This entry is in the series 20090731_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


தேக்கா
எல்லாருக்கும் நீ
ஈரச் சந்தை
எங்களுக்கு நீ
ஈரத் தந்தை
எங்களின்
தலைமுறைகளைத்
தாங்கிய தாய்

காலம் தின்றது
உன் பேரழகை
சகிக்குமா இந்தச்
சாதனை அரசு?

மொத்தமும் உரித்துவிட்டு
புதிய தோல் ஒட்டவேண்டும்
அதற்காக
புலம்பெயர்த்தது கடைகளை
புலம் பெயர்ந்தோம்
சிரமங்களுக்கு
சிரிப்பு மருந்திட்டோம்
பூக்களைக் காக்க
முட்களானோம்
இழப்புகள் தாக்கின
இடிதாங்கி யானோம்
பேரின்ப மன்றோ
பிரசவ வேதனை

இதோ
தங்கமகள் நெற்றியில்
குங்குமப் பொட்டாய்
தேக்கா

எங்கள் வேள்விகள்
முடிந்தது ஆகஸ்டு1, 2009ல்
எங்களை
அள்ளிஅணைக்க
ஆனந்தக் கண்ணீரால்
அழைக்கிறது தேக்கா

rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation