மின்சாரம் போய்விட்ட ஒரு மழை இரவின் நடுநிசியில், கன்னியாகுமா¢க் கடலோரத்தில்…

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

எஸ்.அர்ஷியா



வெள்ளிக்கிழமை காலை பத்தரை மணிவரைக்கும், கன்னியாகுமா¢ போவது குறித்த யோசனை எதுவும் என்னிடமில்லை. தென் மாவட்டத்தின் முக்கிய நகரமான மதுரையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ‘இந்தா… பக்கத்திலிருக்கிற’ கன்னியா குமா¢க்குப் போனது இல்லை. எல்லாக் கா¡¢யங்களுக்கும் மதுரைக்கு வடக்கே.. வடக்கே.. வாழ வைக்கிறப் பக்கம் என்று சொல்லிக் கொள்ளும் வடக்குப் பக்கம்தான்!

புதூர் கார்த்திக் தியேட்டா¢லோ.. அண்ணாநகர் பி¡¢யா காம்ப்ளக்ஸ் அல்லது அம்பிகா தியேட்டா¢லோ நைட்ஷோ பார்த்துவிட்டு, சென்னையிலிருந்து வரும் விரைவுப் பேருந்தில் மாட்டுத்தாவணியில் ஏறி, டிக்கெட் வாங்கியபின் தூங்கினால், கன்னியாகுமா¢யில் விடியக்காலம் சூ¡¢ய உதயம் பார்த்து விடலாம் என்று நண்பர்கள் சொல்லக் கேட்டு, வயிறும் கண்களும் ஒருசேர எ¡¢ந்திருக்கிறேன். ஏனென்றால், எனக்கு அப்படியொரு வாய்ப்பு எப்போதுமே வாய்த்ததில்லை!

இதுகுறித்தப் பேச்சு வரும்போதெல்லாம், ‘உனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லைடா!’ என்று சொல்லி, அது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம்போல, சித்திரம் ஒன்றை உருவாக்கிவிட்டிருந்தார்கள்.

படிப்பு, அது தொடர்பான சுற்றுலா, அப்புறம் வேலை, கல்யாணம், மனைவிக்கு போஸ்டிங், டிரான்ஸ்பர், மகளுக்கு இஞ்ஜினியா¢ங் கவுன்சிலிங் எல்லாமே வடக்கு வடக்காகத் தான் அமைந்து போனது. தெற்குப்பக்கம் திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, ‘அரைப் பா¢ட்சை லீவுல எஸ்கர்ஷன் போகலாம்’ என்று சொல்லி, பள்ளிக்கூடத்தில் பணம் வசூல் செய்தார்கள். ‘நானும் போயிட்டு வாரேம்ப்பா..’ என்று அப்பாவிடம் சொன்னபோது, அவர் பதிலேதும் சொல்லவில்லை. ஆடாது அசையாது கல்லுப்பிள்ளையார் ஆகிவிட்டார். ஏறெடுத்துப் பார்த்தாலோ… என்னவென்று கேட்டாலோ… “அப்பா எஸ்கர்ஷன்ப்பா…” என்று அடம்பிடித்து அழஆரம்பித்து விடுவேன் என்று ‘உம்மணாமூஞ்சிபோல’ இருந்துவிட்டார்.

அவா¢டமிருந்து, ‘ பதிலும்.. துட்டும் பெயராது’ என்று தொ¢ந்தவுடன், அம்மாவைச் சரணடைந்தேன். அதுவும் வீணானன சரணாகதி!

மனம் நொந்து மறுநாள் பள்ளிக்கூடம் போனேன். வாடியப் பயிரைக்கண்டு வாடிய தமிழ் மண்ணில்லையா?

என் முகவாட்டத்தைக் கண்டு வகுப்பின் பணக்கார நண்பனொருவன், எனக்கானப் பணத்தையும் டி.வி.கே. சா¡¢டம் கொடுத்துவிட்டான். டி.வி.கே. சாருக்கு மகிழ்ச்சி பொங்கி விட்டது. ‘நட்பென்றால் இதுவல்லவோ நட்பு.. உதவியென்றால் இதுவல்லவோ உதவி..’ என்று பள்ளிக்கூடச் சுவற்றில் மட்டும்தான் அவர் எழுதிப் போடவில்லை. அது ஒன்றைமட்டும் விட்டுவிட்டு, மற்றபடி லோக்கல் எப். எம்.(அப்போதைய பி.பி.சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம்) களையெல்லாம் மிஞ்சிவிட்டார். அவரது ஒலிபரப்பின் பயனாக, ஊரெல்லாம் பணம் கொடுத்த நண்பனின் பேச்சுத் தான். அவன், கோப்பெருஞ் சோழனாகிவிட்டான். நான் ஏழை பிசிராந்தைய(ர்)ன்!

“எல்லாரும் ராத்தி¡¢யே பள்ளிக்கூடத்துக்கு வந்துறணும். இங்கேருந்து, ராத்தி¡¢ பன்னெண்டு மணிக்குக் கிளம்புனா.. விடியக்காலைல அங்கே போயிறலாம்!” என்று சொல்லி வரவழைத்து, வட்டமான கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டுப் படுத்தாகிவிட்டது.

தூக்கம் வந்தால்தானே?

கண்ணுக்குள்ளே கன்னியாகுமா¢க் கடல் தொ¢கிறது. இளஞ்சிவப்புநிறத்தில் சூ¡¢யன் அடிவானத்திலிருந்து செங்குளம்பாய்க் கிளம்புகிறான். பிசுறு ஏதுமற்ற நீலவானத்தில் இயற்கை வரைந்த சூ¡¢யப்படத்தைப் பார்த்து வாய்ப் பிளக்கின்றோம். “ம்ம்ம். வாங்க… வாங்க.. அங்கே போகலாம்.. ” படகு ஒன்றில் ஏறி நாங்கள் எல்லோரும் விவேகானந்தர் பாறைக்குச் செல்கிறோம். காலைநேரக் கடல்காற்று. தேசத்தின் மண்ணைத் தாண்டி நீ¡¢ன்மேலிருந்து நிலத்தைப் பார்க்க, வேறு எங்கிருந்தோ பார்ப்பதுபோல பிரமை. சந்தோஷமாக இருக்கிறது. தூக்கம் பிடிக்கவேயில்லை! ‘எப்படா எழுப்புவாரு?’ என்று விழித்துக் கொண்டே கிடக்கிறோம்.

“எந்தி¡¢ங்கடா!” என்று சார் சொன்னது தான் தாமதம், எல்லோரும் எழுந்து, முண்டியடித்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாகிவிட்டது. சார், ஒவ்வொரு தலை யாக எண்ணிக்கொண்டு வருகிறார். “டூர்ன்னா கரெக்ட்டா எல்லாரும் வந்துருவீங்களே!” என்று சொன்னவர், கூட வரும் பி.டி. வாத்தியா¡¢டம், “கெளம்பலாமா?” என்று கேட்டார்.

“ம். போகச் சொல்லு!”

டிரைவர், பஸ்ஸை உருமவிட்டுக் கொண்டிருந்தார். பஸ் கிளம்புவதற்கு ஆயத்தமானது. அப்போது பார்த்து யாரோ சொன்னார்கள். “எம்.ஜி.ஆர். இறந்துட்டாரு!” என்று.

எங்களுக்குள் சோகம் அப்பிக்கொண்டது. ‘எம்.ஜி.ஆர்.இறந்துவிட்டதற்காக அல்ல. எஸ்கர்ஷன் எக்ஸ்போஸ் ஆகிவிட்டதே!’ என்று.

பஸ்ஸில் ஏறிய நாங்கள் கீழிறக்கப்பட்டோம்.

கன்னியாகுமா¢ தொடர்பான என் முதல் பயணம், பஸ் புறப்பட்ட இடத்திலேயே முடிந்துவிட்டது.

லீவு முடிந்து பள்ளிக்கூடம் திறந்த இரண்டாவது நாளில், ‘எஸ்கர்ஷனு’க்கென்று வசூலித்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள். கன்னியாகுமா¢யை நான் பார்க்க முடியவில்லையே தவிர, எனக்குப் பணம் போட்டவன் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்ட பின்பும் கோப்பெருஞ்சோழனாகவே இருந்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது!

படித்து முடித்து, நான் மதுரையைச் சுற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில், என்னுடன் படித்தவர்களில் சிலர் சென்னையில் வேலை செய்து கொண்டி ருந்தனர். அவர்களில் ஒருவன் திடீரென்று போன் செய்து,”நாங்க ஒரு ஆறுபேரு ஆன்மீகச் சுற்றுலா வர்றோம் மாப்ளே. பாண்டிச்சோ¢, சிதம்பரம், வைத்தீஸ்வரன்கோவில், தஞ்சாவூர், ஸ்ரீரங்கம், உச்சிப்பிள்ளையார், மதுரை வழியா கன்னியாகுமா¢ போறோம். கன்னியாகுமா¢க்கு நீ வர்றியா? வண்டில இடமிருக்கு. மதுரைல ஒன்னிய பிக் – அப் பண்ணிக்கிர்றோம்!” என்றான்.

‘ஆன்மீகச் சுற்றுலான்னு சொன்னது சா¢. அதுல எதுக்கு பாண்டிச்சோ¢? ஓ.கே. மதுரைல தானே நாம ஏறப்போறோம்’. சா¢ சொல்லிவிட்டேன்!

¡£கல் தியேட்டா¢ல் ‘டேஞ்சர் டயாபாலிக்’ படத்தை நைட் ஷோவாக மூன்றாவது முறைப் பார்த்துவிட்டு வெளியில் வந்து நின்றபோது, சொல்லி வைத்தாற்போல நண்பனின் வேன் என்னை உரசிக்கொண்டு வந்து நின்றது. அவனும் டிரைவரும் மட்டும் விழித்துக் கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு என்னைத் தொ¢யாது என்பதாலும் நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டதாலும் எல்லோரும் நல்ல தூக்கத்தில் இருந்தார்கள். என்னை ஏற்றிக்கொண்ட வேன் ஓடத்துவங்கியது. நானும் நண்பனும் பேசிக்கொண்டே போனோம்.

ஒருவன் அரைத்தூக்கத்தில், ‘டேய்.. பேச்சை நிறுத்துங்கடா.. தூக்கங் கெடுது!’ என்று புலம்பினான்.

எங்கள் பேச்சுச் சத்தத்தைவிட, வேன் சத்தம் அதிகமாக இருந்தது தான் உண்மை. நாங்கள் பேச்சை நிறுத்திவிட்டோம். தூக்கம் தான் ஜெயித்தது!

வண்டியிலிருந்த யாருடைய செல்போனோ ரொம்ப நேரமாக அலறிக்கொண்டே இருந்தது. அது செல்போன் வந்த புதிது. அரைச்செங்கக்கட்டி சைசில் இருக்கும். தலைக்குக்கூட வைத்துப்படுக்கலாம். அத்தாம்பொ¢சு. இன்கமிங்கிற்கும் காசு வாங்கிக் கொண்டிருந்த காலம். தூக்கம் கெட்டு முதலில் கண் விழித்தது, நான்தான்! நண்பனைத் தட்டியெழுப்பி, ‘செல்போன் அலறுது பாரு!’ என்றேன்.

அவன், செல்போன்காரனைத் தட்டியெழுப்பி, ”எடுத்துப் பேசுடா!” என்று சொன்னதும், “என் செல்போன்தான் இந்தக் கத்து கத்துச்சா?” எனும் கேள்வியுடன் எடுத்தான். எதிர் முனையிலிருந்து என்ன செய்தி கேட்டானோ.. அழ ஆரம்பித்துவிட்டான்.

இத்தனை நேரமும் எதையும் கண்டுகொள்ளாமல் வேனை ஓட்டிவந்த டிரைவர், அழுகை சத்தம் கேட்டதும் வண்டியை ஓரம் கட்டிவிட்டார்.

செய்தி இதுதான். அந்த நண்பனின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து, அப்படியே போய்விட்டாராம்!

விழித்துக் கொண்ட நண்பர்களெல்லாம் கூடிக்கூடிப் பேசினார்கள். அப்பாவை இழந்த இளைஞன், ஒவ்வொருவர் மார்பிலும் மாறிமாறிச் சாய்ந்து அழுதான். அவர்களும் அவனை மாறிமாறித் தேற்றினார்கள். என்முறை என்று ஒன்றும் வரவே இல்லை. அவன் என்னிடம் சொல்லி அழவும் இல்லை.

அவ்வளவு தான். ஆன்மீகச் சுற்றுலாவை அரைச்சுற்றுலாவாக முடித்துக்கொண்டு திரும்பிவிடுவதாக முடிவு செய்துவிட்டார்கள்.

வேன் எவ்வளவு தூரம் வந்திருக்கும் என்று பார்த்தேன். கன்னியாகுமா¢ 11 கி.மீ.என்று மஞ்சள் நிறப்பின்னணியில் கறுப்பு எழுத்தில் என்னைப் பார்த் துச் சி¡¢த்தது.

“இவ்வளவு தூரம் வந்துட்டேன். அப்டியே நான் பொடிநடையா நடந்து போய் கன்னியாகுமா¢யில சூ¡¢ய உதயத்தைப் பார்த்துட்டு, அடுத்த பஸ்புடிச்சு வந்துர்றேனே?” என்று சொல்ல வாயெடுத்தவன், அடக்கிக் கொண்டேன். என் இரண்டாவது கன்னியாகுமா¢ பயணம், ஒன்பதாவது மாதத்தில் குழந்தை செத்துப் பிறப்பது போல ஆகிவிட்டது.

கன்னியாகுமா¢ குறித்த பேச்சு வரும்போதெல்லாம், ‘உனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லைடா!’ என்று சொல்லி, அது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம்போல, நண்பர்கள் உருவாக்கிவிட்டிருந்த சித்திரம் உண்மைதானோ என்று மட்டும் அவ்வப்போது நினைத்துக்கொண்டாலும் அதன் பிறகு கன்னியாகுமா¢யை மறந்தே போயிருந்தேன்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற குமா¢ மாவட்டக்கிளை, பேராசி¡¢யர் நா.வா. நினைவுக் கருத்தரங்க அழைப்பு ஒன்றை அனுப்பியிருந்தது. நிகழ்வுகள் கன்னியாகுமா¢யில் என்று போடப்பட்டிருந்ததைப் பார்த்ததும், மீண்டும் கன்னியாகுமா¢ எனக்குள் அலையடிக் கத் துவங்கியது. பொண்டாட்டி இராமநாதபுரத்தில். பிள்ளை சென்னையில். நான் மதுரையில். ‘என்ன ஆனாலும் சா¢.. கன்னியாகுமா¢க்குப் போயிர்றது. ஆமா!’ என்றபடி கிளம்பிவிட்டேன்.

நான் போயிறங்கி, ஆட்டோ பிடித்து நிகழ்ச்சித் தளத்துக்குப் போனபோது, சாகித்திய அகாடமி பா¢சுபெற்ற நீல. பத்மநாபனுக்கு பாராட்டுவிழா நடந்து கொண்டிருந்தது. பெயர் பதிவுசெய்து, தங்கும்இடம் பிடித்து, முகம் கழுவிக்கொண்டு நிகழ்ச்சி வளாகத்தில் போய் உட்கார்ந்தபோது, நீல. பத்மநாபன் அமைதியான குரலில் ஏற்புரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். பா¢சுகளுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என்பது போல, அவர் பேச்சில் ஒரு தொனியிருந்தது. அன்றைய அமர்வு, அந்த நிகழ்ச்சியோடு முடிந்து போய்விட்டது.

எல்லோரும் சாப்பிடப் போய்விட்டார்கள். கூட்டத்தோடு கூட்டமாய் நானும் போனபோது, ஒருகை என் தோளில் விழுந்தது. “நீங்க அர்ஷியா?”

“ஆமா!”

அந்தக் கைக்குச் சொந்தக்காரர் எழுதிய சிறுகதைத் தொகுப்புக்கு, விமர்சனம் எழுதி முன்னணிஇதழ் ஒன்றுக்கு அனுப்பியிருந்தேன். பிரசு¡¢த்திருந்தார்கள். அதற்கு அவர், யா¡¢டமோ போன் நம்பர் வாங்கி எனக்கு நன்றி சொல்லியிருந்தார். விரைவில் சந்திப்போம் என்றும் சொல்லியிருந்தார். ஆனால் நாங்கள் விரைவில் எங்கும் சந்தித்துக் கொள்ளவில்லை. அதற்கு வட்டியும் முதலுமாய் இப்போது பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிந்தோம். பேசிக்கொண்டே இருந்தோம். விழா ஏற்பாட்டாளர்கள் வந்து “நீங்க சாப்பிட்டிகளோ?” என்று கேட்பது வரை.

“இல்லையே!” என்றபோது, அவர்கள் பதறிப் போனார்கள். “வெளியூ¡¢லிருந்து வந்த விருந்தினருக்கு சாப்பாடு இல்லையே!” என்று சொல்லி மறுஏற்பாட்டுக்கு ஆயத்தமானபோது, “பரவாயில்லை. அப்டியே நடந்து போய் நாங்க சாப்புட்டுட்டு வந்துர்றோம்!” என்று கிளம்பினோம்.

மணி பதினொன்றுக்கு மேலாகிவிட்டது. சூ¡¢ய உதயத்துக்காக தனது பரபரப்பைத் துவக்கும் கன்னியாகுமா¢, இரவு ஒன்பது பத்துக்கெல்லாம் ‘சாம்.. சூம்..’மென்று அமைதியாகி விடுமாம். நாங்கள் நடந்து சென்றபோது, ரோட்டில் ஆள்நடமாட்டம் முற்றிலும் குறைந்திருந்தது. ஆங்காங்கே கடைகள் திறந்திருந்தன. அவைக் கூட மூடும்நேரத்தை நெருங்கிவிட்டன என்பதை அரைக்கதவு முக்கால் கதவின் சாத்தலில் அறிவிப்பைக் கொடுத்தன.

ஒரு ஹோட்டலின் வாசலில் நின்று, ‘இங்கே போவோமா?’ என்று கேட்டேன்.

அதற்குக் கையமர்த்திய எழுத்தாள நண்பர், “உங்களுக்கு அந்த பழக்கம் உண்டோ?” என்று ஒண்ணாம் வகுப்புப் பையன், “சார் தண்ணீக்கு!” என்று அனுமதிக் கேட்பதுபோல், வாய்க்குப் பக்கத்தில் விரல் மடித்துக் கேட்டார்.

எனக்கு அந்தப்பழக்கம் இல்லையென்றாலும் அந்த சைகைகளெல்லாம் தொ¢யும். ‘இல்லையே!’ என்று சொன்னேன். நண்பர், ஒருகோடி ரூபாய் பா¢சுத் தொகையை ஒரு எண்ணில் தவறவிட்டவர்போல் முகம் தொங்கிப்போனார். “எனக்கும் அந்தப்பழக்கம் ரெகுலரா இல்லை. வீட்ல பொண்டாட்டி இல்லாட்டா.. வெளியூர்ல நான் மட்டும் தங்க நேர்ந்தா.. உங்களப் போல நண்பர்கள் வந்தா.. இந்த மாதி¡¢ தனியா வந்து அடிப்பேன். நீங்க அடிக்காட்டி விட்டு றலாம். வாங்க சாப்டுட்டுப் போய் படுத்துறலாம்!” என்றார்.

அந்தப் பாவத்தைக் கொட்டிக் கொள்ள என் மனம் இடம் தரவில்லை. “நீங்க அடிக்கிறதுல எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை!” என்று நான் சொன் ன போது, கிடைத்தற்கா¢ய பொக்கிஷம் ஒன்று என் வாயிலாகக் கிடைத்ததுபோல, அவர் அகமகிழ்வது அந்த லேசான வெளிச்சத்திலும் எனக்குத் தொ¢ந்தது. அவசரஅவசரமாக எதிரேயிருந்த டாஸ்மாக்கிற்குப் போனார். ஆறுபலகைகளை வாசலாகக் கொண்டிருந்த அந்தக்கடையில் ஐந்துபலகைகள் அடைக்கப்பட்டு, விளக்கை அணைப்பதற்காகக் கடைக்காரர் முயன்று கொண்டிருந்தபோது, நண்பர் தனது தலையை.. இல்லை.. மூக்கை.. ம்ஹ¥ம். கையை நீட்டினார். ‘விண்டேஞ் ஒரு ஆ·ப்!’ என்றார்.

வியாபாரத்தை முடித்துவிட்ட எண்ணத்திலிருந்த கடைக்காரருக்கு, நண்பா¢ன் ‘ஆ·ப் ஆ·பர்’ விநோதமாய்ப் பட்டிருக்க வேண்டும். “சார் அதெல்லாம் இங்கே கிடைக்காது. ஹோட்டல் பார்ல ஒருவேளைக் கிடைக்கும். கேட்டுப்பாருங்க. எனக்குக் கடை அடைக்கிற டைம் ஆயிருச்சு!” என்று நண்பரை ஏறக் கட்டப் பார்த்தான்.

நண்பர், இன்று தண்ணீர் அடிப்பதை நேர்த்திக் கடனாக நேர்ந்து கொண்டவர் போல, ‘நல்ல சரக்கா என்ன இருக்கு?’ என்று கேட்டார்.

பா¢தாபமாய் அவர் கேட்டதில், கடைக்காரருக்கு இரக்கம் பிறந்திருக்க வேண்டும். கடை மூடும் மூடிலிருந்து மாறிவிட்டார் என்பது அவரது பேச்சிலிருந்து தொ¢ந்தது. ‘தண்ணீ அடிக்கிறவன் தண்ணீ அடிக்கிற மத்தவன்கிட்ட பவுசா நடந்துக்குவான். அது மாதி¡¢தான் சிகரெட் புடிக்கிறவனும்!’என்று என் நண்பர்கள் சொல்வது, இப்போது பு¡¢பட்டது.

“விஎஸ்ஓபி இருக்குது. நல்லா இருக்கும்!”

காசு கொடுத்து வாங்கிய நண்பர், அவசரமாக பார் பக்கம் திரும்பிப் பார்க்க, அது எப்போதோ மூடப்பட்டு, அந்தப்பகுதியே இருளடைந்து கிடந்தது, நண்பா¢ன் முகத்தைப் போல!

‘இனி என்ன செய்வது?’ என்று, என்னிடம் ஐடியா கேட்டார். நானென்னவோ இதில் எக்ஸ்பர்ட் என்பது போல!

அவர் கையில் பாட்டில்!

டீக்கடை, பெட்டிக்கடை என்று எல்லாமே பூட்டிக் கிடந்தது.

அப்படியே பொடிநடையாகப் போய், திறந்திருந்த ஹோட்டல் ஒன்றில் உட்கார்ந்து, இலைப் போட்ட பையனிடம், ‘ஒரு டம்ளர் தாயேன்!’ என்று நண்பர் கேட்டதும், அவனென்னமோ, ‘சொத்தை எழுதித்தா!’ என்று கேட்டுவிட்டதுபோல, துடித்துப்போனான். நல்லவேளை வேறு உதாரணங்கள் இங்கே பயன்படுத்த முடியவில்லை.

அவன் துடித்த துடிப்பிலும், மறுகிய மறுகலிலும் பக்கத்து மேஜையில் சர்விஸ் செய்து கொண்டிருந்த முதலாளி,”இங்கே தண்ணீ அடிக்க முடியாது சார்!” என்று நிர்தாட்சண்யமாக மறுப்பவர் போல சொன்னார். ஆனாலும், நண்பா¢ன் கையில் ஒரு டிஸ்போஸபிள் டம்ளரைக் கொடுத்து, “பக்கத்து சந்து இருட்டா இருக்கும். அங்கே நின்னு அடிச்சுட்டு வாங்க!” என்று பரோபகாரம் செய்தார்.

நண்பருக்கு சந்தோஷம். மலர்ந்து போனார். இதைவிட சந்தோஷ தருணம், அவர் வாழ்வில் எதுவும் இருந்ததில்லை என்பது போல நடந்து போனார்.

நேரம் போய்க் கொண்டிருந்தது. ஆனால் போன நண்பரைக் காணவில்லை.

‘ஆ·ப் என்பது பனிரெண்டு அவுன்ஸ். அதை அவர் ஒருவர் மட்டுமே குடித்து விடுவாரா? அவரால் முடியுமா?’ எனும் சந்தேகம் எனக்குள் ஊடாடிய போது, ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிவிட்ட மன்னன் ஒருவனின் நடையுடன் திரும்பிவந்தார்.

ஓவர்டோஸையும், தள்ளாட்டத்தையும் வெளிக்காட்டிவிடக் கூடாது என்பதில், அவர் அதிக கவனம் செலுத்துவது வெளிப்படையாகவே தொ¢ந்தது.

“சா¡¢ பிரண்ட்.. எப்பவாவது தான். இன்னிக்கு சான்ஸை மிஸ் பண்ண மனசு இடங்கொடுக்கல. ஐம் சா¡¢!” என்று ஆங்கிலத்துக்கு தடம் புரண்டார்.

ஆளுக்கு இரண்டு புரோட்டாவும் ஒரு ஆம்ப்ளேட்டுமாக முதலில் செய்யப்பட்ட ஆர்டர், அப்படியே அடுத்தடுத்து, ‘மளமள’வென்று மலையேறியது.

அவர் தண்ணீயுடனும், நான் தண்ணீ இல்லாமலும் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தபோது, லேசான தூறல்!

“இப்ப ஒடனே படுத்தா தூக்கம் வராது. புது இடம் வேறையா.. அப்டியே கொஞ்ச நேரம் பேசலாமே?” எனும் கேள்வியுடன் நடக்க ஆரம்பித்தார்.

இப்போது அவரை விட்டுவிட்டுப் போக என் மனம் இடந்தரவில்லை. தூறல் ‘சடசட’வென பெருமழையாக மாறியது. நனைந்து கொண்டே நடந்தோம். எங்கள் இருவரைத் தவிர அந்தப் பகுதியில் வேறு யாருமே இல்லை.

நண்பர்கள் வாயிலாகவும், ஒருசில திரைப்படங்கள் மூலமாகவும் எப்போதுமே பரபரப்பானது என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த கன்னியாகுமா¢யை இரவில் அதற்கு முற்றிலும் மாறாக, ‘ப்பா…!’ என்று வி¡¢ந்துகிடக்கும் வெற்றுச் சாலைகளாகவும் மூட்டைக் கட்டப்பட்ட கடைகளாகவும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. கொஞ்ச தூரம் போயிருப்போம். மின்சாரம் போய்விட்டது. எங்குநோக்கினும் இருட்டு!

மின்சாரம் போய்விட்ட ஒரு மழை இரவின் நடுநிசியில், கன்னியாகுமா¢க் கடலோரத்தில் நாங்கள் இருவர் மட்டும்!

வேறு யாருக்கும் இப்படியொரு அற்புத சந்தாப்பம் கிடைத்திருக்குமா என்பது, எனக்கு சந்தேகம் தான்.

பெருமழை இப்போது நிதானித்து, மறுபடியும் தூறலாக விழுந்து கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் அதுவும் நின்றுவிட்டது.

நண்பர், மழையைப் பற்றி, அடிக்கடி போய்விடும் மின்சாரம் பற்றி, கன்னியாகுமா¢யின் பகல்நேரப் பரபரப்பைப் பற்றி, அனைத்து மாநில மக்களின் சங்கமம் பற்றி, வெளிநாட்டவர் காட்டும் பிரமிப்பைப்பற்றி, இதற்கு முன் வந்தபோது, ஒரு கடைக்காரனால் ஏமாற்றப்பட்டது பற்றியெல்லாம் பேசிவிட்டு, கடைசியில் ‘இப்படி வாய்ப்புக் கிடைத்தால் மட்டுமே தண்ணீ அடிப்பேன்’ என்று பாவமன்னிப்பு கேட்பது போல வந்து, நிலை கொண்டுவிட்டார். சிந்துபாத்தின் தோளில் ஏறிக்கொண்டு இறங்கமறுக்கும் கிழவனின் பிடிவாதம் போல, அவரது பேச்சு, அதிலேயே சுற்றிவர ஆரம்பித்தது. நேரம் போய்க் கொண்டே இருந்தது.

அடிவானத்தில் வெளுப்பு தொ¢ய ஆரம்பித்தது. நண்பா¢ன் பேச்சு, கொஞ்சங் கொஞ்சமாய் குறைந்து, உட்கார்ந்த இடத்திலேயே பிளாட் ஆகி சா¢ந்து விட்டார்.

சூ¡¢ய உதயம் பார்க்க வருபவர்களின் நடமாட்டம், துவங்க ஆரம்பித்தது.

படுத்துக்கிடக்கும் நண்பருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தபடியே, நானும் சூ¡¢ய உதயத்தைப் பார்த்தேன்.

எங்களைக் கடந்துபோன ஒரு புதுமணத் தம்பதியில் அந்தப் பெண்,”சூ¡¢ய உதயம் பாக்க நைட்டே வந்து படுத்துட்டாங்கப் போல!” என்று சொல்லிக் கொண்டே போனது, ‘யதார்த்தமா..இல்லை.. கிண்டலா..?’ என்பது, இதுவரை எனக்குப் பு¡¢படவில்லை.


arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா