மின்மினிப் பூச்சிகள்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

புஷ்பா கிறிஸ்ரி


வான் வெளியெங்கும் பறந்து திரிந்து
திறந்த மேனியுடன், பறந்து வரும்
அதிசய வைரங்கள்.

எங்கிருந்து இவை வருகின்றன ?
விண் மீன்கள் இவைகள்,
விண்ணை விட்டு, வெளியேறி விட்ட
வண்ண அதிசயஙகளோ ?

கண்சிமிட்டும் நேரத்தில் இந்தச்
சின்ன நிலவு, கண்சிமிட்டிப் பார்க்கிறதோ ?

இரவையும் பகலையும் கலந்து விட்டு
இன்பச் கலவை ஒன்று சேர்க்கின்றதோ ?

இரவுக்குப் பாலம் கட்டி, பகலைச்
சேர்த்து விளையாட அழைக்கின்றதோ ?

இயந்திர மயமான இந்த உலகில்
எத்தனை அவசரமான இந்த வாழ்க்கை ?

இனிய இரவிலே கண்முடிடும் மனிதன்
இரவு வந்ததும், கண் சிமிட்டும் மின்மினி
எத்தனை விந்தையான மின்மினி
இதற்கு, பகல் தான் இரவோ ?

இரவு தான் பகலோ ?
என்ன விந்தை ?

pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி