மறக்கப்பட்டவர்கள் : மலேசியாவில் ஏழைகள் இந்திய வம்சாவளியினரே

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

சாந்தா ஊர்ஜிதம்


பாஞ்சாலை வெங்கட்ராமன் என்ற விதவைப் பெண்மணிக்கு வயது 60. செலாங்கோர் மானிலத்தில் முன்னாள் ரப்பரத் தோட்ட்டத்தில் தன் மகன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். 1993-ல் ரப்பர் எஸ்டேட் வீடுகள் கட்டும் ஒரு கம்பெனிக்கு விற்கப் பட்டுவிட்டதால் இவருடை வேலை போய் விட்டது. ரப்பர்க் கம்பெனிகள் தம் தொழிலை நிறுத்திவிட்டாலும் , ஊழியர்களுக்கு மாற்று வீடுகள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்பது சட்டம். ஆனால் பாஞ்சாலைக்கு வீடு கிடைக்கவில்லை. வாக்களித்தபடி, வீடு கிடைக்கும் வரையில் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்கிறார் பாஞ்சாலை.

பாஞ்சாலையின் கதை மலேசியாவின் பொருளாதார வெற்றியின் இருண்ட பகுதி. இணக்கமான இனங்களின் வாழ்வும் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு என்று சொல்லப்பட்டாலும் இந்திய வம்சாவழியினர் வீடு, கல்வி, வேலைகளைப் பொறுத்தவரை பின் தங்கியே உள்ளனர். மலேசியாவின் இந்தியத் தொழிலாளர்களி 54 % பேர்கள் தோட்டத்திலோ அல்லது நகர்ப்புறப் பணியாளர்களாகவோ பணி புரிகின்றனர். அவர்களுடைய சம்பளம், கால மாறுதலுக்கேற்ப உயரவில்லை.பாஞ்சாலையும் அவர் கணவரும் 1960-ல் ரப்பர்த்தோட்டத்தில் 250 ரிங்கிட் மாதச்சம்பலம் பெற்றார்கள் (கிட்டத்தட்ட 500 ரூபாய்). முப்பது வருடங்கள் கழித்து இதற்கு மேல் ஐம்பது ரிங்கிட்டுகளே அவர்கள் சம்பளம் உயர்ந்துள்ளது.

மற்ற இனக்குழுக்களைக் காட்டிலும் இந்திய வம்சாவழியினர் எல்லா விதத்திலும் பின் தங்கியுள்ளனர். மொத்த ஜனத்தொகையில் இவர்கள் 7 சதவீதமே. ஆனால் வன்முறைதடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களில் 63 சதவீதம் பேர்கள் இந்திய வம்சாவழியினரே. பிச்சைக்காரர்களில் 41 சதவீதம், சிறுவரைத் துன்புறுத்துவோரில் 20 சதவீதம் இவர்கள் இருக்கிறார்கள். தேசிய ஆரம்பக்கல்வி தேர்வுகளில் மிகக் கடைசியாய் இவர்கள் உள்ளனர். இந்திய வம்சாவழியினரின் குழந்தைகளில் 12-ல் ஒரு சிறுவர் ஆரம்பப் பள்ளிக்கே செல்வதில்லை. அரசியல் விஞ்ஞானியான பி. ராமசாமி இவர்கள் ‘புதிய பிற்படுத்தப் பட்ட வகுப்பினராய் ஆகி விட்டனர் என்று குறிப்பிடுகிறார்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் மலாஉகளுக்கும், பூமிபுத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட உள்நாட்டினருக்கும் ஒரு முன்னுரிமைத் திட்டம் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. ‘பூமிபுத்திரர்களுக்கு பொருளாதார வசதிகள் தரவேண்டி சிறுபான்மையினர் ஓரங்கட்டப் பட்டுவிட்டனர் ‘ என்கிறார் ராமசாமி. அரசுப் பணிகளில் இந்திய வம்சாவழியினர் நல்ல எண்ணிக்கையில் இருந்தது போக இன்று, புதிய பொருளாதாரக் கொள்கையால் இவர்கள் பின்னடைவு பெற்று விட்டனர். சீனர்களிடம் பொருளாதாரமேன்மை இருப்பதால் புதிய பொருளாதரக் கொள்கை அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இந்தியர்களிடன் பொருளாதார பலம் இல்லை. அரசியல் செல்வாக்குச் செலுத்தும் படியான பாரிய எண்ணிக்கையிலும் இவர்கள் இல்லை. இதன் பலன் : இனப் பிரிவு இப்போது பொருளாதாரப் பிளவு வடிவம் கொண்டுள்ளது.

இருந்தும் இந்தப் பிரசினையை எபப்டித் தீர்ப்பது என்று கருத்துகளில் ஒற்றுமை இல்லை. சரியான கவனிப்பைப் பெறாத தமிழ் மொழிப் பள்ளிகள் வசதிகள் பெற வேண்டும் என்கிறார் ராமசாமி. பிறர் இந்தியக் குழந்தைகள் முதலிலிருந்தே மலாய் மொழியில் பயிற்றுவிகப் பட்டால் பின்னால் விளையும் பின்னடைவைத் தவிர்க்கலாம் என்கிறார்கள். சுகி என்ற சமூக விழிப்புணர்வு இயக்கம் தேவைக்கேற்ப முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது. மலேசியன் இந்தியன் காங்கிரஸ் என்ற அமைப்பின் சொல்படி சிறுபான்மை மாணவருக்கு பண உதவிகளும் , கல்விக் க்டன்களும் வழங்கி வருவதாக அரசு கூறுகிறது. பாஞ்சாலைக்கு இது ஊக்கம் தரவில்லை. தனக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் உதவவில்லை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். அவருடைய குடும்பமும், இன்னும் 13 குடும்பங்களும் இணைந்து புதிய வீடுகளுக்கான ஓர் இயக்கம் தொடங்கியுள்ளனர். சமூக சேவகர் மாரிமுத்து நடேசன் சொல்வது ‘ மலேசியாவின் மறக்கப்படா மக்கள் இந்தியர்கள். ‘ இந்த ஒரு குழு மட்டும் அந்த நிலையை மாற்றிவிட முடியாது.

****

Series Navigation

சாந்தா ஊர்ஜிதம்

சாந்தா ஊர்ஜிதம்