[முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

முனைவர் ஆர். சபாபதி


‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது கணினித்துறையில் தமிழ்
பெற்றுள்ள இடத்தைக் கொண்டே மதிப்பிடவேண்டிய காலச்சூழல் இது. எனவே
கணினித்துறையின் இமாலய வளர்ச்சியினை நன்கறிந்த முனைவர் துரை. மணிகண்டன்
அவர்கள் “இணையமும் தமிழும்” என்ற நூலினை உருவாக்கி நல்னிலம்
பதிப்பதிகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். காலத்திற்கேற்ப செயல்பட்டுள்ள
ஆசிரியருக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.
இந் நூல் இணையத்தில் தமிழின் செல்வாக்கை மிகத்துல்லியமாக
மதிப்பிடப் பயன்படுகிறது. இணையத்தில் தமிழ்க் கல்வி ,இணையத்தில் தமிழ்
மின்னிதழ்கள், இணையத்தில் தமிழ் மின் நூலகம்,இணைய அகராதி, இணையத்தமிழ்
இதழ்களின் முகவரி ஆகிய தலைப்புக்களில் ஆசிரியர் கூறியுள்ள கருத்துக்கள்
மிகவும் பயனுடைய ஒன்றாகும். மேலும் பற்பல இணையத்தின் முகவரிகள்
பகுத்தளிக்கப்பட்டுள்ளமை தமிழுலகிற்கு உலகளவில் தொடர்பினை ஏற்படுத்தி
நிற்க வழிவகுக்கிறது.

இணையத்தைப் பயன்படுத்துவோருக்கான கையேடு என இந் நூலை உறிதியாகாச்
சுட்டலாம்.இணையம் ஓர் அறிமுகம் என்பது தொடங்கி பதினொரு தலைப்புகளில்
மிகவிரிவாக, அழகுடன் தொகுத்தும், பகுத்தும் தகுந்த உட்தலைப்புகளுடன்
நூலை உருவாக்கியுள்ளார். விசைப்பலகை, மின்னஞ்சல் இடர்கள் பற்றியும்
அவற்றுக்கான திர்வுகள் பற்றியும் விரிவாக அலசியுள்ளார். பெயர்ச்சொற்களைத்
தகுந்த முறையில் தமிழில் பயன்படுத்தியிருப்பது தமிழின் மீது இவர் கொண்ட
விருப்பையும், கணினிமொழியகத் தமிழைக் காட்டுவதில் உள்ள அவாவையும்
தெளிவாகக் காட்டுகிறது.
சுருங்ககூறின் கணினித்துறையி தமிழைப் பயன்படுத்த விரும்புவோருக்கு
மிகப்பயனுடைய நூல்,குறிப்பாக மாணவ மாணவியர், உலகத்திற்கும் கணிபொறி
பற்றித் தெரியாதவர்களுக்கும்,பிற மொழி ஆசிரியர்களுக்கும் இன் நூல்
மிகவும் பயனுடையதாக இருக்கும். ஆசிரியரின் விளக்க நடையும், எளிய
சொற்றொடர்ப் பயன்பாடும் நூலின் தரத்தினை மெருகேற்றி நிற்கின்றன. செய்முறை
நோக்கில் எழுதப்பட்டுள்ள இப்பயனுடைய நூலைத் தமிழுலகம் ஏற்று ஆசிரியரை
வாழ்த்தும் என்பது திண்ணம்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

விரிவுரையாளர்,
தமிழ்த்துறை,
தேசியக்கல்லூரி,
திருச்சிராப்பள்ளி

Series Navigation

முனைவர் ஆர். சபாபதி

முனைவர் ஆர். சபாபதி