மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

ராம்கி


மோடியின் வெற்றி மேல் ஊடகங்களின் காழ்ப்பு குறிப்பாகத் தாப்பரின் தாபம் பற்றி மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி. ஹிந்து போன்ற நாளேடுகளும் தம் பங்கை இதே போன்று (பார்க்க ராமசாமி அய்யரின் கட்டுரை http://www.hindu.com/2008/01/05/stories/2008010556451100.htm ) செவ்வனே செய்திருந்தன. காரத் ஜனநாயக நெறிகளுக்கு வெளியிலேனும் இதற்கு தீர்வு காண விழைகிறார். நந்திகிராம முயற்சியின் வெற்றிக் களிப்பு போலும். ஜனநாயகத்தின் மேல் இவர்கள் பிடிப்பு இவ்வளவு தான் என்பது கவலை அளிக்கவில்லை. எதிர்பார்க்கக் கூடியதே எதிர்கொள்ளக்கூடியதுமே. இருப்பினும் ஆங்கில ஊடகங்கள் இதில் காட்டும் முனைப்பு கவலை அளிக்கிறது. இந்தியாவின் படித்த மக்கள் எதை நோக்கி நகர்கிறார்கள்? ஏட்டு கல்வி அதிகம் உள்ள கேரளா கம்யூனிஸ்ட்களை தூக்கி பிடிப்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். ஓய்வு பெற்ற ஒரு IAS அதிகாரி முருகனின் துக்ளக் கட்டுரை ஆறுதல் அளிக்கிறது. மோடி படைக்கும் புதிய பாதையை மற்ற பா ஜ க மாநில முதல்வர்களாவது கைக்கொள்வார்களா?

மோடி தன் அரசியல் எதிரிகளை வெற்றிக்குப் பின் அரவணைத்தது பற்றியும் சிலர் சிலாகிக்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை. ஆனால் அதனூடே ஜெயலலிதா-கருணாநிதி-தமிழக அரசியல் நிலை பற்றியும் புலம்புகிறார்கள். இதை ஏற்க இயலவில்லை. ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் கிடைத்த மரியாதையை நாடறியும். அதன் பின்னர் அவர் மத மாற்சாரியங்களுக்கு இடமின்றி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமாகப்படவில்லை. ஜெயலலிதாவின் அரசியல் தகுதிகள் பற்றி இங்கு விவாதிக்கவில்லை.


vijiramki@yahoo.com

Series Navigation

ராம்கி

ராம்கி