முத்துசாமி பழனியப்பன் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

முத்துசாமி பழனியப்பன்


நன்றி மறவாமை

தன்னை ஒளியூட்டுவதில்
இறந்து போன தீக்குச்சியை
நினைந்து – உருகிக்
கொண்டிருக்கிறது
மெழுகுவர்த்தி!

எச்சரிக்கை

எந்தக் கணமும்
எனதுயிர் போகலாம்
உன்னை இருட்டுக்கு
ஆயத்தம் செய்துகொள்
என்றா சொல்கிறது?
மெழுகுவர்த்தி!

Series Navigation