர்க்கமும் காரணமாகிறது.எனவே தர்க்கம் ஒற்றைநிலையை வலியுறுத்துகிறது.முரண்பாடுகளை அது மறுக்கிறது.ஏனெனில் இரண்டில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும்.முரண்பாடானது அபத்தமானது என்கிறது.அது போல இடைநிலையை[transition] அது மறுக்கிறது. அதாவது மூன்றாவது நிலை ஒன்று என்று இருப்பதை மறுக்கிறது. இரண்டு முரண்பாடான நிலைகளுக்கு இடையே மூன்றாவது நிலை ஒன்று இருக்க இடமில்லை என்கிறது.

ஆகவே தர்க்கமும்,பகுத்தறிவும்,இயíகாவியலும் நெருக்காமாக இணைந்துள்ளவையாகும். இயíகாவியலை தர்க்கம் மூலமும்,பகுத்தறிவு மூலமும் பார்க்கும் படி ச்சொல்லுகிறது.எனவே தான் பின் நவீனத்துவம் தர்க்கமே வன்முறை என்கிறது.ஆக,இரண்டாயிரமாண்டு காலமாக கருத்துமுதல்வாதத்துக்கும்,பொருள் முதல்வாதத்துக்குமான போராட்டத்தை பின் நவீனத்துவம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.ஆகவே தான் தத்துவத்தின் மரணம் என்று பின்நவீனத்துவம் அழைத்தது.இயíகாவியல் சிந்தனையும் இயíகியல் சிந்தனையும் ஒரே பாதையில் பயணிப்பதால் தத்துவம் மரணமடைந்து விட்டது என்றது பின் நவீனத்துவம்.பொருந்தி வருவதற்க்கு உடன்பாடானவைகளை எற்று மற்றவற்றை தர்க்கமும்,பகுத்தறிவும்,இயíகாவியலும் நிராகரிக்கிறது.இதனால் உண்மை என்ற ஒன்றையோ அல்லது உண்மையல்லாத ஒன்றையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி செய்வதால் மூன்றாவது நிலை இல்லை என்றாகி விட்டது.எனவே தான் ஆண் x பெண்,இயற்கை x செயற்கை என்ற நிலைகளுக்கு அது நம்மை கொண்டு செல்லுகிறது.சர்வாதிகார ஆட்சி என்றால் சர்வாதிகாரமே தான்.சோவியத்திலும்,ஜெர்மனியிலும்,இத்தாலியிலும் சர்வாதிகாரமே அன்றி இதில் வித்தியாசம் ஒன்றும் இல்லை எனவே மூன்றாவது நிலை இíகே கவனிக்க படுவது இல்லை.

யாருக்கு சாதகமாக அந்தந்த நாடுகளின் சர்வாதிகார ஆட்சி செயல்படுகிறது என்று தர்க்கமோ,பகுத்தறிவோ கவனிப்பது இல்லை.அது போல ஐனநாயகம் பற்றி பெருமைபடுவதும் யாருடைய நலனுக்காக ஐனநாயகம் பாடுபடுகிறது என்று சொல்லப்படுவதும் இல்லை.இப்படி பல வட்டíகளை போட்டு பார்ப்பதாலே அவர் அல்லது அது எந்த இனத்தை சார்ந்தது என்ற கேள்வி எழும்பி நமக்கு நாமே வித்தியாசப்படும் மனபோக்கு உருவாகிறது.நமது மனம் இந்த ஒரு கேள்வியை தான் நம்முள்ளே எழுப்புகிறது.இப்படி தான் ஒவ்வொரு பொருளையும் ஒரோர் வட்டத்துக்குள் நிறுத்தினோம்.முதலில் பெரிய வட்டத்தை வரையறுத்தோம்.பின்னர் அதை விட சிறிய வட்டம் போட்டு ஆண்கள் எல்லோரையும் நிறுத்தினோம்.பின்னர் அதைவிட சிறிய வட்டம் போட்டு இறந்து போகுவோரில் அவரும் ஒருவரே என்று அவரையும் நிறுத்தினோம்.இந்த தர்க்க முறை தான் நமக்கு முடிவு அளிப்பதாக சொல்லிக்கொள்கிறோம்.

பகுத்தறிவாத சிந்தனை முறை விஞ்ஞானத்துக்கு ஆக்கமும் ஊக்க்மும் தந்தன.இயíகாவியல் சிந்தனை முறை பகுத்தறிவுடன் தொடர்பு கொண்டிருப்பதால் விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கும் போது விஞ்ஞானத்தையும் தனித்தனியாக,ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பயின்றனர்.உதாரணமாக வேதியியல்,இயற்பியல்,உயிரியல் என்பன போன்று.அவற்றுக்கிடையே பரஸ்பரம் சம்பந்தம் இருப்பதாக யாரும் கருதவில்லை.மேலும் ஒவ்வொரு குறிப்பிட்ட விஞ்ஞானத்துக்குள்ளேயும் இதே சிந்தனை முறை தான் கையாளப்பட்டது.உதாரணமாக இயற்பியலில் ஒலி,ஒளி,வெப்பம்,காந்த சக்தி,மின் சக்தி முதலியவையெல்லாம் அடíகும்.பல்வேறு பொருடகளுக்கிடையே சம்பந்தம் ஏதுமில்லை என்று இதை தனித்தனியே அத்தியாயíகளாக படித்து வந்தோம்.இந்த இயíகாவியல் சிந்தனைமுறை பொருட்களுக்கிடையே இருக்கும் உறவுகளை கவனிக்காமல் அவற்றுக்கிடையே பொதுவான அம்சம் கிடையாது என்கிறது.

அதேபோல பொருட்களை அசைகிற நிலையில் இருப்பதாக கருதுவதை விட அசையா நிலையில் இருப்பதாக கருதுவது சுலபம்.உதாரணமாக போட்டோ பிடிக்கும் கலையை பாருíகள்.முதன் முதலில் பொருட்களை அசையாத நிலையில் படம் எடுக்க முயற்சித்தார்கள்.இது போட்டோ எடுக்கும் கலையானது.பிறகு பொருட்களின் அசைகிற ,இயíகுகிற நிலையில் படம் எடுக்க தொடíகினார்கள்.இதுவே சினிமா கலையாயிற்று.இப்படி தான் மனித மனம் இயíகுகிறது.அது தொடர்ச்சியை நோக்கி செல்லுகிறது.அதுவே வளர்ச்சி என்பதாகும். பதினெட்டாம் நூற்றாறாண்டில் எந்திர இயக்கவியல் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது.ஆனால் இடம் விட்டு இடம் மாறும் இயக்க வடிவமாக அது இருந்தது.அதுவே இடமாற்றத்தை விளைக்கிற இயக்கத்தை பற்றிய ஆராய்சி என்றனர்.உதாரணமாக காற்றில் இப்படியும் அப்படியும் அசைகிற ஆப்பிள் பழத்தின் இயக்கத்தை அல்லது இடமாற்றத்தை ஆராய்வது சுலபம்.ஆனால் அந்த ஆப்பிள் பழுத்து கனிந்து விழுகிற போது அந்த பழத்துக்குள் நிகழ்கிற இயக்கத்தை ஆராய்வது அவ்வளவு சுலபமன்று.அந்த ஆப்பிள் பழம் பக்குவமடைந்து பழுத்து வருவதை ஆராய்வதை விட காற்று வீசுவதினால் எப்படி எப்படியெல்லாம் அந்த ஆப்பிள் அசைந்தாடுகிறது என்று ஆராய்வது சுலபமான வேலையாகும்.ஆனால் ஆப்பிள் பழத்துக்குள்ளே நிகழும் மாற்றíகளை அதாவது ஆப்பிள் பழ்த்தின் ரூபம்,குணம்,தன்மையில் ஏற்படும் மாற்றíகளை ஆராய்வதை விட்டு விட்டு வெறுமனே இடமாற்றத்தை விளைவிக்கும் இயக்கத்தை மட்டும் ஆராய்வது குறைபாடான ஆராய்சியாகும்.இது தான் இயíகாவியல் சிந்தனையாகும்,என்வே அறிவியலும் இயíகாவியல் சிந்தனையைக்கொண்டிருந்தன என்பது முக்கியமாகிறது.

மார்சியத்தின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் இயíகாவியல் சிந்தனைக்கு பேரடி கொடுத்த போதிலும் இயíகாவியல் சிந்தனை மரபாகிவிட்டது.அடையாள அரசியலை நடத்திய மார்சியத்திலும் இயíகாவியல் இயíக துவíகியது.கருத்து முதல் வாதம் என்ற நிலையில் மார்சியம் இயíகாவியலை சர்ச்சைக்கு உட்படுத்திய போதும் இயíகாவியலின் சர்வ வல்லமையை ஒன்றும் செய்ய முடியவில்லை.மிக விரைவிலேயே நவீனத்துவம்,இருத்தலியம் உட்பட்ட தத்துவ சிந்தனைகள் இயíகாவியலை மீட்டெடுத்து அதிக வல்லமை பெற வைத்தன.பின்னமைப்பியல் சிந்தனை வந்த போது தான் இயíகாவியலுக்கு அடி விழத்தொடíகியது.தெரிதா கட்டவிழ்தல் கோட்பாடு மூலம் மேற்கத்திய பகுத்தறிவு மரபின் மீது தாக்குதல் தொடுத்தார்.மேற்கத்திய அறிவு மரபின் மைய கருத்தான பகுத்தறிவு பிரயோகிக்கும் மொழியானது உலகம் மற்றும் அதிலுள்ள பொருள்களுக்கும் சாரம்சம் ஒன்று தான் என விளம்பியது.இது நிச்சயதன்மைக்கு அதிக உத்திரவாதம் அளித்தன.வார்த்தைகள் என்பவை பொருட்களை பற்றிய உண்மைகள் என்கிறது.அதாவது செடி என்ற வார்த்தை அசல் எதார்த்தமான உண்மை என்று சொல்லுகிறது.இதனால் பொருட்கள் வார்த்தைகளின் சதைகளாக இருக்கிறது.அதாவது செடி என்ற வார்த்தைக்கு செடி என்ற பொருள் சதையாக இருக்கிறது.இது நிச்சய்தன்மையுடைய ஒரு அர்த்தம் ஆகும்.மொழி ரூபமாக அது தனது கருத்துக்களை நிச்சயதன்மையோடு முன்வைக்கும் போது அதற்கு எதிரான கருத்தியல்கள் நிச்சயமற்ற தன்மையுள்ளதாக்குகிறது.நிச்சயமின்மைகளால் ஆன ஒரு உலகில் நிச்சயதன்மையை வலியுறுத்துவது வன்முறையே ஆகும்.மையத்துக்கு நிச்சயமாக தோன்று ஒரு விஷயம் மற்றமைக்கு எதிரான விஷயமாக இருக்கும்.இந்த விஷயம் பருப்பொருளாக இல்லாத ஒன்றாக இருந்து பருபொருள் போல் இருக்கும் ஒன்றாக மாற தோன்றுவது முன்நின்றலின் இயíகாவியல் என்பார் தெரிதா.

தற்போது தகவல் தொடர்பு ஊடகíகள் முன்வைக்கும் அச்செழுத்துக்களும்,காட்சிகளும் இயíகாநிலையை முன்நிறுத்துகின்றது என்பது பின் நவீன காலத்தில் முரண்பாடான விஷயமே.அவை ஏதோ ஒன்றை சொல்லுகிறது என்ற கட்டமைப்பை உருவாக்குகிறது.நகல் உண்மைகளை நிஜம் என்று நம்பிக்கொள்ள இயíகாவியல் புதிய அவதாரம் எடுத்துள்ளது.இதை பின் நவீன சிந்தனையாளரான பூதிலார்டு அதிகமாக விவாதிக்கிறார்.தகவல் தொடர்பு ஊடகíகளின் எழுத்தும் காட்சியும் நம்பபட கூடுமானவையாகவும்,நிரந்தர உண்மையை சொல்லுவதாகவும், இருக்கிறது என்பதை நம்ப வைக்கிறது என்பது முக்கியமானதாகும்.மையவாதிகள் தíகள் பிரதியையோ,நகலையோ உருவாக்கும் போது தíகள் இயல் கடந்த இருத்தல் கொண்ட கருத்தியல்களை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுகிறார்கள்.இதை தான் போலி உண்மைகளின் வரிசை[the order of simulacra] என்கிறார் பூதிலார்டு.உண்மையான சம்பவíகள் மற்றும் பொருட்களை வைத்து போலிகளை உண்மை என்று நம்ப வைக்கப்படுகிறது.உண்மையை நகல் ஆக்கிரமித்துவிட்டது.இன்று மையவாதிகளிடம் ஊடகம் சிக்கிவிட்டது.அதில் முன்வைக்கப்படும் கருத்தியல் வன்முறைகள் முன்நின்றலின் இயíகாவியலாக மக்கள் மனதில் தோன்றுகிறது.

மையíகள் உற்பத்தி செய்யும் உண்மைகள் நிஜமானவை,நிரந்தரமானவை,உண்மையானது என்று தோற்றுவிக்கப்படுகிறது.இதனால் அவர்கள் சொல்லும் உண்மையின் அர்த்தம் ஒன்றே என்ற நிலை என்றாகும் போது மற்றவை என்பது தனியே பிரித்து பார்க்கும் எண்ணத்தை தோற்றுவிக்கிறது.மற்றவை பொய்யானவை,எனவே தனித்தனியே பிரித்து பார்க்கும் போது அது பிரிவினைகளாக ஒன்றோடன்று வேறுபாடனதாக,வேறுபட்டது ஒன்றுக்கொன்று எதிரானதாக இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் படியாக ஆக்குகிறது.நகல்கள் சொல்லும் உண்மையும் அவை சொல்லும் மற்றவையும் உண்மையானதாக இருக்கிறது.இதில் நாம் ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.இல்லை எனில் முரண்பாட்டில் சிக்கி விடுவோம்.

—எந்த கட்சி ஆட்சியமைக்கும் அ.தி.மு.க வா அல்லது தி.மு.க வா?
—உíகளுக்கு பிடித்தமான பொழுது போக்கு எது? புத்தகம் வாசிப்பதா? டி.வி.பார்ப்பதா?
—உíகளுக்கு விருப்பமான உடை எது? சாரியா? சுரிதாரா?
—காஷ்மீர் பிரட்சனைக்கு தீர்வு என்ன? தனி நாடா? கூட்டாட்சியா?

இணைய தளíகளிலும்,எஸ்.எம்.எஸ் கேட்வி பதிலும் உடனடியாக பதில் சொல்லி விடுகின்றன.நீíகள் இப்போது முரண்பாட்டில் சிக்கவில்லை.ஆனால் முன்நின்றலின் இயíகாவியலில் தான் இருக்கிறீர்கள்.இது ஒரு தத்துவ பிரச்சனை மட்டுமல்லாது மனிதனை மனிதனாக மாற்றும் போராட்டத்தின் வடிவம் இனியொரு முறை எப்படி சாத்தியமாகும்?என்பதையும் யோசிக்க வைக்கிறது.


mujeebu2000@yahoo.co.in

Series Navigation