மனுஷ்யபுத்திரன்களும் மண்குதிரைகளும்.

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

ருத்ரா


இலக்கியம்

விளம்பரம் எனும்

வெறிக்காட்டுக்குள்

புதைந்து போனபின்

கண்களை துணியில்

கட்டிக்கொள்வதற்கு

தேவையில்லாத

இந்த

கும்மிருட்டில்

கவிதையைத் தேடி

நீதிதேவதையின்

தராசு ஒன்று

பயணம் போனது.

அப்போது

வழியில் ஒரு மைல்கல் பட்டு

இடறிவிழுந்தது.

அந்தக் கல்

‘குமுதம் ‘ 30.6.03 தேதியிட்ட இதழ்.

‘நாச்சார் மட விவகாரங்கள் ‘

என்ற

சிறுகதை பற்றிய

ஒரு தீ பற்றியிருந்தது பற்றி

எழுதப்பட்டிருந்தது அதில்.

அதிரடி எழுத்துக்கள்

அடாவடி நடையில்

‘ஊளையிட்ட ‘ குரல்கள் தான்

அந்த கதையில்

அதிகம் கேட்டது.

நியாயப்பயணம் புறப்பட்ட

தராசுத்தட்டுகள்

ஆடிக்குலுங்கின.

ஒரு தட்டில் மனுஷ்யபுத்திரன்கள்.

இன்னொருதட்டில்

மண்குதிரைகள்.

அந்தக் கட்டுரை

படிக்கப்பட்டிருந்த போது

நேர்மை செறிந்த

வாசக வெள்ளம்

கரைபுரண்டு ஓடியிருந்தது.

அந்த தள்ளு முள்ளுகளின்

தட்டு தடுமாறல்களில்

மனுஷ்யபுத்திரன்களின் தட்டு

மிக மிகத் தாழ்ந்து கிடக்க

மண்குதிரைகளின் தட்டு

மிகவும் உயர்ந்து நின்றது.

ஆம் !

குதிரைகள்

கரைந்து போயின.

அந்த ஆபாசக்

குளம்பொலிகளும்

இறந்து போயின.

சொல்லில்

பொருள்

கன்னிக்குடம்

உடைக்கும் போதுதான்

அந்த

‘சொல்லின் ‘

சவ்வு கிழிந்து

‘புதிது ‘

பிரசவமாகிறது.

மலடு தட்டிப்போன

இருட்டுப்பிழம்பின்

‘ஸேடிசம் ‘ தந்த

மரணக்குழியிலிருந்தா

எழுத்துக்களுக்கு உயிர் பூச

இவர்கள்

இந்த மத்தாப்புகளை கொளுத்துவது ?

ஊனம் என்பது

இறைவன் என்று

நம்பப்படுகிற

கண்ணுக்குதெரியாத

இயற்கையின்

டி.என்.ஏ…ஆர்.என்.ஏக்களின்

ஒரு விளையாட்டு.

இதை ‘ஸ்போர்டிவ் ‘ ஆக

எடுத்துக்கொள்வதே

இன்றைய

21ஆம் நூற்றாண்டின் நாகரிகம்.

ஜ ‘ன்களால் நடத்தப்படும்

அந்த ஒலிம்பிக் விளையாட்டில்

ஓடுவது எல்லாமே

தங்கப்பதக்கங்கள் தான்.

வேடிக்கை பார்ப்பதோ

ஈயம் பித்தளையின்

இந்த பே ‘ரிச்சை ‘ப்பழங்கள் தான்

இப்படியிருக்கும்போது

எப்படி

நாகரிகம் தடம்புரண்ட

அந்த நச்சுக்கதை

முகம் காட்டியது ?

அதுவும்

முகமூடிகள் மாட்டிக்கொண்டு

எச்சில்கள் துப்பின.

விளம்பர பரபரப்பு வேண்டும்

என்று

நமைச்சல்களையும்

பிறாண்டல்களையும்

வைத்து

நிப்பு முனையில்

இரத்தம் கசிய வைப்பவர்கள்

இலக்கியத்தையும் அல்லவா

சிலுவையில்

அறைந்திருக்கிறார்கள்.

ஊனமுற்ற

ஒரு கவிஞன் பாத்திரத்துக்கு

கொழுத்த விளம்பரத்துடன்

ஒரு மெகா சீரியல்

வாய்ப்பு நீட்டிய போது

என் கவிதை மட்டும்

அங்கு

உச்சரிக்கப்பட்டால் போதும்.

என் ஊன்றுகோல்களுக்கு

அந்த ‘ஸ்பான்சர்கள் ‘

தங்கப்பூண்

பிடித்து தரவேண்டியதில்லையே

என்று

நயத்தக்க நாகரிகத்துடன்

மறுத்த

ஒரு கவிதை நெஞ்சமல்லவா அது !

ஒரு ‘புளிய மரத்து ‘ ராமசாமியின்

முதுகில் ஏறி

பேயோட்டகிளம்பிய

மண்குதிரைகள்

மோனம் சுழித்து ஓடும்

அந்த ஊழிப்பிரளய தாகத்துக்

கவிஞனின் முன்

கரைந்து கரைந்து

முகமிழந்து போயின.

மெல்லிய பஞ்சு போன்ற

காதலை

கவிதை எழுதுவற்கு

தீவட்டியை

எழுதுகோல் ஆக்கும்

தடால் அடிக்காரர்களிடம்

தாமரைப்பூ தடாகத்தையா

எதிர்பார்க்க முடியும் ?

கருத்து ஊனம் கொண்ட

இவர்களுக்கு

ஏர்வாடிச்சங்கிலிகளில் கூட

‘காப்ப ‘கம் கிடைக்காது.

வெறும் வார்த்தைகளின்

பிணம் தூக்கிகளே !

அந்தக் கவிஞன் போல்

ஒரு உயிர்த்துடிப்பான சொல்லை

உங்களால்

முளைக்கச்செய்யமுடியுமா ?

அந்த ‘வானவில்லை ‘

பச்சைக்குதிரை தாண்டி

விளையாட நினைக்கும்

மண்குதிரைகளே !

இந்தக்

கனமழையில்

கரைந்து போகுமுன்…

பாவம்..

உங்கள்

கனவுகளைக்

காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

===ருத்ரா
epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா