மலர்மன்னன் எதிர்வினைக்கு நன்றியுடன்

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

புதியமாதவி, மும்பை


எழுத்தாளர் புவனேஸ்வரியின் சிறுகதைகள் குறித்த என் விமர்சனத்திற்கான உங்கள் எதிர்வினைக்கு மிக்க நன்றி.

ராமனை நீங்கள் கடவுளின் (அப்படி ஒருவர் இருந்தால்) அவதாரமாக நினைப்பது போலவே எழுத்தாளர் புவனாவும் சீதாப்பிராட்டியைக் கொண்டாடுகிறார். இதில் மரபு சிதைக்கப்பட்டதாக நீங்கள் விசனப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் விமர்சனத்தை இன்று புவனாவுக்கும் வாசித்துக் காட்டி புரியவைத்தேன். மலையாளத்தில் எழுத்துதச்சன் எழுதிய ராமாயணக்காவியத்தை அறிந்த அளவுக்கு வால்மீகியைத் தான் வாசித்திருக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொண்டு உங்கள் விமர்சனத்திற்கு தன் நன்றியைத் தெரிவிக்கச் சொன்னார்.

மேலும், வால்மீகி என்ற படைப்பாளிக்கு இருந்தக் கற்பனா சுதந்திரம் புவனேஸ்வரி என்ற படைப்பாளிக்கும் இருக்கிறது எது மரபு மீறல், எது மரபை சிதைத்தல் என்பதெல்லாம் அவரவர் பார்வையில் புரிதலில் புரிந்துக் கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது. இந்திய மொழிகளில் எழுதும் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் தொன்மக்கதைகளை எடுத்துக்கொண்டு கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான தொடர்பை அவரவர் பார்வையில் புனைவுகளின் ஊடாக எழுதி வருவதையும் அந்த உத்தியில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் மிகச்சிறந்தவைகளாக இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

சூர்ப்பனகை கதையை ‘”சிலாகித்துப் பேசுகிறபோது புதிய மாதவியின் எழுத்தில் தனி உற்சாகமே கொப்பளித்து வருகிறது!’ என்ற உங்கள் குற்றச்சாட்டை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சின்ன திருத்தம், குற்றச்சாட்டாக அல்ல, உங்கள் பாராட்டாகவே!

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை