திலகபாமா
அந்தக் கடற்கரையில் அந்தலும் சிந்தலுமாக உதிர்ந்து கிடக்கின்ற கட்டடங்களும் , துருவேறி எந்த ஆட்சியிலோ வைத்து விட்டுப் போன நினைவுத் தூண்களுமாக. கால்கள் மண்ணில் புதைய மனம் வேறெதிலோ புதைந்து வெளியேற முடியாததை உணர்ந்தவளாக கடலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்
மெல்ல மெல்ல அலைகள் வந்து கால் நனைத்துப் போக நானும் உள்ளிறங்கினேன். இப்பொழுது இடைவரை கடல் போர்த்திக் கிடக்க அவ்வப் போது அலை வந்து உதைத்துப் போக சுகமாக உணர்ந்த படி இருந்தேன். அடி வாங்குவதை சுகமாக உணர்ந்து கொண்டிருக்கிற எத்தனையாவது பிறவி இது. என்று கேள்வி எழ
நினைத்திடாத வேளையில் விஸ்வரூபம் எடுத்து வந்த அலை யோசிக்கவே முடியாத படிக்கு சுருட்டிக் கொண்டது எனை. இதோ எங்கேயிருக்கிறேன் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் எங்கே போய்ச் சேருவேன் அறியாத உலகத்தில் நான். எனைச் சூழ நீர் இருக்க மெல்ல மெல்ல நினைவு தப்பிக் கொண்டிருந்தது.
*
மாநாய்கன் மகள், கோவலனின் மனைவி என்று தோற்றமே அறிவுறுத்திக் கொண்டிருக்க உடலெல்லாம் நகைகள் சிரிக்க அதற்குள் சிரிக்காதவளாக அவள் அமர்ந்திருந்தாள்.
உள்ளே வந்தவன் படோபடோபம் அவளை மிரட்டியது . சுற்றியிருந்தவர்கள் நாலடி தள்ளிப் போகக் கூடிய தோற்ற மிரட்டு. ஊஞ்சலை ட்டக் கூட தெம்பில்லாதவளாக அசையா ஊஞ்சலில் நிலையில்லா மனதுடன் அமர்ந்திருந்தாள் அவள்.
�கண்ணகி, கண்ணகி�
தோரணை அழைப்பு திடுக்கிட வைக்க ஊஞ்சல் அரண்டு எழுந்து பதறியது. அவளோடு.
�போகணும்� என்று
வேகமாக சொல்லியவனைத் தொடர்ந்து எழுந்தவள் சடாரென மீண்டும் அமர்ந்தாள் ஊஞ்சலில்
�போய் வாருங்களேன்�
உதடு சிரித்தது.
வாய் சொன்னது .
உள்ளம் கனன்றது.,
மறைத்தது முகம்
உணவருந்தவென்று தயாரிப்போடு வந்தமர்ந்தவனுக்கு அவள் வார்த்தைகள் முகத்தில் நீரை எறிந்ததாய் பட சந்தேகத்தோடவே நிமிர்ந்து பார்த்தான்
ஊஞ்சலில் டும் சப்தத்தில் இதற்கு முன்பிருந்த நாட்களை அவள் மனம் எண்ணிப் பார்த்தது.. வணிகத்தை பார்த்துக் கொண்டிருந்த வேலைப் பொழுதிலும் சாப்பிடவென்று அவன் தேடி வந்த காலங்களுக்கு தான் மகிழ்ந்து போனதை நினைத்து இன்று வெட்கப் பட்டாள். சாப்பிடுவதற்கு என்று இல்லாத பொழுதினிலும், சாப்பிடவென்று காரணமிட்டு வந்த காலங்கள் பொய்யா? சாப்பிட வந்தே தீர வேண்டும் எனும் நிலை வந்த போதும், வருவது கூட போவதற்காகத்தான் என ஏற்படுத்திக் கொள்ளும் நிலைதான் நிஜமா? நினைப்புகள் ஏற்கனவே உண்ணாமல் இருந்ததும் சேர்ந்து கிறுகிறுப்பைத் தர ஊஞ்சலை விட்டு எழுந்து போனாள்.
பார்த்துக் கொண்டிருந்த கோவலனுக்கு கோபம் வந்திருக்க
� சாப்பாடு கட்டும்� என்றான்
�போகவேண்டும் என்றீர்களே அதனால் சாப்பிட நேரமில்லையோ� என்று அவள் சொல்ல அவளை பாம்பென்று மிதிப்பதா? பழுதென்று தாண்டுவதா புரியாமல் தவித்தான்
கோபத்தை காட்டி விட்டால் பாம்பென்று மிதித்து விடுவான். பழுதென்று உணரும் படி தந்து விட்டால் அதையும் தாண்டி விட்டுப் போவான் என்று கொதிப்பு வர அப்போ இதுவரை தின்னப் பட்டு விட்டோமோ நினைப்பு வர, பரஸ்பரம் என்றில்லாமல் கோவலன் அவளைத் தின்கின்றவனாய் உணர்த்திய இடம் எது?
யோசனையோடு வேறு வழியன்றி உணவைப் பரிமாற
தன் தோல்வியை மறைத்துக் கொள்ளப் பிரயத்தனப்பட்ட கோவலன் உண்ணுவதில் கவனமானான். கொஞ்ச நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனான்.
*
அவனைத் தன் மடியிட்டு தாலாட்டிய நாட்களை நினைத்துப் பார்க்கிறாள் இதே ஊஞ்சலில் எத்தனை நாள் சை வசனம் பேசி தரவு வேண்டுமென்று மடிமீது கிடந்திருப்பான் என்றாவது அவளிடமிருந்து பெற்ற தரவுக் கரங்களை தான் தின்ற நேரம் போக தந்து விட வேண்டுமென்று யோசித்திருப்பானா?
தந்து விட யோசிப்பது இருக்கட்டும் முதலில் அவனுக்கென அவன் தேடிக்கொள்ளும் உறவுகள் அவளுக்கு எதிரானதாய் மாறிப் போவதையாவது அறிந்திருப்பானா? இப்பொழுது கிளம்பிப் போகிறவன் இனி எந்நேரம் வருவானோ? சமீப காலமாக அவனுக்கு ஏற்பட்டிருக்கும் தொடர்புகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள். அவன் மூடி வைக்க நினைத்தாலும் நாலு பக்க சுவர் தாண்டி வாசம் வீசிக் காட்டிக் கொடுத்துவிடும் தொடர்புகள் இவை என்று அறியாமலா இருப்பான். மாதவி எறிந்த மாலை அவன் கழுத்தில் வீழ்ந்ததுதான் ஊரறிந்த ரகசியமாச்சே. னால் அதில் தான் எவ்வளவு பெருமை கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவன் கழுத்தில் விழுந்து விடப் பெருமை சந்தோச உருவெடுத்து அவனுக்கு டிய கணங்களையும் பயத்தோடுதான் பார்த்துக் கொண்டிருந்தாள். இவளது காதுகளுக்கும் எல்லாம் வந்து சேர்ந்ததை அவனும் உணர்த்திருந்தான். அவளும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை .அவனும் ஒன்றும் அறியாதது போல உண்மை பேச வேண்டி வரும் சந்தர்ப்பங்களைத் தூர வைத்துக் கொண்டான் நெருங்க விடாத படிக்கு. தெரிந்ததாய் காட்டிக் கொண்டுவிட்டலோ எங்கே பயந்து பயந்து சேற்றில் வைத்த கால்களை துணிந்து வைக்கத் துவங்கி விடுவானோ பயம் வந்த போது கேள்வியும் வந்தது . எதனால் இந்த நிலை வந்தது பெண்ணுக்கு ?
இருபக்கம் இடி வாங்கும். நிலை காத்திருப்பை விட சகித்திருக்க வேண்டிய நிர்பந்தம் நேர்ந்திருப்பது உள்ளுக்குள் குடைச்சலைத் தந்திருந்தது.
தன்னந்தனியே ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் நாலாபுறமும் ஊஞ்சலை தாங்கியிருந்த கம்பிகள் இவள் அமர்ந்திருந்த அழுத்தலில் கிரீச்சிட்டன. அவளது மனம் போல ஓலமிட்டு குமுறுவதாய் தோன்ற ஊஞ்சல் பலகையை விட்டு எழுந்தாள் மையக் கூடத்தில் இருந்த தூணோரம் வந்தமர்ந்தாள். அவள் அழுத்தம் விடுபட அதற்கும் புலம்பிய ஊஞ்சல் கூடுதலாய் டியது
ஊஞ்சலில் மேல் சலனம் நின்று போக மேலும் கீழுமாய் டியது . பலகையின் கனத்தை பாரத்தைச் சுமந்திருந்த போதும் பலகை போகும் பக்கமெல்லாம் டிய போதும் பலகையோ வேறு யாரையோ தானே தாங்கி தாலாட்டப் பண்ணுகிறது ஊஞ்சலை தாங்கியிருந்த சங்கலிகள் புலம்பி தேய்வது தான் அதற்கான வாழ்க்கையா? அது உறங்கவே முடியாதா தாலாட்டு சுகத்தில்.
ஊஞ்சலின் சங்கலிகளுக்காக கவலைப் பட்ட மனது மெல்ல அவளுக்கானதாய் மாறத் துவங்கியிருந்தது. கவலை அலையாய் அரிக்க ழ்கடலாய் மாறிவிட யோசித்தாள் . மாறியிருந்தால் அலைகள் எழும்பிவிட வாய்ப்பில்லை . இல்லை அங்கேயும் காற்றின் ஓசை ஓயாது மோதி சலனப் படுத்தும் மீன்களின் சுவாசப் பேரிரைச்சல் தூங்க விடாது . எண்ணங்கள் கடலுக்குள் மூழ்கிப் போக அசைந்த கால்களின் சிலம்பின் ஓசை அவளுக்கு இதமாய் இருந்தது. தரையோடு சிலம்பு உரச கால்களில் அழுத்தமும் வலியும்
மீண்டும் பழைய விசயங்களோடு தைத்துக் கொண்டது. மனது தரையும் சிலம்பும் உரசிக் கொள்ள வலி மட்டுமெனக்கா?
என் கோபங்கள் அவனை அழுத்துவதில்லை . ஏன் மாதவியாவது அவனது காதலில் மகிழ்ந்திருப்பாளா இல்லை அவளுக்கும் இதே பேரலைகள் அரிக்குமா? தான் மகிழ்வென்று நினைத்ததில் தானும் மகிழவில்லை.. எதிர்த்து தன்னோடு இருந்த யாரையும் சந்தோசப் படுத்தவும் முடியவில்லை என்று உணர்வானா கோவலன். அவனளவிற்காகவாவது கூடி வந்த காதலில் மகிழ்ந்திருப்பானா? மாட்டான். என்றே தோன்றியது . அவன் தன்னை விட்டுப் போகும் போதும் நான் அவனை விட்டு போய் விடக் கூடாதெனும் நினைப்பிலிருந்தான்.
வெளியில் மழை பெய்யத் துவங்கியது . சின்னஞ் சிறு துளிகள் மெல்லப் பிரபஞ்சம் நிறைத்தது. திரையாய் வீழ்ந்து மண்ணில் முதலில் காணாது போய் மெல்ல மெல்ல மண்ணை நிரப்பி நீராய் பெருக்கெடுத்து ஓட
இதோ துளி துளிகளாய் இருந்த கோபங்களை இப்போதைக்கு காய்ந்து கிடந்த மண்ணாய் கோவலன் மீதிருந்த என் காதல்கள் இன்னமும் உறிஞ்சித் தீர்க்கின்றன. உறிஞ்சித் தீர்ப்பது என் காதல்களாய் இருக்க, நீ என்னை விலக்க முடியா இடம் நான் நிகழ்த்திப் போயிருக்கின்றேன். என்று பெருமை பேசிப் போகின்றான் னால் ஒரு நாள் மண்ணை நிரப்பி விழுங்கிப் போகும் நீர் என்று நினையாது வேரோடு பூவோடு உறவாடித் திளைக்கும் மண் நான் வந்து வீழ எனை மறைத்தே வைக்கிறது எனையும் , என் காதலையும், என் கோபங்களையும்
பெய்கின்ற மழையில் வெளியில் குறுக்கும் நெடுக்குமாய் பறந்தும் ஓடுகிற நீர் இடையில் இருந்த பள்ளத்தில் பெருக அதில் மூழ்கியும் போன மாதம் வரை மகிழ்ந்திருந்த சின்னஞ் சிறு குருவி இன்று திக்கு முக்காடிப் போய் விதானக் கட்டையில் சிலையாகி அமர்ந்திருக்கிறது ஒரு பதட்டம் அதன் கண்களில் அசைவுகளில் , சுவாசத்தில், உற்றுப் பார்த்தேன். விதான மூலையில் யார் கண்ணுக்கும் சிக்காது கூடு ஒன்றை கட்டி ஒளித்து வைத்திருக்க தூறல்களில் நனைந்து விடுமோ என கூடுகளைக் காப்பாற்ற எண்ணி எண்ணித்தானே பறத்தலே மறந்து போகின்றன இந்த குருவிகளுக்கு
என் கூட்டின் ஒவ்வொரு குச்சியாய் உருவிப் போகின்றான் கோவலன். என் கோபங்களோ சகிப்பெனும் ஓட்டுக்குள் அடைகாக்கப் பட்டுக் கிடக்கிறன. ஓட்டுக்குள் இருக்கும் வரை தான் தொலைந்து போகும் குச்சிகள் பற்றி கவலை கொள்ளும் வெளி வந்த பின்னாலோ கோவலன் உருகிப் போகும் குச்சிகளுக்காய் கவலை கொள்ளாது வானை நிறைத்து போயிருக்கும்
வீடெங்கும் இறைந்து கிடந்தன கேள்விகள். கலைத்துக் கலைத்துப் போட்டு பதிலைத் தேடினாள். பகல் முழுவதும் தேடலிலேயே கழிய இரவுகள் காத்திருப்புகளில் கழியத் துவங்கியது
வராமல் போன அந்நாட்களுக்கு பதில் சொல்வதைத் தவிர்க்க நினைத்து அவசர நெருக்கடித் தேவைகளோடவே வீடு வந்தான் . புரிந்தது அவளுக்கு அவளையே அவனுக்காக மட்டும் கவலைப் பட வேண்டியவளாக மாற்றி விட சரியாக மிகச் சிறப்பாக திட்டமிடுதல்களை அது அதுவாகவே தோணாத வண்ணமாகவே நடத்தி விடுகிறான்.. கவச குண்டலங்களாய் பரிதாப முகமும் நெருக்கடி முகமும் தாங்கியவனாகவே வந்து போகிறான்.
முகத்தோடு ஒட்டி ஒட்டிப் போனதில் பின்னால் முகமூடி என்று அறியாவண்ணம் முகத் தோல்களாகவே மாறிவிட்டதையே கிழித்து விட முடிகிற எனக்கு கவசகுண்டலங்கள் பிரம்மபிரயத்தணமாய் இருக்கவில்லை
எத்தனை திசை திருப்பலின் பின்னும் அதீத கவனமாய் கவசங்களை அவள் கிழித்து விட அடுத்த தாக்குதலாய் சொல்லிப் போகின்றான் நொண்டிச் சாக்குகளை. அவை அவன் பயணப் பட முடியாத சாக்குகள் என்று அக்குவேறு ணிவேறாக அவள் கிழித்துப் போட தோல்விகளில் எரிச்சலில் வந்து விடுகிறது .
அது கேள்வியா பதிலா?
� எனை பொய் சொல்ல வைப்பது நீதான் நீ விரட்டாமல் இருந்தால் துருவித் துருவிக் கேட்காமல் இருந்தால் பொய் சொல்லியிருக்க மாட்டேன்�.
கோபப் படுவாள் அல்லது மன்னிப்புக் கேட்பாள் , என்றும் அவனது இந்த பதிலைக் கேட்டால் வருத்தப் படுவேன் என்றும் அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும். னால் எனக்கோ சிரிப்பு அப்பிக் கொண்டது அவன் செய்தது தவறு என்றும் தவறு என்று அவனே உணர்ந்தே அதற்குள் சிக்கிக் கொண்டு வீறாப்பு பேசுவதையும் வாக்குமூலமாய் தந்து விடச் செய்த கேள்வி இது.
ஒவ்வொரு முறையும் மறைத்து வைக்க வேண்டி நீ நினைக்கிற செயல்களை விதைத்து விடுகிறாய். அது முளைத்து உனைக் காட்டிக் கொடுப்பதோடு என்னையும் சூழ்ந்து இறுகக் கட்டி விட முனைகிறது
இருக்கட்டும் என்றாவது ஒருநாள் என் காலடிக் கீழும் வராமலா போகப் போகிறாய் மனம் வன்மம் சூடியது.
ஊரடங்கும் நேரத்தில் தட்டப் பட்ட கதவு ஒலி தினந்தோறும் கேட்பதாய் மாற., இருளிலும் ஒவ்வொரு திறப்பிலும் உள்வரும் தூரத்து நட்சத்திர ஒலி கீறிய கோடாய் பளபளக்கும் வாளாய் அவள் கண் முன் உருமாறி நிற்க கை பிடித்து தூக்கினாள். ஒளிக் கீற்று என்ன செய்யும் எதிர்த்திருந்த கோவலன் எண்ணியிருக்க யாரும் பார்க்காத இடமிருந்து உணராத படிக்கு அறுக்கத் துவங்கியது
முடியணிந்த ரங்கள், வகிடெடுத்த தலையிருந்த சுட்டிகள், காதணிந்த தோடுகள் கழுத்தணிந்த அட்டிகைகள் இடையணிந்த மேகலைகள் கையணிந்த வளைகள் அவளை சகுந்தலையாக்கியிருந்த காதலிருந்த மோதிரங்கள் இறங்கிப் படிதாண்டிப் போக கோவலன் உள்வர விட்ட ஒளிக் கீற்று வைத்தே அறுக்கத் துவங்கினாள் அவள் அறுத்தலில் சரிந்து வீழ காலடிச் சிலம்பு கேட்டு இன்று கோவலன் நிற்கிறான்.
ஏறக்குறைய செத்து விட்டிருந்தான் இல்லை செத்துக் கொண்டிருந்தான் அவன் அவ்வளவு எளிதாக சாவதில் எனக்கு இஷ்டமில்லை. மீட்டுயிர் கொண்டு வந்து உடல் செலுத்தினேன் என் காலடி வீழும் வரைக்கும் . றாத மணம் தேறத குணம் ஓங்கி அடித்து சாகடித்து விடுவது ஒன்றும் கடினமல்ல. பதியை முந்தானையால் முடியத் தெரியாதவள் எனும் பழியை என் மேல் போட்டு பரலோகம் போயிருப்பான் ஊரும் உலகமும் தூற்றும் வரை தூற்றத் துணியும் வரை கீழிறக்க வேண்டும் எனக்கு நடந்த கொடுமைகளுக்கு அது ஒன்றே விலையாக இருக்க முடியும் இனி யாரும் நிகழ்த்தி விடக் கூடாதவற்றின் நினைவைப் பதிந்து போகும் சினமாகவும் இருக்க வேண்டும்
சுற்றி வந்த காலச் சக்கரத்தில் மேலும் கீழும் இடம் மாறிப் போக இதோ வீடு துடைத்து வைத்து காலி சந்தனச் சிமிழாய் பணக்கார வாசம் மட்டும் காணத் தந்தது
பொருள் போன பின்புதான் சிலருக்கு வாழ்வின் பொருளே புரிய ரம்பிக்கிறது உத்தரத்தில் டிய ஊஞ்சல் அதே கிறீச்சிடலுடன் டிப் போகின்றது .பிறந்த இடம் வளர்ந்த இடம் எல்லாம் துறந்து பிழைக்க ஒரு இடம் தேடி பயணிக்க புறப்படுகிறான் கோவலன்.
ஒளிக்கீற்றாய் கையில் எடுத்த வாளை தனக்குள் ஒளித்து வைக்கிறாள். இன்பம் கடந்து இயலாமை கடந்து துன்பம் கடந்து கோபம் கடந்து வந்தவள் நீர் கடந்து நிலம் கடந்து மதுரை வந்து சேர்கிறாள் கோவலனோடு. இதோ இதோ அவள் எதிர்பார்த்திருந்த தருணம் காலடிச் சிலம்போடு வந்து நிற்கிறது
நேரம் நேரத்திற்கு என்று சாப்பிட வந்த போதும் சாப்பிட முடியாது திணறுகிறான். �அவசரமாக போகனுமா?�
கேள்விகள் கேட்டு விடுவாளோ எப்பவும் போல எனும் பயம் பற்றிக் கொள்ள , எப்பவும் போலவே அவசரங்களோடு முடித்து வெளித் திண்ணையிலமர்ந்து விடுகிறான்.. மீனாட்சி அருள் வழங்கிக் கொண்டிருந்த கடைத் தெருவில் பரதேசியாக சுற்றி வந்த போதும் ளப் பிறந்தவனாய் பூம்புகார் கடைத்தெருவில் வாழ்ந்த நாட்கள் நினைவில் வந்து போயின தாசி குல மாதர் தவறுதலாய் கண்ணில் பட்ட போதும் கண்டு விட முடியாதவனாகவே இன்று இருக்கின்றான் .
கண்ணகி கதைவை மூடுவதே இல்லை. காத்திருப்பதும் இல்லை . காத்திருப்புகள் காத்திருந்தன . தானே திறந்து வீட்டுக்குள் வந்து முடங்கிப் போனான்.
அவளேதான் விரும்பிப் பேச்சைத் துவங்கினாள் இதுவரை ஒன்று தெரியாதவளாக அடையாளப் படுத்தப் பட்ட கண்ணகிதான் கேட்கிறாள்
�ஏதாவது வியாபாரம் தொடங்கலாமே� என்று .
தலைகுனிந்து அமர்ந்திருந்தவன் அறிந்தவளாக எழுந்து நிற்கும் கண்ணகியைப் பார்க்க திராணியற்றவனாக வெளிப் பார்வை பார்த்தான். கோழி ஒன்று கழுகை விரட்ட கூரை தாண்டி பறக்க முயற்சித்து கேவியது. பறக்க முடியாது போன போதும் கழுகை விரட்டி வெற்றி கண்டது அதன் கேவல்
விட்டு வந்ததெல்லாம் இன்னும் மறந்து விடவில்லை. எங்கிருந்து தொடங்க முதலிலிருந்து தன்னால் தொடங்க முடியுமா? அதற்கு தனி மனப் பக்குவம் வேண்டுமெனப் பட்டது . ஏற்கனவே கண்ணகியின் வெற்றுப் பார்வையில் கூட கூசிப் போய் வெறும் கட்டை விரல் உயரமாய் மாறிப்போனதாய் உணர்ந்திருந்தான். எதைக் கேட்க முதலீடாய்? கேட்க என்ன இருக்கு இன்னும் காலடிச் சிலம்பு தவிர
அவன் கண்கள் காலடி பார்க்கின்றன கழுத்தில் விழுந்த மாலைக்காய் தன் கழுத்திட்ட தாலியை அவனுக்கான காத்திருப்பை உதாசீனம் செய்தவன் , காலடிகளை தன் கண்களால் தழுவுகிறான். அவன் விழி மலர்கள் காலடியில் மேய்வதை பாதங்களை சிலம்பொலிக்க தட்டி உதாசீனம் செய்கின்றாள் புரியாதது போல் நகரத் துவங்குகிறா.ன்
தூரத்து கறவை மாடுகளின் கன்றுகளை அழைக்கும் குரல் அதே போல தோற்றமளிக்கும் னால் அதுவாக இல்லாது கன்றை ஓட்டிப் போக வருபவனைப் பற்றிய எச்சரிக்கைக் குரல் இந்த இரண்டினுக்குமான வித்தியாசம் அதுவோடவே இருப்பவனுக்குத் தான் தெரியும்
கோவலன் என்று என்னுடைய உணர்வுகளோடு இருந்திருகின்றான் இன்று புரியத் துவங்க?.
வியாபாரம் தொடங்கலாமே என்று கேட்டு விட்ட என் குரலின் சவுக்கடி பூவைச் செருகுகையில் முள்ளால் குத்தி விடும் வண்ணம் சுமந்த அந்தக் குரல் அவன் தெரிந்து கொள்ள, கொஞ்சமாவது எனை அறிந்து கொள்ள பிரயத்தனம் எடுத்திருக்க வேண்டும் அந்த பிரயத்தனங்கள் இல்லாத கோவலன் அவனும் அவன் கவலையுமாகவே இருக்க குனிந்திருந்த கண்ணகியின் சிலம்பு அவள் கால் மாற்றி நிற்க சிரித்து வைத்தது.
தொடர்ந்த அவதானிப்பில் சிலம்பு குலுங்க முடியாது எண்ணங்களால் நிறைந்து கனத்துக் கிடந்தது கண்ணகிக்குள் நிகழும் மாற்றங்கள் பணிந்து போவதாய்க் காட்டி எதிர்ப்பின் உச்சகட்டம் வரை அவள் போகும் தருணங்கள் அவற்றை அதுவாகவே கோவலனோ இன்றைய சமூகமோ, நாளை நான் உடைபட்டு மதுரை தீக்கிரையாகிப் போன பின் எழுதப் படப் போகும் காவியத்தின் மூலகர்த்தாவோ உணர்ந்திடுவார்களா ?
கேள்விக்கு விடையில்லாது ஊமையாகிப் போனது சிலம்பு
ஊமையாகிப் போன சிலம்பை கையிலெடுத்த படி அவளும் அவளுக்குள்ளாகவே பேசினாள்.
போ போ போய் சிலம்பை கையிலெடுத்து தெருத் தெருவாக நீ கூவ குரல் கேட்பவர்கள் சிலம்பை பார்ப்பவர்கள் எல்லாம் பார்வையில் எகத்தாளம் கொண்டு கடந்து செல்லும் போது நான் ஊரிலிருந்து கிளம்பிய போது தூக்கிப் பத்திரப் படுத்திய ஒளிக்கீற்று வாள் என் சார்பாக எல்லார் கையிலும் இருக்கும்
உணர்வுகள் ரணம் ரணமாய்க் கீறப்பட்டு கத்தியின்றி யுத்தமின்றி என்று வருங்காலத்தில் எதற்காக எழுதுவார்களோ தெரியாது எனை உணருபவர்கள் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் புரியும் வித்தை அறிந்து கொள்வார்கள் சிலம்பை வாங்குபவன் உன் போகா உயிரையும் சேர்த்து வாங்கிப் போவான்
அவள் மனம் நினைத்து முடிக்க சிலம்பு சிரித்தது கண்ணகி உன் உன்னையறியா உணர்வுகள் நிஜமாகிடக் காணப் போகிறாய் அப்போது எப்படி புலம்பப் போகிறாயோ?
நசுக்கப் பட்டதின் வன்மம் பிரவாகமெடுக்க யார் யார் அடித்துச் செல்லப் படப் போகிறார்களோ ஏடெடுத்து எதிர்த்துப் போன வையை உன்னால், யாரும் பார்க்க முடியாது நீராவியாகப் போகிறாளோ? எப்போதடி குளிர்வாய்? உனை குளிர வைக்க ஒருவனுக்கும் அக்கறையில்லை. குளிர வைக்க நினைக்கும் போதும் அவனவன் தாகம் தீர்த்தலே நடந்து கொண்டிருக்க , அந்த அக்கறையின்மைக்கு மதுரையே சாம்பராகப் போகின்றதே சிலம்பு புலம்ப கண்ணகி சிரிக்கிறாள்
அந்த சிரிப்பு எரிக்கிறது கோவலனை.
யாருக்கும் கேட்டு விட முடியா சிலம்பின் மெல்லிய சிலும்பல் ஓசை கோவலன் மடிக்குள்ளிருந்து அவன் நடந்து வந்த மதுரை ரத வீதியெங்கும் நகர்ந்து போக மீனாட்சி கையேந்திய கிளி சிறகு படபடக்க தன் காதுகளை பொத்தி கொள்ள விழைகிறது. யார் காதும் அறியா சிலம்பின் ஓசை கிளிக்கும் கிளியேந்திய மீனாட்சிக்கும் நாராசமாய் ஒலிக்க கோபத்தில் கிரீடம் நடு நடுங்க பீடம் விட்டிறங்க பார்க்கிறாள் மீனாட்சி.கண்ணகியின் கோபப் பெருமூச்சின் ஒலி சிலம்பின் ஒலியை மறைத்து நிறைய, இடப்பாகம் தந்ததாய் சொன்னவன் அரங்கத்தில் பிரியாவிடை கூட அமர தனியே அமர நேர்ந்துவிட்டதிற்கு தன்னுள்ளிருந்து தனக்கு எழாத கோபம் மறைவாள்வீச்சாய் கண்ணகியுள்ளிருந்து வெளிப்படக் கண்டு தன்னிலை பற்றி மறுபரிசீலனையில் மீனாட்சி.
கோவலனை தண்டித்துவிட வீழ்த்திப் பார்க்க மீனாட்சிக்குள்ளும் சை எழுகிறது னால் அதற்கு முன்னமே கண்ணகிக்குள் இருந்த வன்மம் வன்மத்தின் நெருப்பின் தகிப்பு தெரிய தான் ஒதுங்கிக் கொள்ளத்தான் வேண்டுமென உணர்ந்து கொண்டாள் நிகழப் போவதை நிகழ்த்தப் போகிறவளாய் கண்ணகி இருந்து விடுவது மட்டுமே இந்த வன்மம் வழிந்தோடுவதற்கான வழி என்றுணர மீண்டும் பீடமேறி கிளியேந்தினாள் அமைதியாக, கிளி நெருப்பு வெந்து விடாத இறகுகளுக்காக என்ன செய்வதென்று தவமிருக்க
சிலம்பு விற்க வந்தவன்
எதுவும் அவன் சொந்தமில்லாது போக
உயிரற்ற உடலாய் கீழே கிடந்தான்
கழுத்தறுத்த கத்தியிலிருந்து இரத்த திவலைகள் மாணிக்கங்களாய்
சிதறித் தெறித்தன. அவன் தூக்கி வந்த சிலம்பு இன்று பாண்டியன் அரண்மனைச் சிறையிருந்தது. நாளை நாங்கள் இதே இரத்த துளிகளாய் சிதறிப் போவோம் என்றறியாது.
*
இதோ செய்தி காலை விடியலாய் வந்து காதுகளில் நெருப்பள்ளி ஊற்றி எரியவிட்டுப் போகின்றது
�அய்யோ அய்யோ�
அரற்றுகிறாள் இப்படி அநியாயமாய் பழியிட்டு கொன்று விட்டர்களே வெறும் திருட்டுப் பட்டம் சுமத்திக் கொன்று அதுவும் தவறுதலாக சுமத்திக் கொன்றதாலேயே நாளை அவன் தியாகியாகி இரக்கத்துக்கு உரியவனாகிப் போவானே. இரக்கத்துக்கு உரியவனா கோவலன் என் உணர்வுகளை தினம் தினம் அறுத்தறுத்து சாகவும் விடாது வாழவும் விடாது செய்தவனை இப்படி ஒரே வெட்டில் என் பாடுகளை நான் முழுவதும் உணர்த்தி விட்டேன் என்று திருப்தி கொள்ளாத நிலையில் என் பழிதீர்த்தலை தியிலேயே பாழ் செய்த பாண்டியனே… ….
அதற்கு மேல் மூச்சுச் வாங்கியது. சிந்தனைகள் கோர்வையாக இல்லை . எடுத்தாள் இன்னுமொரு சிலம்பு நெருப்பாய் எரிந்ததை கையிலேந்தியபடி
அவைக்கு நினைத்ததை எல்லாம் கொட்டி விடத் தேவையில்லாத நிலை இன்று என் பழி தீர்த்தலை முடமாக்கி விட்ட பாண்டியன் அவையில் என்ன சொல்லி நீதி கேட்க
அய்யோடா என் பழி தீர்த்தலை தீர்த்து விட்டாயே என்றா? கால்கள் நடக்க நெஞ்சு தீப்பிடித்தெரிந்தது
சிலம்பைச் சிதறடித்து அவனை கள்வனல்ல என்று நிரூபிக்க சாத்தியமாக காதலை திருடியவனாக எதை உடைத்து நிரூபிக்க சிந்தனையில் அதை நிகழ்த்த விடாது கொன்று விட்ட பாண்டியன் மேல் கோபம் பற்றியெழ. இதுவரை கோவலன் அவன் பார்க்காது நிராகரித்திருந்த காதலை தனக்குள் பொத்தி வைத்திருந்த காதலை, காதல் சுகமானதாக மட்டுமே சொல்லிப் போன நிறுவிப் போன கவிஞர்கள் காதலர்கள் மக்கள் என மண்ணில் எல்லாரும் பார்க்க அவள் அவளுள்ளிருந்து எடுத்து எறிய மதுரை பிரவாகமாய் எரியத் துவங்கியது அனல் வாதம் புனல் வாதம் பார்த்த மதுரையோ காதலின் புது இருப்பையும் அதன் நெருப்பையும் முதன் முதலாய் உணரத் துவங்கியிருந்த போது கருகத் துவங்கியது உணர்ந்தவர்கள் எல்லாரும் சாம்பலாக சாம்பல் தான் சாட்சியாக நின்று போக திரும்பி பார்க்க விரும்பாது நீர் தேடி நடந்தாள் குளிர் அவளுக்கு தேவையாயிருக்க , தன்னிலிருந்த நெருப்பை அறிந்தவள் நடந்த வழியெல்லாம் இப்போது றொன்று ஓடியது
நிராகரிக்கப் பட்ட காதல்களுக்காக பூக்களை புதுத் தனல் ஏந்த பழக்கி விடத் தீர்மானித்து ஒவ்வொரு விடியலிலும் கனலேந்தி கிழக்கிலிருந்து மேற்கு வரை காலை துவக்கிய பயணத்தை விடாது நிகழ்த்தி ஒவ்வொரு வெக்கையின் போது உணர்த்தப் புறப்பட்டாள்
இதோ இன்னுமொரு விடியல் கண்ணகி சூரிய அக்கினி சட்டியேந்தி நடந்து வரத் துவங்கி விட்டாள் வெட்டுப் பட்ட கோவலன்களின் இரத்தத் துளிகளை நெய்யாக்கி பழி தீர்க்க விடாது செய்த பாண்டிய கரங்களை விறகாக்கி யாரேனும் கோவலன்கள் இருப்பின் விழிக்கையிலேயே , சூரிய வணக்கத்திலேயே அதன் வெளிச்சத்தில் முதலில் உங்கள் வீடுகளின் மூலைகளிலும் தீப்பெட்டிகளுக்குள்ளும் பார்ப்பாரற்று ஒதுங்கிக் கிடக்கும் காதல்களை சீராட்டத் துவங்குங்கள்
பாண்டியன்கள் இருப்பின் மனைவிக்கு கால் சிலம்பு வாங்கித் தந்து அலங்காரப் பதுமையாய் உட்கார வைத்து பெருமிதத்தில் மூழ்கடித்து விட நினைக்கையில் அந்த மூழ்கடிக்கும் நதிகளை வியாக்கும் நெருப்பாய் கண்களில் கை ஏந்திய சூரிய நெருப்புத் துளி மாறுமென உணருங்கள்
மாதவிகளும் மணிமேகலைகளும் இல்லாத மண்ணாய் அந்த நெருப்பு இந்த பூமியை சுட்டெடுக்கும்.
எதிலும் கரைந்து போகாத பானைகளால் மாறாத தாகங்கள் தீருமினி
*
தீராத தாகமோடு தான் நான் எங்கேயோ பயணித்து கொண்டிருக்கின்றேன். நான் நகர்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.ஆனால் எங்கு எப்படி என்பது தான் புரியாததாய் . கண்ணுக்கு முன்னால் பிரளயங்களாய் இருள் நகர்ந்து கொண்டிருக்க, ஏதோ ஒன்று இறுகக் கட்டிக் கொண்டிருந்தது மூச்சுத் திணறலோடு வந்து விழுகின்றேன் என் மேல் ஈரம் படர்ந்து கிடக்க, நான் வீழ்ந்த இடத்தின் மணல் ஒட்டிக் கொள்கின்றது.விரித்த தலையும் ஏந்திய சிலம்புமாய் இருந்த சிலையை பேரலைக்கு முன்னரே கால வெள்ளம் அடித்து போயிருந்தது. கால வெள்ளம் தூக்கிச் சென்றதா? அதுவும் கண்ணகியே தன்னை , தன் கோபத்தை அதுவாக உணராதவர்களிடமிருந்து துண்டித்துக் கொண்டாளா? கேள்விக்கு பதில் கிடைக்க , மீண்டும் நான் விழுங்கப் படத்தான் வேண்டுமா?எழுந்து ஒட்டிய மணல்கள் வீசிய காற்றில் உதிர நடக்கின்றேன். சிலைக்குள் இருந்த வேட்கை எனக்குள் எரியத் துவங்கியது துளி இரத்தம் சிந்தாது எரியும் வெக்கையில் ஆவியாக்கி போகும் காளியாய் அழிக்கப் படலாம் அரக்கர்கள். முடிந்தால் காணாமல் போகுபவர்கள் பற்றிய கணக் கெடுப்பு நிகழ்த்திப் பாருங்கள்.கால்கள் நடக்க உடல் வீடு வந்து சேர்ந்திருந்தது. மல்லிகை பூவுடன் வீடு வந்திருந்த கணவர், பாண்டியனாய் தெரிய சிரித்தபடி பூவோடு சில உணர்வுகளையும் இன்றிலிருந்து புகுத்திவிட திட்டமிடுகின்றேன்
mathibama@yahoo.com
- மருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)
- ஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்
- காரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி
- உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு
- இலை போட்டாச்சு ! -20 அடை – இரண்டாம் வகை
- தண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்
- நான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை
- கடிதம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10
- சுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
- தூர்மண(¡) குச்சு
- கடித இலக்கியம் – 48
- சிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு
- பெண் எழுத்து
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4
- இலை போட்டாச்சு ! – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை
- வால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3
- காதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் !
- தைத்திருநாள் விழா கவியரங்கம்—–3
- கவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்
- நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி
- என் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்
- அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…
- மடியில் நெருப்பு – 29
- நீர்வலை – (15)
- மறை வாள் வீச்சு